ஞாயிறு, 24 ஜூன், 2018

ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது; தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை: ஆளுநர் எச்சரிக்கை

ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது; தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை: ஆளுநர் எச்சரிக்கை

மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆளுநர், பல திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாமக்கல்லில் நடத்திய ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர்

இதையடுத்து ஆய்வு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த ஆளுநருக்கு உரிமை உள்ளது. தமிழக அரசின் எந்த துறையையும் ஆளுநர் இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. மக்கள் நலனுக்காக இது போன்ற ஆய்வு தொடரும்.
பல்வேறு மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. மேலும் ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பிரிவு 124-ன்கீழ் வழக்கு தொடர்ந்து 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது. 
மாநிலத்தின் செயல்பாடுகள், நிறைகுறைகளை பற்றி குடியரசு தலைவருக்கு மாதந்தோறும் அறிக்கை சமர்க்கவேண்டும் இதற்கு ஆய்வு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் இதுவரை அரசின் எந்த துறையையும் விமர்சித்தது இல்லை என்றும்அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநில அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கடமையும் ஆளுநருக்கு உள்ளது என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக