வியாழன், 21 ஜூன், 2018

சர்வதேச யோகா தினம் - சாகச யோகா செய்து முப்படை வீரர்கள் அசத்தல்!

டேராடூன்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முப்படையைச் சேர்ந்த வீரர்களும் பல்வேறு சாகச வடிவில் யோக செய்து அசத்தியுள்ளனர். 
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜுன் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான யோகா தினம் இந்தியா முழுவதும் வியாழக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது

இதன் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தார்.

பிறகு பேசிய மோடி, இன்று உலகம் முழுவதும் யோகா பரவியதோடு, உலகின் மிகப்பெரிய இயக்கமாக யோகா மாறியுள்ளது.

டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை, ஜகார்தா முதல் ஜோகன்ஸ்பர்க் வரை எல்லா நாடுகளிலும் யோகா உள்ளது. 

உலகின் அனைத்து நாடுகளையும் யோகா தழுவியுள்ளது. அனைத்து நாடுகளிலும் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டும் வருகிறது.

இதில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

இது உலக சாதனை புத்தக மான கின்னஸ் புத்தகத்தில் புதிய யோகா சாதனையாக இடம் பெற உள்ளது என்றார்.

இதே போல் சர்வதேச யோகா தினத்தை முப்படை வீரர்களும் பல்வேறு சாகசங்கள் வடிவில் யோகா செய்து காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.

இந்தியன் ஏர் போர்ஸ்: 

இன்றைய யோகா தினத்தை இந்திய ஏர் போர்ஸ் படை வீரர்கள் கொண்டாடியுள்ளார்கள். யோகாவின் முக்கியத்துவத்தையும், அதன் பலனையும் மக்களுக்கு புரிய வைக்கும் விதமாக, இந்திய ஏர்  போர்ஸ் படை வீரர்கள் 15,000 அடி உயரத்தில் யோகா செய்து அசத்தியுள்ளனர். 

இந்திய கடற்படை: 

இந்திய கடற்படை வீரர்கள் ஐஎன்எஸ், ஜோதி கப்பலில் ஜாப்பனிஸ் கடற்படை வீரர்களோடு யோகா செய்தனர். 

இந்திய ராணுவம்: 

இந்தோ-திபெத்திய எல்லை படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்த யோகாவானது கடற்மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் உள்ள லடாக் எனும் பகுதியில் செய்யப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக