செவ்வாய், 12 ஜூன், 2018

நெடுஞ்சாலைகள் அமைக்க மத்தியஅரசு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு? சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைவது உறுதி

நெடுஞ்சாலைகள் அமைக்க மத்தியஅரசு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு? சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைவது உறுதி

சென்னை:
மிழகத்தில் பல நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.75,000 கோடி ஒதுக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், சென்னை சேலம் இடையிலோன 8 வழிச்சாலை திட்டமிட்டப்படி அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கூறினார்.
சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடர்ந்த கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, பசுமை வழிச் சாலை மக்களுக்கு சோறு போடுமா என்று திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, சென்னை -சேலம் இடையிலேயான  8 வழிச்சாலை அனைவரின் பயன் பாட்டுக்குதான் அமைக்கப்பட உள்ளது.  சென்னை- சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை கட்டாயம் அமைக்கப்படும், 8 வழிச்சாலை திட்டம் குறித்து ஒருவரும் குறை சொல்லக் கூடாது என்றவர்,  தமிழகத்தில் பல நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.75,000 கோடி ஒதுக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,  தூத்துக்குடியில் நடந்தது போல் சேலம் போராட்டம் மாறி விடக் கூடாது என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச்சாலைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக