சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒப்போ, இன்று அதன் துணை பிராண்ட் ஆன ரியல்மீ (Realme) வரிசையின் கீழ், ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மீ 1 என்கிற (Realme 1) பெயரைக்கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதன் வடிவமைப்பை பார்த்தல், இது ஒரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள். ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் வெளியீடானது, ரூ.15,000/-க்குள் கிடைக்கும் அத்துணை ஸ்மார்ட்போன்களையும் ஒரு வழி செய்து விடும் என்பது போன்றே தெரிகிறது. அதன் அம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.
டிஸ்பிளே.! அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 1 ஆனது, 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சு கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.
128 ஜிபி வரை.! 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் போன்ற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது. மூன்றிலுமே, 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. ரியல்மீ 1 ஆனது, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத்தள்ளும் வண்ணம் (செயல்திறன் அடிப்படையில்), ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக