நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்கள் : பஸ் நிலையத்திலேயே டிக்கெட் வினியோகம்
நாகர்கோவில்: நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் விடப்பட உள்ளன. இந்த பஸ்கள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பிடத்தை கண்டறியும் குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்), வேக கட்டுப்பாட்டு கருவி, கேமரா உள்ளிட்டவற்றுடன் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பயணிகள் அமருவதற்கு வசதியாக சீட் வடிவமைப்புகள், அவசர கால வழி உள்ளிட்டவையும் உள்ளன. அவசர கால வழி அமைந்துள்ள பகுதியில் இருக்கைகள் இருக்காது. மேலும் லக்கேஜ் வைப்பதற்காக தனி கேபின் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது.
டிரைவர் இருக்கை அருகே போதிய காற்றோட்டத்திற்கு மின் விசிறி, விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், முன் செல்கிற வாகனங்களில் மோதுவதை தவிர்க்கும் வகையில் தானியங்கி, 'பிரேக்' வசதி ஆகியவையும் உண்டு. டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்து ஓட்டினாலோ, டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து பஸ் விலகி ஓடினால் எச்சரிக்கை செய்யும் 'அலாரம்' அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக தானியங்கி கதவுகள், 'ரிவர்ஸ் கேமரா' அமைப்பும் இடம் பெற்றுள்ளது. சீட் எண்ணிக்கை 57ல் இருந்து 52 ஆக குறைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்துக்கு மொத்தம் 52 பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றில் 44 பஸ்களுக்கு பாடிகட்டும் பணிகள் நடைபெற்றன. இதில் முதற்கட்டமாக 4 பஸ்கள் நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 புதிய பஸ்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் வர உள்ளன. இவ்வாறு வரக்கூடிய நவீன ரக பஸ்களை கண்டக்டர் இல்லாத பேருந்துகளாக இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக நாகர்கோவில் திருநெல்வேலி இடையே இப்போது இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்களுக்கு, பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கட்டண உயர்வுக்கு பின் சராசரியாக ஒவ்வொரு பஸ்களிலும் குறைந்த பட்சம் 35 ஆயிரத்தில் 40 ஆயிரம் வரை கிடைக்கிறது. நாகர்கோவில் திருநெல்வேலி இடையே தற்போது 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 3.45 மணியில் இருந்து என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பஸ் , நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்டு செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து செல்லும் என்ட் டூ என்ட் பஸ் சுமார் 1 மணி நேரம் 10 நிமிடத்தில் திருநெல்வேலியை சென்றடைய வேண்டும். ஆனால் நாகர்கோவிலில் இருந்து காவல் கிணறு விலக்கு வரை போக்குவரத்து நெருக்கடியாக இருப்பதால் என்ட் டூ என்ட் பஸ்களின் பயண நேரமும் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது.
என்ட் டூ என்ட் பஸ்கள் பெரும்பாலும், நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் போதே பயணிகள் இருக்கைகள் ஓரளவு நிரம்பி விடுகின்றன. எனவே முதற்கட்டமாக கண்டக்டர் இல்லாத பஸ்கள், நாகர்கோவில் திருநெல்வேலி இடையே இயக்கப்பட உள்ளன. பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் பால பணிகள் முடிவடைந்த பின்னர், நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயங்கும். இந்த பஸ்களுக்கான டிக்கெட்டுகள், வடசேரி பஸ் நிலையத்தில் 2வது பிளாட்பாரத்தில் உள்ள கவுண்டரில் வழங்கப்படும். இதற்காக சிறப்பு கவுண்டர் வசதியும் செய்யப்படும். ஒவ்வொரு டிக்கெட்டிலும் சீட் நம்பர் இருக்கும். அந்த நம்பர் வரிசைப்படி பயணிகள் அமர வேண்டும். சீட் முழுவதும் நிரம்பியவுடன், பஸ் புறப்பட்டு செல்லும். ஏற்கனவே பெங்களூர் உள்ளிட்ட சில மாநகரங்களில் கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கப்படுகின்றன. இடையில் எங்கும் நிற்காது என்பதால், வேறு யாரும் ஏறவோ, இறங்கவோ முடியாது. இந்த பஸ்கள் அனைத்தும் தானியங்கி கதவுகள் கொண்டவை ஆகும். பரிட்சார்த்த முறையில் 2 பஸ்கள் மட்டும் முதலில் கண்டக்டர் இல்லாத பஸ்களாக இயங்கும். பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக