நாளை முதல் 4 நாட்கள் இலவசம்.! சென்னை மெட்ரோ நிலையத்தில் இலவசம்.! அரசின் புதிய திட்டம்.!! பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளவும்.!!!
ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், நான்கு நாட்கள் யோகா, தியான பயிற்சி இலவசமாக நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி சுத்தவெளி சபை, தியான பயிற்சி மையத்துடன் இணைந்து, இப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
சென்னையில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, மெட்ரோ ரயில் நிலையங்களில், நான்கு நாட்கள் யோகா, தியான பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் 3 வயது முதல் அனைத்து வயதினரும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த, ஏ.என்.தனசேகரன் நேரில் பயிற்சி அளிக்க இருக்கிறார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாளை ஜூன் 21 முதல்ஜூன் 24 வரை நான்கு நாட்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில், யோகா மற்றும் தியான பயிற்சிகள் நடத்தப்படுகிறது. காலை 6:30 மணிக்கு ஆலந்துார், சைதாப்பேட்டை, வடபழனி, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
மேலும், எழும்பூர், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., அண்ணாநகர் கோபுரம், ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், மாலை 6:00 மணிக்கு யோகா, தியான பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக