வெள்ளி, 30 மார்ச், 2018

ரிலையன்ஸ் அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை



ரிலையன்ஸ் அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சேவை வழங்கப்பட உள்ளது. டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது.
 வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது.
அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன. இந்நிலையில், பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. இதையடுத்து, அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜியோ நிறுவனத்தில் 17 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜியோ பிரைம்
ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி ஏற்கெனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 28 மார்ச், 2018

அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா மகன் நாசர் திருமணம் நாளை நடக்குமா? ஏமாற்றியதாக பெண் ஜாக்கி புகார்..!!!*_

அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா மகன் நாசர் திருமணம் நாளை நடக்குமா? ஏமாற்றியதாக பெண் ஜாக்கி புகார்..!!!

_அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திருமணம் நாளை காரைக்குடியில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மணமகன் நாசர் மீது ரேடியோ ஜாக்கி பிரபல்லா சுபாஷ் என்ற பெண், தன்னை ஏமாற்றிவிட்டதாய் புகார் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது._

_சென்னை மடிப்பாக்கம் ராம்நகரைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா._

_இவர், சென்னை காவல்துறை ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார்._

_அதில், "நான் வானொலியில் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறேன். 2015-ம் ஆண்டு சிறந்த தொழில் முனைவோராகத் தேர்வு செய்யப்பட்டு எனக்கு பரிசு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் அன்வர்ராஜா எம்.பி-யின் மகன் நாசர்அலி எனக்கு அறிமுகமானார்._

_அதன் பிறகு, சைதாப்பேட்டையில் உள்ள என்னுடைய அலுவலகத்துக்கு அடிக்கடி நாசர் அலி வருவார். என்னிடம் அவர் அன்பாகப் பேசினார். தான் ஏற்கெனவே ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக என்னிடம் தெரிவித்தார்._ _திருமண வாழ்க்கைக்குப் பிறகு மன நிம்மதியில்லை என்று என்னிடம் தெரிவித்தார். அப்போது, எனக்கும் திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் வாழ்வதாக அவரிடம் தெரிவித்தேன்._

_இதனால் நாங்கள் இருவரும் மனதளவில் ஒன்றானோம். அதன் பிறகு, எனது அலுவலகத்திலேயே அவர் தங்கினார். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். இதனால் கணவன் மனைவிபோல வாழ்ந்தோம். நான் இந்து என்பதால் என்னை மதம் மாறும்படி தெரிவித்தார். இதை ஏற்று நானும் மதம் மாறினேன்._

_அதன்பிறகு, வடபழனியில் உள்ள வீட்டில் வசித்தோம். பிறகு, சைதாப்பேட்டைக்கு குடிபெயர்ந்தோம். சைதாப்பேட்டை முகவரி மூலம் அவர் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆதார் அட்டையைப் பெற்றார்._

_இந்த நிலையில் தொழில் தொடங்க என்னிடம் பணம் கேட்டார். அவர் மீதுள்ள அன்பால் நகைகளை அடகு வைத்து, கையிலிருந்த ரொக்கப்பணம் என 30 லட்சம் ரூபாய் வரை கொடுத்தேன். மேலும் பணம் தேவைப்பட்டதால் கடன் வாங்கி 20 லட்சம் ரூபாய் வரை அளித்தேன்._

_ஆனால் கடந்த ஆறுமாதங்களாக நாசர்அலியின் நடவடிக்கைகள் மாறின. இதனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தினார். இதையடுத்து அன்வர்ராஜா எம்.பி-யிடம் முறையிட்டேன். அப்போது அவர் விரைவில் திருமணம் செய்து வைப்பதாக உறுதி கூறினார்._

_ஆனால், திருமணம் செய்து வைக்காமல் 'நாசர்அலியை இனி நீ தொந்தரவு செய்தால் உயிருடன் இருக்க மாட்டாய். நான் யார் என்பது உனக்குத் தெரியும்' என்று அன்வர்ராஜா தரப்பினர் மிரட்டினர். வரும் 25-ம் தேதி (நாளை) நாசர் அலிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. என்னை ஏமாற்றிய நாசர் அலி மற்றும் மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்._

_இதுகுறித்து அன்வர் ராஜா எம்.பி.யின் பதில்  அவர், "என் மகனும் அந்தப் பெண்ணும் சினிமா துறையில் இருந்ததால் நண்பர்களாகப் பழகினார்கள். அந்தப் பெண், என்னைக்கூட மிரட்டியிருக்கிறார். என்னுடைய மகனிடம் பணம் கொடுத்ததாகப் புகாரில் கூறியிருக்கிறார். அதற்காக ஆதாரம் இருந்தால் காவல்துறையினர் எங்களிடம் விசாரிக்கட்டும். அந்தப் பெண்ணிடம் 50,000 ரூபாய்கூட கிடையாது. அவர் எப்படி 50 லட்சம் கொடுத்திருப்பார்" என்றார்._

_இதற்கு பிரபல்லா சுபாஷ், " எனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கே மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் தருகிறேன். ஆனால் என்னிடம் 50 ஆயிரம்கூட கிடையாது என அன்வர்ராஜா கூறுகிறார். நான் பணம் கொடுத்தது உண்மை" என்றார்._

_*இந்த நிலையில், அவர் வீடியோ பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "நாசர் அலி ஏற்கெனவே பெண்களை ஏமாற்றி பணம் பறித்திருக்கிறார். என்னையும் ஏமாற்றியிருக்கிறார். அவருக்காக மதம் மாறினேன். ஆனால் ஜமாத்தில் என் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள்" என்று புகார் தெரிவித்திருக்கிறார்.*_


செவ்வாய், 27 மார்ச், 2018

ராகவன் கோபம் நியாயம்! -சுப. வீரபாண்டியன்

ராகவன் கோபம் நியாயம்! 
   -சுப. வீரபாண்டியன் 

பாஜக செயலாளர்களில் ஒருவரான திரு கே.டி. ராகவன் அவர்கள், தொலைக்காட்சிகளில் பேசும்போது, தந்தை பெரியார் அவர்களை, ஈ.வி. ராமசாமி என்றுதான் குறிப்பிடுவார். கலைஞரைக் கூட, கலைஞர்  என்று குறிப்பிடுவார். ஆனால் பெரியாரை மட்டும் அப்படிக் கூறவே மாட்டார். திரு ஹெச்.ராஜாவும் அப்படித்தான்.  அது குறித்து நம் நண்பர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்படுகின்றனர். இது தேவையற்றது. அய்யாவின் பெயர் ராமசாமிதானே! அவர் பெயரைச் சொல்லி அவரை அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அப்படியானால், சங்கராச்சாரியார்களை,  ஜெயேந்திரன், விஜேயேந்திரன் என்று அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லையே என்கின்றனர். தேவையில்லை, அது அவரவர் விருப்பம்.  நாம் பெரியாரால் பயன் பெற்றோம். அதனால் அவரை அப்படி அழைக்கின்றோம். அவர்கள் சங்கராச்சாரியார்களால் பயன் பெற்றார்கள். எனவே அவர்கள் அப்படி அழைக்கின்றனர்.

அவர்கள் பெரியாரால் பயன் பெறவில்லை என்பது மட்டுமில்லை. தாங்கள் பெற்றிருந்த சமூக அதிகாரத்தையும், பாவம்,  இழந்தார்கள். அந்தக் கோபம் அவர்களுக்கு  இருக்கத்தானே செய்யும். நினைத்துப் பாருங்கள் என் தாத்தா அவர் தாத்தாவைச் 'சாமி' என்றுதான் அழைத்திருப்பார். அவர் தாத்தாவைப் பார்த்ததும் என் தாத்தா, துண்டை எடுத்துக் கக்கத்தில் வைத்திருப்பார்.

ஆனால் இன்றோ, நான்  அவரைச் சாமி என்று அழைப்பதில்லை. நண்பர் ராகவன் என்று அழைக்கிறேன். அவருக்குச் சமமாக ஒரே இருக்கையில் அமர்கிறேன். இதுவெல்லாம் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்! பெரியார் மாதிரி ஒருவர் பிறக்காதிருந்தால், திரு ராகவன் சோபாவில் அமர்ந்திருக்க,  இந்நேரம் நானும், அருள்மொழி போன்றவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தரையில் அமர்ந்துதானே வாய்பொத்திப் பேசியிருப்போம். தொலைகாட்சி நெறியாளரும், அவாளாக இல்லையென்றால்,    எங்கள் பக்கத்தில் தரையில்தான் அமர வேண்டியிருக்கும்!

அந்தக் காலமாக இருந்தால், ராகவன் என்னைப்  பார்த்து, வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டென்று கருதாமல், "என்னடா அம்பி வீரபாண்டியன்,எப்படியிருக்கே?' என்றுதானே கேட்டிருப்பார். இப்போது 'அண்ணன் எப்படியிருக்கீங்க?' என்று அன்போடு (?) கேட்கிறாரே! இத்தனை மாற்றங்களுக்கும் இந்தப் பெரியார்தான் காரணம் என்கிறபோது, அவருக்குக் கோபம் வரத்தானே செய்யும்? அதில் என்ன தவறு?

இவ்வளவு சமூகப் பெருமைகளையும் தாங்கள்  இழப்பதற்குக்   காரணமாக இருந்த ஒருவரைப் போய் அவர் பெரியார் என்று அழைக்க வேண்டும் நாம் எதிர்பார்ப்பது வன்முறை இல்லையா? ஆனாலும் என்ன ஒரு பெரிய இடைஞ்சல் என்றால். நம் அய்யாவின் பெயரிலேயே 'சாமி' இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி. நம் அய்யாவை அவர்கள் இப்போது சாமி, சாமி என்று அழைக்க வேண்டியிருக்கிறது. அதனையும் விட்டுத் தொலைக்க ஏதேனும் வழி கண்டு பிடித்து விடுவார்கள்.

ராகவன் கெட்டிக்காரர், புத்திசாலி. எப்படியாவது இந்தப் பெயரை ஒலிக்காமல் இருக்க ஒரு வழி கண்டுபிடித்து விடுவார். இல்லையானால், சாமி என்று அழைப்பதை விட, பெரியார் என்றே  சொல்லித் தொலைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தாலும் வந்துவிடுவார்.

அவர் உடல்மொழியில் ஓர் ஆணவம் இருக்கிறது. கேலியும், கிண்டலுமாகப் பேசுகின்றார் என்கின்றனர். எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு, அவைகளைக் கூட அவர்  வைத்துக் கொள்ளக் கூடாதா? இதெல்லாம் என்ன நியாயம்? அவர் மனநிலையை, அவர் கோபத்தை, அவர் பக்கம் உள்ள நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்கள் தாத்தா காலத்தில் இருந்த நிலைமை, மீண்டும் தங்கள் பேரன்கள் காலத்திலாவது வந்துவிடாதா என்று அவர்கள் ஏங்குகின்றனர். அந்த ஏக்கம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா என்ன?

சரி, ராமரவி என்று ஒருவர் வேறு ராமசாமி நாயக்கர் என்று தொலைக்காட்சிகளில் பேசுகிறாரே, அது ஏன் என்று கேட்கின்றனர். ஐயோ அவர் ஒரு அப்பாவி, நம் பிள்ளை அவர். நாய்க்கர் என்பது ஆள் பெயரா, சாதி பெயரா என்று கூடத் தெரியாமல், விவாதங்களில் விழிக்கின்றார். அவர் விழிப்பதில் இருந்தே தெரியவில்லையா, அவர் நம் பிள்ளை என்று. நண்பர் ராகவனிடம் இருப்பது போல, ராமரவியிடம் அந்த எள்ளல், ஏகடியம் எல்லாம் இருக்கிறதா பாருங்கள். ஏதோ உணர்ச்சி வயப்பட்டு அல்லது வயப்பட்டதைப் போல ஒரு தோற்றம் இருக்கும், அவ்வளவுதான். உண்மையில் ராகவன் கோபத்தில் இருக்கும் நியாயம், ராமரவி கோபத்தில் இல்லை.அதில் ஒரு நன்றியுணர்ச்சி மட்டும் குறைகிறது. மற்றபடி தப்பு ஏதும் இல்லை.

"கணவனை இழந்ததாலே கண்ணகி கோபம் நியாயம்" என்பார் கவிஞர் தணிகைச் செல்வன்.  அனைத்தையும் இழந்ததால், ராகவன் கோபம் நியாயம், நியாயம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இருக்கட்டும், சங்கராச்சாரியார் போன்றவர்களால்தானே நாம் சமூக இழிவைப் பெற்றோம். அப்படியிருக்க, நண்பர் ராகவனைப் போல,  நீங்களும் அவர்கள் பெயர்களைக் குறிப்பிடும்போது, சங்கரன், விஜேயேந்திரன் என்று குறிப்பிட வேண்டியதுதானே, பாரதியார் என்று ஏன் சொல்ல வேண்டும், அவர்களைப் போலவே கவிஞர் சுப்பிரமணி என்று சொல்ல வேண்டியதுதானே என்று நண்பர்கள் கேட்கின்றனர். அது எப்படி முடியும்? நாம் நாகரிகம் தெரிந்தவர்களாயிற்றே!
#KTRagavan #BJP

மது விற்பனையில் 'சசி' நிறுவனம் சாதனை 14 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அள்ளியது

மது விற்பனையில் 'சசி' நிறுவனம் சாதனை 14 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அள்ளியது...

கோவை, : சசிகலாவின் உறவினர்களால் நடத்தப்படும், *'மிடாஸ்' நிறுவனம், தமிழக அரசுக்கு, 14 ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று, சாதனை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது.*
கடந்த, 2001 - 2006, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தின் போது, 'தமிழகத்தில், மதுக்கடை களை அரசே ஏற்று நடத்துவது' என, முடிவு செய்யப்பட்டது. 2003ல் அரசு இந்த முடிவை எடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன், 2002 அக்., 28ல், 'மிடாஸ் கோல்டன் டிஸ்டிலெரிஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், மதுபான தயாரிப்பு நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் துவங்கப்பட்டது.

*எகிறிய கொள்முதல்!*
வேறு மூன்று நபர்களால் துவங்கிய இந் நிறுவனத்தில், 2004ல், சசிகலாவின் உறவினர் களான ராவணன், சிவகுமார் மற்றும் கார்த்தி கேயன் கலியபெருமாள் நியமிக்கப்பட்டனர். அதன் பின், ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் நிறுவனத்துக்குமான முக்கிய, 'சப்ளையர்' ஆக, 'மிடாஸ்' நிறுவனம் மாறியது.

ஆண்டுக்கு ஆண்டு, இதன் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. டாஸ்மாக் மதுக்கடைகள் துவங்கிய ஆண்டில், இந்த நிறுவனத்திலிருந்து, வெறும், 130.82 கோடி ரூபாய்க்கு மட்டுமே, அரசின் சார்பில் மது பானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

அடுத்தடுத்த இரு ஆண்டுகளில், கொள்முதல் தொகை, 490.06 கோடி - 872.61 கோடி ரூபாய் என, உயர்ந்தது. கடந்த, 2006ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

இதனால், 'மிடாஸ்' நிறுவனத்திலிருந்து மது பானம் கொள்முதல் செய்வது நிறுத்தப் பட்டது. தங்களது நிறுவனத்திலிருந்து மது கொள்முதல்
செய்ய அரசுக்கு உத்தரவிடும் படி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் ராவணன். அதன்பின், 2007 - 08ல் துவங்கி, 2010 - 11 வரை, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும், 2,773 கோடிக்கு, 'மிடாஸ்' நிறுவனத்திடமிருந்து, மதுபானங்களை டாஸ்மாக் கொள்முதல் செய்தது.

அ.தி.மு.க., 2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்நிறுவனத்தின் உற்பத்தியும், விற்பனையும் உச்சம் தொட்டது. புதிது புதிதாக சரக்குகளை அறிமுகப்படுத்தி, அவற்றைத் தான் குடிக்க வேண்டுமென்ற தலைவிதி, தமிழ்நாட்டு, 'குடி' மகன்கள் தலையில் எழுதப்பட்டது.

இதன் காரணமாக, 2011 - 12ல், 1,404 கோடி ரூபாய், 2012 - 13ல், 1,729 கோடி ரூபாய், 2013 - 14ல், 2,280 கோடி ரூபாய், 2014 - 15ல், 2,736 கோடி ரூபாய், 2015 - 16ல், 3,283 கோடி ரூபாய் என, ஐந்தாண்டுகளில், 11 ஆயிரத்து, 432 கோடி ரூபாய்க்கு சரக்குகளை அரசுக்கு விற்றது, 'மிடாஸ்' நிறுவனம். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை, அ.தி.மு.க., கைப்பற்றிய பின், 'மிடாஸ்' இன்னும் உத்வேகம் பெற்றது.

*புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடல்நலக் குறைவுடன் இருந்த, 75 நாட்களிலும் கூட, 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்கு உற்பத்தியோ, சப்ளையோ குறையவில்லை. நடப்பு நிதியாண்டில், 'மிடாஸ்' நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்த மதுபானத்தின் மதிப்பு, 4,000 கோடி ரூபாயைத் தாண்டி விட்டதாகத் தெரிய வந்துள்ளது.* மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தத் துவங்கியதிலிருந்து தற்போது வரை, 14 ஆண்டுகளில், ஒட்டு மொத்தமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு, 'மிடாஸ்' நிறுவனத்தால், தமிழக அரசுக்கு, 'சரக்கு' விற்கப்பட்டுள்ளது. இப்போது, 11 நிறுவனங்களிட மிருந்து மதுபானங் களை டாஸ்மாக் கொள்முதல் செய்தாலும், 'டாப்'பில் இருப்பது, 'மிடாஸ்' தான்.'

*அடாஸ்' விற்கும் 'மிடாஸ்'*

இதுவரை, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ள, 'மிடாஸ்' நிறுவனம், 2002ல் துவக்கப் பட்ட போது, அதன் முதலீடு, வெறும், 16 கோடி ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து, 3.12 கோடி ரூபாய், செலுத்து மூலதனமாக செலவிடப்பட்டது. ஆனால், 'குடி'மகன்களால், 'அடாஸ்' சரக்கு எனப்படும் மோசமான சரக்குகளை விற்றே, பல ஆயிரம் கோடியை, 'மிடாஸ்' சம்பாதித்துள்ளது.

அம்மா அவர்கள் முதல்வராக இருந்த போதே கோலோச்சி வந்துள்ளது இந்நிறுவனம். *மதுக்கடைகளின் எண்ணிக்கை குறையலாம்; மிடாஸ் நிறுவனத் தின் வர்த்த கமோ, சசிகலா குடும்பத்தினரின் வருமானமோ குறையவே குறையாது.* இது, தமிழ்நாடு, 'குடி' மகன்களுக்கான சாபக்கேடு.

*மிடாஸ்... கைமாறிய கதைகள்!*
ஆரம்ப காலத்தில், கிட்டப்பா, நாகையன் மற்றும் அன்புக்கரசு என, மூன்று பேர், இதன் இயக்குனர்களாக இருந்தனர். மதுக்கடைகளை அரசு எடுத்ததற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2004ல், சசிகலா சித்தப்பாவின் மருமகன் ராவணன், சசிகலாவின் அண்ணன் மருமகன் சிவகுமார், இந்த நிறுவனத்தின் இயக்குனர் களாக உள்ளே நுழைந்தனர்.

இதிலிருந்து, 2012ல், ராவணன் வெளியேற்றப் பட்டார்.அவருக்குப் பதிலாக, கார்த்திகேயன் கலியபெருமாள், நியமிக்கப்பட்டார். தற்போது இவரும், சிவகுமாரும் இதன் இயக்குனர்களாக உள்ளனர்.சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான இரு நிறுவனங்கள், 'மிடாஸ்' நிறுவனத்தின் பெரும் பங்கை, 2009ல் வாங்கின.

இவ்விரு நிறுவனங்கள் உட்பட சசிகலா, இளவரசி மற்றும் உறவினர்களால் நிர்வகிக்கப் படும், 11 நிறுவனங்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட நிறுவனங்கள். அவற்றிலுள்ள இயக்குனர்கள், வர்த்தகம், வருடாந்திர வருவாய் இவற்றை எல்லாம் பார்த்தால், யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தலை சுற்றிவிடும். *சசிகலா குடும்பத்தின், 'இமாலய' சொத்துக் குவிப்பில், 'மிடாஸ்' ஒரு முக்கியச் சிகரம்.*

தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புது மணப்பெண் போராட்டம். திருமணத்துக்கு மறுநாள் மக்களுக்காக களமிறங்கினார்...சசிகலா புஷ்பா



தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புது மணப்பெண் போராட்டம். திருமணத்துக்கு மறுநாள் மக்களுக்காக களமிறங்கினார்.

ஈரோட்டு மாநாட்டைப் பாராட்ட வார்த்தையில்லை! கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம்.

நன்றி.. நன்றி.. நன்றி..!

ஈரோட்டு மாநாட்டைப் பாராட்ட வார்த்தையில்லை!  கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம்.


என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நெஞ்சார்ந்த நன்றிக் கடிதம்.

அலை அலையாய்த் தொண்டர் பட்டாளம், ஆர்ப்பரித்து வந்த இளைஞர் படை,  ஆர்வத்துடன் திரண்டிருந்த மகளிர், இது நமக்கான மாநாடுதான்  எனப் பரவசத்துடன் வந்து பார்வையிட்ட பொதுமக்கள் என எத்திசையும் புகழ் மணக்கும் தமிழ் போல, எப்பக்கம் திரும்பிப் பார்த்தாலும்  மனிதத் தலைகளால் நிரம்பி வழிந்த மாநாட்டுப் பந்தலும், வெள்ளை மாளிகை போன்ற கொள்ளை அழகுடன் விளங்கிய மாநாட்டு வெளிமுகப்பு கடந்து நெடுஞ்சாலை வரை நீண்டிருந்த மக்கள் பேரலையும் , திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமையான-ஒளிமயமான எதிர்காலத்தைப் பறைசாற்றியது.



சாலைகள் அனைத்தும்  ரோம் நகர் நோக்கி என்று பழைய வரலாற்றில் சொல்லப்படுவதுபோல, சாலைகள் எல்லாம்  ஈரோடு நோக்கி என்கிற புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். மண்டல மாநாட்டை  மாநில  மாநாடு போல வெற்றி பெறச் செய்யுங்கள் என்ற எனது அன்பு வேண்டுகோளை ஏற்று, சரித்திர வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கும் கழக உடன்பிறப்புகளின் பேராற்றலை தமிழக அரசியல் களம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது.



இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அமையாதபடி உடல்நிலை தடுத்துவிட்டதே என்ற பெருங்கவலை ஏற்பட்டாலும், இந்த வரலாற்று வெற்றிக்கு அடித்தளமே அந்த மகத்தான தலைவர்தானே என எண்ணிடும் போது அந்தக் கவலைகூட காற்றில் கரைந்து, கழகத் தொண்டர்களின் ஒவ்வொரு அணுவிலும் அவர்தானே நீக்கமற நிறைந்திருந்தார் என்ற பெருமிதம் ஏற்படுகிறது.



திராவிட இயக்கத்தின் தனிப் பெரும்தலைவராம் - தன் சிந்தனைகளால் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சிய புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. அந்த மண்ணில்தான் பெரியாரின் முதன்மைச் சீடராக-இயக்கத்தின் தளபதியாக-எழுத்தாலும் கருத்தாலும் ஏற்றமிகு பேச்சாலும் எழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்திய பேரறிஞர் அண்ணா அவர்கள் செயல்பட்டார். அதே இடத்திற்குத்தான் பல துறை வித்தகர்-முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பெரியாரின் கண்ஜாடையை ஏற்றுச் சென்று,  குடிஅரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களுக்கும் தொடர்புடைய முதுபெரும் மண்ணில் ,அவர்களின் கொள்கைகளைக் கட்டிக்காக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் இலட்சிய முழக்கமிடும் மண்டல மாநாட்டை நடத்துவது எனத் தீர்மானித்தபோது, மாவட்டக் கழகச் செயலாளர்  சகோதரர் சு.முத்துசாமி அவர்கள், கொடுத்த பணியைக் குறையேதுமின்றி நிறைவேற்றி முடிப்பேன் என உறுதிபூண்டு உடனடியாகக் களமிறங்கினார்.



அவர் மட்டும்தான் பணி செய்வாரா? நாங்கள் சும்மா இருந்துவிடுவோமா என மேற்கு மண்டலத்தில் உள்ள ஏனைய மாவட்ட கழகச் செயலாளர்கள் என். நல்லசிவம் - பா.மு. முபாரக் - எஸ்.ஆர். சிவலிங்கம் -  வீரபாண்டி ஆ.இராஜா - ஆர். இராஜேந்திரன் - க. செல்வராஜ் - இல.பத்மநாபன் - சி.ஆர்.இராமச்சந்திரன் - இரா. தமிழ்மணி - மு.முத்துசாமி - நா. கார்த்திக் - நன்னியூர் ராஜேந்திரன் - கே.எஸ். மூர்த்தி - பார். இளங்கோவன்   ஆகிய 14 பேரும் வரிந்து கட்டிக்  களமிறங்கினர். அடடா.. இந்த ஆரோக்கியமான ஆர்வம் மிகுந்த போட்டிதானே அந்நாள் தொட்டு இந்நாள் வரை கழகம் அசைக்க முடியாத ஆலமரமாக வேர்பரப்பி, விழுதுவிட்டு நிற்பதற்குக் காரணமாக இருக்கிறது!



மண்டல மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் என்ற முறையில் மொத்தப் பணிகளையும் தலையில் சுமக்க வேண்டிய பொறுப்புக்குள்ளானவர் முத்துசாமி. அதனை சுகமான சுமையாகக் கருதி, மற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் - முன்னணி நிர்வாகிகள் - மூத்த முன்னோடிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, இரவு-பகல் பாராமல் அவர் செயல்பட்ட காரணத்தால் மண்டல மாநாடு, ஒரு மாநில மாநாட்டிற்குரிய வெற்றியைப் பெற்றுள்ளது.



ஈரோடு-பெருந்துறையில் தந்தை பெரியார் திடல் பேரறிஞர் அண்ணா நகர் என்ற புதிய நகரத்தையே பொலிவுடன் உருவாக்கி, அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து, மாநாட்டை பெருவெற்றி பெறச் செய்ததுடன், நிதிக்குழுத் தலைவர் திரு.பொங்கலூர் நா.பழனிசாமி,  நிதிக்குழு செயலாளர் எம்.கந்தசாமி மற்றும் நிதிக்குழு துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் - கழக நிர்வாகிகள் துணையுடன் மாநாட்டுக்காகத் திரட்டிய நிதியில், செலவு போக, கச்சிதமாக மிச்சம் பிடித்து, 5 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதியைக் கழகத்திற்கு வழங்கியுள்ளதில் முத்துசாமி அவர்களின் சீர்மிகு செயலாற்றலை உணர முடியும்.



அதனைவிட அதிக மகிழ்ச்சி தந்தது எதுவென்றால், தேர்தல் களத்தில் எந்த மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வியால் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது என்று விமர்சிக்கப்பட்டதோ, அந்த மேற்கு மண்டலத்தின் கழக நிர்வாகிகள் அனைவரும் தோளோடு தோள் நின்று, மாநாட்டுப் பணிகளில் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து, ’பாரடா கழகத்தின் கோட்டையை’ என்று அரசியல் எதிரிகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்களே.. இந்த ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும்தான் ஒப்பிலா உவகையைத் தருகிறது. எதிர்காலத்தில் நாம் அடையப் போகும் வெற்றிக்கு அச்சாரமாக அது அமையும்.



இரண்டு நாட்கள் மாநாடு. இரு நாட்களும் சமுத்திரமெனச் சங்கமித்த கூட்டம். மாநாட்டிற்கு முதல்நாள் இரவே பந்தலுக்குச் சென்று பணிகளைக் கவனித்தபோது, மாநாடு தொடங்கிவிட்டதோ என நினைக்குமளவுக்கு ஆண்களும் பெண்களும் சிறார்களும் ஆர்வமாகத் திரண்டிருந்து வரவேற்றதில் உள்ளம் மகிழ்ந்தேன். ஒரு வாரத்திற்கு முன்பாகவே திறந்து வைக்கப்பட்ட திராவிட இயக்க வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக நாள்தோறும் வந்து சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டிவிட்டது என்பதையறிந்து பூரிப்படைந்தேன். மாநாட்டிற்கு முதல்  நாளும் விடிய விடிய பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டபடி இருந்தனர்.



முதல்நாள்  மாநாட்டின் முதல் நிகழ்ச்சியான கழகத்தின் இருவண்ணக் கொடியேற்று நிகழ்வுக்கு வந்தபோது கட்டுக்கடங்காத கூட்டத்தில் எங்கள் கார்களெல்லாம் படகுகள் போல மிதந்தன; ஊர்ந்து நகர்ந்தன. மலர்தூவி வரவேற்ற தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களோடு, இனமானப் பேராசிரியர் மற்றும் முன்னோடிகள் சூழ்ந்திருக்க, திருமதி.சற்குணபாண்டியன் நினைவு கொடிமேடையில் 65 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றிவைத்தார் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் அவர்கள். அதனைத் தொடர்ந்து மாநாட்டைத் திறந்து  வைத்தார் கழகத்தின் கொள்கை பரப்புச்  செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள்.



பெரியார் பிறந்த மண்ணில் அவர் போற்றிய  பெண்ணுரிமைக்குப்  பெருமை சேர்க்கும் விதத்தில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சகோதரி சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க, வரவேற்புக் குழுத் தலைவர் முத்துசாமி அவர்களின் உரையுடன் தொடங்கிய மாநாட்டில், உறைவிட்டுக் கிளம்பிய வாள்போல ஒவ்வொரு சொற்பொழிவாளரும் கொள்கைகளை முழங்கிய விதத்தையும், வீச்சையும் ,அவர்கள் முன்வைத்த கருத்தையும் தனிப் புத்தகமாகவே வெளியிடலாம்.



திராவிட இயக்கத்தின் தியாகங்கள், சாதனைகள், இந்தியாவுக்கே வழிகாட்டிய திட்டங்கள், பெரியார்-அண்ணா-கலைஞர் உள்ளிட்ட ஆளுமைமிக்க தலைவர்கள் உருவாக்கிய சமுதாய மாற்றங்கள், இன்றைய அவலம் நிறைந்த மத்திய ஆட்சி, அவமானகரமான மாநில ஆட்சி, பறிக்கப்படும் உரிமைகள், தத்தளிக்கும் தமிழகம், அதனை மீட்டு சுயமரியாதையும்  சுயாட்சியும் கொண்ட மாநிலமாக மாற்றக்கூடிய தி.மு.கழகத்தின் வலிமை என இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன் ஒரு பல்கலைக்கழகப் பாடத்திட்டம்போல கொள்கை வகுப்பெடுக்க இந்த இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கத்தால் இயலும்?



மாநாட்டின் இரண்டாம் நாள் மதிய இடைவேளைக்கு முன் கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி உருக்கமாக பேசியது மேடையில் இருந்தவர்களை மட்டுமல்ல, அனைவரையும் நெகிழச் செய்தது. திராவிட இயக்கத்தின் முதுபெருந்தலைவரான இனமானப் பேராசிரியப் பெருந்தகை அவர்கள், தனது 95 வயதிலும், முதுமையைப் பொருட்படுத்தாமல் இரண்டு நாட்களும் மேடையிலேயே தொடர்ந்து அமர்ந்திருந்தது மாநாட்டிற்கே பெருமை. அவர், தனது மாணக்கர்களான கழகச் சொற்பொழிவாளர்களின் கருத்துரைகளைக் கேட்டபோது, எதிரில் திரண்டிருந்த இலட்சோபலட்சம் தொண்டர்களும்-இளைஞர்களும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கங்களை கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்கள் போல ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் கேட்டு மகிழ்ந்தனர்.



தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களைச் சொன்ன போதெல்லாம் வரவேற்பு;தலைவர் கலைஞரின் பெயர் உச்சரிக்கப்பட்டதெல்லாம் புத்துணர்வு;தி.மு.கழகத்தின் பெருமைமிகு சாதனைகளைச் சொல்லும்போதெல்லாம் உத்வேகம்;உங்களில் ஒருவனான என் மீது நம்பிக்கை வைத்துப் பேசியபோதெல்லாம் வாழ்த்து முழக்கங்கள்; கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்ற போதெல்லாம் சூளுரை ; என கழகத் தொண்டர்கள் காட்டிய பேரார்வத்தை எண்ணி எண்ணி இறும்பூதெய்துகிறேன்.



தமிழ்நாட்டின் நலனைக் காக்கவும், இந்தியத் திருநாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கவும், தாய்மொழியாம் தமிழ் மொழி-தாய்நிலமாம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும், மேற்கு மண்டலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து, தீர்மானக்குழுத் தலைவர் திரு. என்.கே.கே.பெரியசாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் வடித்து கொடுத்த சிறப்புமிக்க 50 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதுடன், சிறப்புத் தீர்மானமாக, தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக எந்த மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும்-அதற்கு மாநில அரசு உடன்பட்டாலும் தமிழினத்தைத் திரட்டி கழகம் போர்க்கோலம் பூண்டிடும் என எச்சரிக்கும் தீர்மானத்தை நானே முன்மொழியும் வாய்ப்பு அமைந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானங்கள் குறித்தும் தனி மடலே எழுதும் அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.



கழகத்தின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் திருக்குறள் போல , தன் சிறப்புரையில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வகையில் திராவிட சித்தாந்தத்தை நமக்குப் போதித்தபிறகு, மாநாட்டு நிறைவுரையாற்றும் பெரும் வாய்ப்பு-முதல் வாய்ப்பு எனக்கு அமைந்தது.



திரண்டிருந்த கூட்டத்தையும் அதன் எழுச்சி மிக்க வாழ்த்தொலியையும் கேட்ட போது, பேச வார்த்தைகளின்றி உறைந்து நின்றேன். எனினும், கடந்த அரை நூற்றாண்டு காலமாக, கழக மாநாடுகள் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞர் அவர்கள் தனது நிறைவுரை மூலம் கழகத் தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் புதிய செய்தியை விடுத்து, அரசியல் களத்தின் போக்கையும் நோக்கையும் மாற்றியதை நினைவில் கொண்டு, பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல, உங்களில் ஒருவனான நான் எனது நிறைவுரையை வழங்க முன்வந்தேன்.



தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குத் தந்த ஐம்பெரும் முழக்கங்களைப் போல, அவரது வாழ்த்துகளுடனும் ஒப்புதலுடனும் புதிய ஐந்து முழக்கங்களை முன்வைத்து என் உரையைத் தொடங்கியபோது அதற்கு உங்களின் ஒருமித்த பேராதரவு கிடைத்தது.



Å    கலைஞரின் கட்டளையைக் கண்போலக் காப்போம்!

Å    தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்!

Å    அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!

Å    மதவெறி மாய்த்து  மனிதநேயம் காப்போம்!

Å    வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்!

என்கிற அந்த அய்ந்து முழக்கங்களையும் என்னுடன் சேர்ந்து மேடையில் உள்ளோரும் எதிரில் திரண்டிருந்த தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் திருப்பிச் சொன்னபோது, எழுந்த பேரொலி அரசியல் களம் முழுவதையும் நம்மை நோக்கித் திருப்பியுள்ளது. ஈரோடு மாநாடு கழகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஈடிணையற்ற இலட்சிய இன்பத்தைத் தந்துள்ளது.



மாநாட்டின் சிறப்பை-அதன்  நேர்த்தியை- அதனால் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை- கழகத்தினர் பெற்றிருக்கும் புத்துணர்வை- அது உருவாக்கப்போகும் புலிப்பாய்ச்சலை எண்ணிடும் போதே மெய் சிலிர்க்கிறது. ஈரோட்டு மாநாட்டை  எழுச்சி பொங்க சிறப்பாக நடத்திக்காட்டிய கழக நிர்வாகிகளையும், மாபெரும் வெற்றி மாநாடாக உருவாக்கிக் காட்டிய தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளையும் பாராட்டிட வார்த்தைகளைத் தேடுகிறேன் தேடுகிறேன் தென்படவில்லை!எனது உள்ளம் கொள்ளும் மகிழ்ச்சியை உரைத்திட பொருத்தமான வார்த்தை ஏதும் உண்டோ?  ஒவ்வொரு மாநாடு நடைபெறும் போதெல்லாம் “உடன்பிறப்பே வா” என்று தலைவர் கலைஞர் அவர்கள் எழுதும் அந்த கடிதம் கண்ட களிப்புடன் மாநாட்டிற்கு நீங்கள் குடும்பத்தோடு வந்தது என் நெஞ்சில் நிழலாடுகிறது. அப்படி ஒரு கடிதத்தை தலைவர் கலைஞர் அவர்களால் இப்போது எழுது முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கும், உங்களுக்கும் இருந்தாலும், அவர் ஏற்று நடத்திய லட்சியப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க அவர் சார்பில் மூன்றே மூன்று கடிதம் எழுதினேன்...

அந்தக் கடிதங்களையே அன்பான வேண்டுகோளாக ஏற்று, அலைஅலையாக வந்து குவிந்து எனது ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஆயிரம் மடங்கு பெருக்கியிருக்கிறீர்கள்.



எத்தனையோ பணிகள், குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும்  எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களில் ஒருவனான இந்த எளியவனின் அன்பான அழைப்பையேற்று, மாநாட்டு வருகை தந்து, சிறப்பித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் கோடி முறை நன்றி சொன்னாலும் உங்கள் அன்பிற்கு முன் அது ஈடாகாது.



 இந்த மகிழ்ச்சி நமக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் நிரந்தரமாக கிடைத்திட வேண்டும். அதற்கு, மாநாட்டு நிறைவுரையில் நான் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றிடும் வகையில், தலைவர் கலைஞர் வாழும் காலத்திலேயே கழக ஆட்சியை மீண்டும் உருவாக்கி, அவருக்கு காணிக்கையாக்கிடுவோம்.


நன்றி.. நன்றி.. நன்றி..!

  திருவள்ளுவர் ஆண்டு 2049, பங்குனி – 13.                                                     அன்புடன்,

  10-03-2018.                                                       மு.க.ஸ்டாலின்.

திங்கள், 26 மார்ச், 2018

டெல்லியில் நடைபெற்ற சசிகலா புஷ்பாவின் திருமணம்


டெல்லியில் நடைபெற்ற சசிகலா புஷ்பாவின் திருமணம்

இன்று டெல்லியில் சசிகலா புஷ்பாவின் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா. இவரது கணவர் லிங்கேஸ்வரன். இவருக்கும் சசிகலா புஷ்பாவிற்கும்  முறைப்படி விவாகரத்தானது.


இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பாவுக்கும்,டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் சத்யபிரியா என்பவர் தனது குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், டெல்லி ராமசாமி தனது கணவர் என்றும் தனக்கும் அவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது எனவும் கூறி வழக்கு தொடர்ந்தார். சத்திய பிரியா தொடர்ந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்வதில் சிக்கல் எற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கும் ராமசாமிக்கும் டெல்லியில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

ஞாயிறு, 25 மார்ச், 2018

ஸ்டெர்லைட் ஏன் வேண்டாம்


ஸ்டெர்லைட் ஏன் வேண்டாம்...

1985 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் உருவானபோது அது இத்தனை பிரளயங்களை எதிர்கொள்ளுமென்று யாரும் நினைக்கவில்லை.முத்துக்குளித்தலுக்கும்...சுதந்திரப்போராட்டக்காலத்தில் பிரிட்டிஷ் ஆண்டைகளுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியதற்கும் புகழ்பெற்ற தூத்துக்குடி இன்று தமிழக அளவில் மாசுபட்ட நகரங்களில் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது..

கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறை படிவங்கள் உலகளவில் ஐந்து இடங்கள் புகழ்பெற்றவை..அந்த ஐந்தில் ஒன்று தூத்துக்குடி.விவிடி தேங்காய் எண்ணையும்...எண்ணைப்புரோட்டாவும் நாம் வாழும் காலத்தில் நம்மைப் பரவசப்படுத்துபவை...

பொதுவாகவே தூத்துக்குடி நகரம் கடுமையான வெயிலுக்கு புகழ்பெற்ற நகரம்..உச்சிமத்தியான வேளைகளில் அனல் பறக்கும்..நீங்கள் தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி செல்லும் நான்குவழிச்சாலையிலோ அல்லது திருச்செந்தூர் செல்லும் கிழக்கு கடற்கரையொட்டிய சாலையிலோ பகல் நேரத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணித்துப்பார்த்தால் வெயிலையும் உணரமுடியும்..ஊரையே நாசப்படுத்தும் ஆலைகள் வெளியிடும் நச்சுப்புகைகள் வானமண்டலத்தை நாசப்படுத்துவதையும் காணமுடியும்.மேலாக எல்லா மாநில பதிவெண் கொண்ட லாரிகள் கார்களை கடந்து போகும்போதே காணமுடியும்...அத்தனை வர்த்தகம் தூத்துக்குடியில்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முப்பது கிமீ பயணித்தால் ஆறுமுகநேரி வரும்...அங்கே ஒரு வடநாட்டு மார்வாடி அமைத்துள்ள தாரங்கதாரா கெமிக்கல்சால் கடல் நீரின் நிறமே எட்டு கடல் மைல் தொலைவிற்கு மாறிவிடுமென்றால் அந்த ஆலை வெளியிடும் நச்சின் அளவை உங்களால் புரிந்து கொள்ளமுடியுமென நினைக்கிறேன்.

அதேபோல தூத்துக்குடியிலிருந்து நாலுவழிச்சாலையில் பயணிக்க ஆரம்பித்தால் சாலையின் இடதுபுறம் ஒரு ஆலையிலிருந்து வெளியேறும் புகைமட்டும் ரெம்பவே வித்தியாசப்படும்...அலுமினியக்கலரில் கொத்தாக வெளிவரும் அந்த புகையைக்கண்டால் சிறுவர் சிறுமிகள் குதூகலிக்கக்கூடும்...காரணம் அடர்த்தியாக வெளிவரும் அந்த புகை அவ்வளவு எளிதில் உடையாமல் மெதுவாக மேல்நோக்கி செல்லும்...மற்ற ஆலைகளில் புகைப்போக்கி வழியே வெளிவரும் புகை  உடனே உடைந்துவிடும்.ஆனால் ஸ்டெர்லைட்டில் கதைவேறு.

கதையின் நாயகன் சட்டிஸ்கர் மாநிலத்தில்  உள்ளார்ந்த பஸ்தர் காடுகளை வனமக்களிடமிருந்து கபளீகரம் செய்துகொண்டிருக்கும் பூநூலை மூலமாகக்கொண்ட *வேதாந்தா* நிறுவனம்.

குஜராத்தை அடிப்படையாகக்கொண்ட அனில் அகர்வாலின் இந்த வேதாந்தாவின் *ஸ்டெர்லைட் காப்பர்*முதலில் கடைவிரித்தது அனில் பிறந்த குஜராத்திலேதான்...அங்குள்ள மானமுள்ள மார்வாடிகளின் எதிர்ப்பால் ஸ்டெர்லைட் கோவாவிற்கு மாறியது.கொங்கணி பேசும் கோவாக்காரர்களிடம் ஸ்டெர்லைட்டின் கதை செல்லுபடியாகவில்லை.

அனில் அகர்வால் சோர்ந்துபோய்விடவில்லை..கோவாவிலிருந்து மும்பைக்கு விமானமேறிச்சென்று அம்மாநில முதல்வர் சரத்பவாரைப்பார்த்தார்.வேலைமுடிந்தது.மராட்டியத்தின் ரத்தினகிரி அருகே ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடங்க ஏற்பாடானது. அது அல்போன்சா மாம்பழ உற்பத்திக்கு பெயர்பெற்ற பகுதி...ஆனாலும்  மளமளவென வேலை நடந்தது.கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவழித்து ஆலைக்கட்டுமான வேலையெல்லாம் முடிந்தபிறகே ஆபத்தை உணர்ந்தார்கள் அம்பேத்கர் பிறந்த ரத்தினகிரி மண்ணின் மைந்தர்கள்.மாம்பழ விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம்   பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தாத நிலையில் மண்ணின் மைந்தர்கள் கம்பி கடப்பாறையோடு திரண்டார்கள்...சரத்பவாரின் மராட்டிய போலீசின் அடக்குமுறையையும் மீறி ஆலை உடைத்து நொறுக்கப்பட்டது.அனில் அகர்வால் இப்போதும் சோர்ந்து விடவில்லை.தன் பார்வையை தமிழகத்தை நோக்கித்திருப்பினார்.இங்கே நமது மாண்புமிகு அம்மாவின் அரசாங்கம்.வந்தார் அனில்....பேசினார் அனில்...வென்றார் அனில்.இடம் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதி தேர்வு செய்யப்பட்டது.உடனடியாக கட்டுமான வேலைகள் ஆரம்பித்தது.கட்டுமான வேலை நடக்கும்போதே ஆலைக்கு தேவையான அத்தனை அனுமதிகளும் கொடுக்கப்பட்டது அம்மாவின் அரசால்.

சும்மாவா...உலகில் 500 மடங்கு லாபம் தரும் அமுதசுரபியை யாராவது விடுவார்களா என்ன...

கொடுமை என்னவென்றால் ஸ்டெர்லைட் காப்பர் நச்சு ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அம்மாவின் காலத்தில் 1993 ல் என்றால்...ஆலை திறக்கப்பட்டது ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களின் காலமான 1996 ல்...

ஆட்சியாளர்கள்தான் அரைவேக்காடுகள் என்றால் அதிகாரிகளுக்கு என்னவானது...ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்ய இருக்கும் செம்புக்கம்பி-கந்தக அமிலம்-பாஸ்பரிக் அமிலத்தால் நேரக்கூடிய ஆபத்து...மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு...நிலத்தடிநீருக்கான பாதுகாப்பு...லட்சக்கணக்கான மக்களின் வாழ்வியல்...எல்லாவற்றுக்கும் மேலாக ஆலையிலிருந்து பதினைந்து கிமீ தொலைவிலிருப்பது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கான *தேசீய கடல் பூங்கா*என்பதையும் மறந்து எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பதுதான்.இத்தனை பலம் ஸ்டெர்லைட் டிற்கு வரக்காரணம் உண்டு நண்பர்களே...

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம்சார் நிறுவனமொன்றில் இயக்குநராக இருந்தவர் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்.அதைவிடக்கொடுமையாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச் கே கபாடியா இதன் பங்குதாரர்களில் ஒருவர் என்கிறது வரலாறு.

இன்று மீளவிட்டான்..தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் குமரெட்டியாபுரம் போன்ற கிராமத்தினருகே உள்ள ஓடைகளில் ஆலையின் ஜிப்சம் கழிவுகள் கலக்கப்படுவது முதல் ஆலையைச்சுற்றி 25 கிமீ வரை கந்தக அமிலம் கலந்த வாயுக்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல்...புற்றுநோய்க்கான அறிகுறி..கண்பார்வை எரிச்சல்.. மூட்டுவலி...பல்வலி என மக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகியதோடு நிலத்தடி நீரும் நஞ்சாகிவிட்ட நிலையில் தவித்து நிற்கிறார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடுத்த ஆலைக்கெதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நூற்றுக்கணக்கான கேள்விகளைக்கேட்டதோடு NEERI யையும் ஆய்வு செய்யப்பணித்து ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டது...கபாடியா தனது பங்குதாரர் என்ற மமதையில் ஆலையைத்திறக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் அனில் அகர்வால்.

நினைத்தது நடந்தது...நளினி சிதம்பரம்...சிதம்பரம்..கபாடியா கூட்டணியின் உபயத்தால் ஆலை திறக்கப்பட்டது.

இந்த அசுரபலத்தைக்கொண்டு அளவுக்கதிகமான உற்பத்தி அளவுக்கதிகமான லாபம் என ஸ்டெர்லைட் பீடுநடை போட்டது.

நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் டன் காப்பர் உற்பத்தி என்ற இலக்கு ஐந்து லட்சம் டன்னானது...இதில் 70 % ஏற்றுமதி சீனாவிற்கென்பது சிறப்பு.

எழுபதாண்டுக்கு முந்தைய தொழில்நுட்பத்தைக்கொண்டு இயங்கும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் பணம் வாங்காத அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகள் வெகுசிலரே.

உச்சகட்டமாக இந்த நச்சு ஆலைக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு மூன்று நட்சத்திர அந்தஸ்து கொடுத்து அசத்தியதுதான் காலத்தின் கோலம்.

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யத்துடிக்கிறது ஸ்டெர்லைட் காப்பர்...குமரெட்டியாபுரம் அப்பாவிகள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்.விளைவு...வேறென்ன குண்டாந்தடிகளாலான அடியும்...ஏச்சும்...பேச்சும்தான்.காவல்துறையின் வெறியாட்டத்தால் கூனிக்குறுகிப்போனார்கள்...

இன்று ஸ்டெர்லைட் காப்பருக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் வாழ்வா-சாவா களத்தில் நிற்கிறார்கள்...போராட்டம் வெடிக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளே தயவுசெய்து தூத்துக்குடி பக்கம் போய்விடாதீர்கள்.தன்னெழுச்சியாக தங்கள் மண்ணைக்காக்க களத்தில் நிற்கிறார்கள் அந்த அப்பாவிகள்.அங்கே நீங்கள் சென்றால் உங்கள் பெயரைச்சொல்லி வாழ்க என்றும்...ஸ்டெர்லைட் காப்பர் ஒழிக என்றும் உங்கள் தொண்டர்கள் ஊளையிடலாம்...தயவுசெய்து அங்கு ஒழிக கோஷம் மட்டுமே கேட்கட்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வெல்லட்டும்...


திமுக மண்டல மாநாடு சிறப்பு பார்வை....


திமுக மண்டல மாநாடு சிறப்பு பார்வை....

*🎤உடல் நலிவுற்று இருப்பதால் கருணாநிதியால் மாநாட்டிற்கு வர இயலவில்லை; விழாவில் பங்கேற்காவிட்டாலும் கோபாலபுரத்தில் இருந்து நம்மை வாழ்த்துகிறார் கருணாநிதி - ஈரோடு மாநாட்டில்  மு.க. ஸ்டாலின் பேச்சு.*

*🎤”அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம்; மதவெறியை மாய்த்து, மனிதத்தைக் காப்போம்;வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்" - மு.க. ஸ்டாலின்.*

*🎤தமிழகத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது; இந்தி திணிக்கப்படுகிறது - மு.க.ஸ்டாலின்.*

*🎤திமுக எனும் பெட்டி கலைஞர் கையில் இருக்கிறது, அதை ஏற்று நான் செயல்படுவேன் என் மீது இருக்கும் நம்பிக்கையை விட உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன் -மு.க.ஸ்டாலின்.*

*🎤சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன மத்திய பாஜக ஆட்சிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் சேவகம் செய்து வருகின்றனர்  - மு.க.ஸ்டாலின்.*

*🎤தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம் - மு.க.ஸ்டாலின்.*

*🎤காவிரி நீர் மற்றும் விவசாயிகளின் பிரச்னை; அதில் திமுக எப்போதும் அரசியல் செய்யாது - மு.க.ஸ்டாலின்.*

*🎤தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக சிலர் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்  - மு.க.ஸ்டாலின்.*

*🎤இப்படியே இருந்துட்டா நல்லது தான்?*

*🎤தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது: மாநாட்டில் தயாநிதிமாறன் பேச்சு.*

 *🎤மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஆட்சி நாட்டில் நடப்பதாக திமுக மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியுள்ளார். மாட்டுக்காக மனிதர்களை கொல்லும் நிகழ்வுகள் வடஇந்தியாவில் நடந்து வருவதாகவும் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உருவாக்கும் அரசியலை பாஜக நடத்திவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என்று தயாநிதிமாறன் உறுதிபட கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி வந்தவுடன் இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் திணிக்கப்படுவதாகவும் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.*

*🚨திமுக மண்டல மாநாடு சிறப்பு பார்வை!*

50 ஏக்கர் பரப்பளவில் உள் அரங்கு! 

ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தலும், சேர்களும் அமைக்கப்பட்டுள்ளது!

நேரலை செய்தி நிறுவனங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையளார்களுக்கு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மிகப் பிரம்மாண்டமாக 7  ஏக்கர் பரப்பளவில் அரண்மனை போன்ற நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது!

உள் மாநாட்டு பந்தலுக்கு வெளியே 100அடி உயரத்தில், 1000 அடி அகலத்தில் தஞ்சை ஓலை வேலைப்பாடு நுலைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

150 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அரங்கமும்,
திராவிட இயக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான உணவு கூடங்களும், நொறுக்கு தீனீ கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

400 ஏக்கருக்கு மேல் கார் பார்க்கிங் வசதிகளும், ஆண், பெண் தனித் தனி கழிப்பறை வசதிகள், திடலின் உள் மருத்துவ வசதிகளுடன்  கூடிய மருத்துவர்களும் என இதுவரை கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்கள் இது வரை கண்டிராத அளவில் பிரமண்டமாய்  அமைந்த திமுக மண்டல மாநாட்டின் அம்சமாக பேனர்கள் அமைக்க ஸ்டாலின் அனுமதிக்கவில்லை.

மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடிகள் கொங்கு மண்டலத்தில் உள்ள கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 *கூட்டம்!*

திமுகவினரே திணறி போகும் அளவிற்கு கூட்டம் கூடியது கண்டு ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மாநாட்டு திடலிருந்து 15 கி.மீ தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு நடந்தே தொண்டர்கள் வந்ததால் பேரணி நடப்பது போல் காட்சி அளிக்கிறது என திமுகவினர் வியந்தனர்.

*🎤வெற்றிடம் உருவானால் உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்- ரஜினி மீது ஸ்டாலின் பாய்ச்சல்,*

*🎤தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஒருவர் கூறுகிறார், ஆனால் ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.*

*🎤ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.*

*🎤இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழ் மண்ணில் மதவாதத்தை நுழையவிடமாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கைக்கு எதிராக வாலை ஆட்ட முடியாது.*

*🎤வாலை ஆட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம். முதல்வர் கனவுடன் கட்சிகள் தொடங்குகின்றனர்.*

*🎤மீனம், மேஷம் என சிலர் ராசி பார்த்து கட்சி தொடங்க காத்திருக்கின்றனர். நான் அங்கும் இல்லை... இங்கும் இல்லை..மதில் மேல் பூனையாக ஒருவர் இருக்கிறார்.*

*🎤வெற்றிடத்தை நிரப்பப் போவதாக இன்னொருவர் பேசுகிறார். ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்.*

*🎤எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவில் வெற்றிடம் என்பது இல்லை. கருணாநிதி போட்ட பட்ஜெட்டை பின்பற்றிதான் மத்திய பட்ஜெட் போடுகிறார்கள் என்றார் ஸ்டாலின்.*

*🎤ஆட்சி அமைக்க தயாராகுங்கள் | மு.க.ஸ்டாலின்*

*🎤தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை அமைத்து அந்த பரிசை திமுக தலைவர் கருணாநிதியின் கைகளில்  கொடுக்கவேண்டும்…*

*🎤தயாராகுங்கள், தயாராகுங்கள் என கூறி ஈரோட்டில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தனது உரையை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின்.*

*🎤நாங்கள் நினைத்தால் ஒரு சொடக்கு போடும் நேரத்தில் இந்த ஆட்சியை கலைத்துவிடமுடியும் - மு.க.ஸ்டாலின்*

*🎤திமுக எனும் பெட்டி கலைஞர் கையில் இருக்கிறது, அதை ஏற்று நான் செயல்படுவேன்*

*🎤என் மீது இருக்கும் நம்பிக்கையை விட உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்*


*🎤சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன*

*🎤மத்திய பாஜக ஆட்சிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் சேவகம் செய்து வருகின்றனர்*

   *மு.க.ஸ்டாலின்*

*🎤திமுகவை பொறுத்தவரை என்றுமே வெற்றிடம் என்பது கிடையாது*

*🎤ஈரோடு திமுக மண்டல மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு*

*🎤அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் திமுக மண்டல மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு*

*🎤நாங்கள் நினைத்தால் ஒரு சொடக்கு போடும் நேரத்தில் இந்த ஆட்சியை கலைத்துவிடமுடியும் - மு.க.ஸ்டாலின்*

*🎤முதலமைச்சர் கனவுடன் கட்சிகள் தொடங்கப்படுகிறது. சிலர் ராசி பார்க்கின்றனர், சிலர் கட்சி தொடங்க நேரம் பார்க்கின்றனர்*

*🎤தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக மாயை ஏற்படுத்தப்படுகிறது - ஸ்டாலின்*

*🎤திமுக இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற ஒன்று இல்லை - ஸ்டாலின்*

மேலும் ஒரு வங்கிமோசடி

மேலும் ஒரு வங்கிமோசடி

- நாதெல்லா நிறுவனம்

முறைகேடாக ரூ.250 கோடி

 கடன் பெற்றது அம்பலம்

,
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல நாதெல்லா நகை நிறுவனம் முறைகேடாக ரூ.250 கோடி கடன் பெற்றுள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த நாதெல்லா சம்பத் ஜுவல்லரி பி., லிமிடெட் என்ற நிறுவனம், போலி ஆவணங்கள், போலி கணக்குகளை காண்பித்து, 250 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சார்பில், சி.பி.ஐ.,யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, எஸ்.பி.ஐ., வங்கி உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கனிஷ்க் நகை நிறுவனத்தின் ரூ. 824 கோடி மோசடி அம்பலமான சில நாட்களில் தற்போது நாதெல்லா நிறுவனம் முறைகேடாக ரூ.250 கோடி கடன் பெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது.

பெரிய புரட்சியாக மோடி அவர்கள் கொண்டு வந்த மூன்று திட்டங்களும் கடுமையான தோல்வி என்பது உங்களுக்குத் தெரியுமா..??

பெரிய புரட்சியாக மோடி அவர்கள் கொண்டு வந்த மூன்று திட்டங்களும் கடுமையான தோல்வி என்பது உங்களுக்குத் தெரியுமா..??

கறுப்பு பணத்தை ஒழிப்பதாக கொண்டுவரப்பட்ட டிமானிட்டைசேசன் மிகப்பெறும் தோல்வி..
ஆனால் உண்மையான நோக்கம் பொருளாதார வீழ்ச்சியை தாக்குப்பிடிக்க பணமதிப்பை குறைக்க 2000 ரூபாய் நோட்டுக்களை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டதை மறைத்தது..

கேஷ்லெஸ் எக்கனாமி என பணப்புழக்கத்தை முடக்கி சிறுபெரும் தொழில்களை நஷ்டத்திற்குள்ளாக்கியது..
ஆனால் உண்மையான நோக்கம் பொருளாதார நிலையால் திவாலாக இருந்த வங்கித்துறையை எளிய மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் டெபாசிட் செய்ய வைத்து பேமெண்ட் பேங்கிங் என்ற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்கியது..

ஜிஎஸ்டி முறையை கொண்டு வந்து வரி வருவாயை கூட்டுவதாக சொன்னது மிகப்பெரும் தோல்வி...
ஆனால் உண்மையான நோக்கம் மாநிலங்களின் வருவாயை குறைத்து மத்திய அரசின் மூலம் காரப்ரேட்டுகளை பெருக வைக்க நினைத்து  சிறு குறுந்தொழில்களை முடக்கியது..

வளர்ச்சிக்கான பிரதமர் என வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியது மட்டுமின்றி மத துவேசங்களை நாடுமுழுவதற்கும் பரப்பியதைத்தவிர வேறொன்றுமில்லை..

MATHI FLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு



MATHI FLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு

ஜீன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பு…கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும் அரசு கூறியுள்ளது.

கோடை வெயில் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது.

இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும்.

பெற்றோர் அச்சம்

மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்.

அரசுக்கு கோரிக்கை

இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் ஆசிரிய சங்கங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தன.

தள்ளி வைப்பு அறிவிப்பு

இதனையடுத்து கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும் என

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் வரவேற்பு

இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பியதற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 

#ஸ்டெர்லை ஆலை #Sterlitefactory

#ஸ்டெர்லை  ஆலை #Sterlitefactory

1.உரிமையாளர்-அனில் அகர்வால்
2.தலைமையிடம்-இலண்டன்
3.நிறுவனப் பெயர்- வேதாந்தா ரிசோர்ஸ்
4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி
5.முக்கிய உற்பத்தி- தாமிரம் (copper )
6.கழிவு உற்பத்தி- தங்கம், சல்ப்யூரிக் அமிலம் , பாஸ்ஃபோரிக் அமிலம் 
7.முதலில் தேர்ந்த இடம்- குஜராத்
8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா
9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி
10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்
11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு
12.அப்போதைய முதல்வர்-ஜெ.ஜெயலலிதா
13.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்
14.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996
15.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை
16.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி
17.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7
18.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
19.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)
20.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
21.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)
22.ஐந்தாம் விபத்து-ஆயில் டேங்க் வெடிப்பு
23.ஆறாம் விபத்து -நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்
24.உற்பத்தி செய்தது-2லட்சம் டன் (2005 கணக்கில்)
25.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28
26.தொடக்கம் முதல் எதிர்க்கும் கட்சி-மதிமுக
27.ஆலையை எதிர்த்து வாதாடியவர்-வை.கோ(1998)
28.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா
29.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து-உச்சநீதிமன்றம்
30.தமிழ்நாடு பசுமை வாரிம் -தடை
31.தேசிய பசுமை வாரியம்- அனுமதி 

சனி, 24 மார்ச், 2018

தற்போது பினரயி விஜயன் ஆட்சிக்காலத்தில் கேரளா திருவாங்கூர் தேவசம் வாரியம் ஆறு தலித்துகள் உள்பட 36 பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை கோவில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளது ஏன் பாராட்டுதலுக்கு உரியது?

தற்போது பினரயி விஜயன் ஆட்சிக்காலத்தில் கேரளா திருவாங்கூர் தேவசம் வாரியம் ஆறு தலித்துகள் உள்பட 36 பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை கோவில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளது  ஏன் பாராட்டுதலுக்கு உரியது?

"1700 ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் மனு தர்ம விதிப்படி ஆட்சி புரிந்தார்கள்.

அப்போது கன்னியாகுமரி திருவாங்கூர் அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்தது.

மனுதர்ம விதி என்றால் சாதிக்கொடுமைகளின் உச்சவிதி என்று பொருள்.

மக்களை 18 வகைச் சாதியாகப் பிரித்தார்கள். இதில் சாணார் என்ற நாடார் இனத்தவர்கள் கடைசியாக 18 வது சாதியாகப் பட்டியலிடப்பட்டார்கள்.

பறையரைத் தொட்டால் தீட்டு, சாணாரைப் பார்த்தாலே தீட்டு என தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினத்தவர்கள்.

அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.  திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்.

சாணார் (நாடார்) மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால்தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.

1754-ல் திருவாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர்.

1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

பெண்களின் மார்புகளின் அளவுக்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டன. பொது இடங்களில் மட்டுமல்லாமல் எப்போதுமே அவர்கள் மார்பை மறைக்கக்கூடாது எனக் கட்டளை இடப்பட்டது. மீறினால் கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

மாடத்தி என்ற பெண்மணி மேலாடை அணிந்ததற்காக அவரை மாட்டுக்குப்பதிலாக  ஏரில் பூட்டி அடித்து ஓட்டிக் கொன்றார்கள். அப்போது மாடத்தி கர்ப்பிணி.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமலாக்கப்பட்டன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான்.

திருவனந்தபுரத்தின் அரண்மனை 15 குழந்தைகளின் பலிபீடத்தின்மீது கட்டப்பட்ட சரித்திரக் கருப்புப்புள்ளி.

அதே திருவாங்கூர் பெயரைத் தாங்கியுள்ள திருவாங்கூர் தேவசம் வாரியம்தான் தற்போது ஆறு தலித்துகள் உள்பட 36 பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களை கோவில் அர்ச்சகர்களாக்கி அறிவித்துள்ளது.

கேரளாவில் தலித்துகள் உள்பட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோர் கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது ஏன் பாராட்டுதலுக்குரியது என்பது இப்போது புரியக்கூடும்.




நல்லாசிரியர் என்பவர் ...


நல்லாசிரியர் என்பவர்...

பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் போகும் சாலையில் இருக்கிறது திருமுடிவாக்கம்.. உயர உயர அபார்ட்மென்டுகள். ஆயிரக் கணக்கான வீடுகள்! ஏரியா மொத்தமும் சொல்லிச் சொல்லி மாய்கிறது அந்தச் சம்பவம் பற்றி!

பிரைமரி ஸ்கூலில் மூன்றே மூன்று வருஷம் தனக்கு டீச்சராக இருந்த ராஜம்மா என்பவரை, 10 வருஷங்களாக நினைத்திருந்த தோடு, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் குஜராத்திலிருந்து வந்து அவரைப் பார்த்து, அவர் தோளிலேயே மரித்திருக்கிறது ஓர் அழகிய ரோஜா!

வைபவி விஜயலஷ்மி - இதுதான் அந்த மாணவியின் பெயர். கண்ணீருக்கும் கேவல்களுக்கும் இடையே, கோரமான அந்த நிஜத்தைப் பகிர்ந்துகொள்கிறார், ஆசிரியை ராஜம்மாள்.

‘‘இந்த இடம்தாங்க அந்தக் குழந்தை வந்து உட்கார்ந்திருந்தது... இதோ, இந்தத் தோள்லதான் சாய்ஞ்சு படுத்திருந்துச்சு. அதோட விரல்களைப் பிடிச்சபடி நான் கன்னத்தைத் தட்டிகொடுத்துட்டு இருந்தேன்.. அப்படியே என் தோள்ல சாய்ஞ்சபடியே உயிர் போயிடுச்சுங்க.. இப்போ வரை என்னால நம்ப முடியலை! எதுக்காக என் மேல அந்தக் குழந்தைக்கு அப்படியொரு பாசம்... என்ன கொடுத்தேன் நான்? ஒரு டீச்சரா மூணு வருஷம் நான் அதுகிட்ட அன்பு காட்டினதைத் தவிர வேற எதையும் பெரிசா செய்துடலை... ஆனா, அந்தக் குழந்தை எனக்குக் கொடுத்துட்டுப் போயிருக்கிற மரியாதை, கௌரவம்.. எப்பேர்ப் பட்டது? உலகத்தில் யாருக்காவது இப்படி நடந்திருக்குமா? நடந்ததுனு சொன்னால்கூட நம்ப மாட்டோமே!’’ மனசை ஆற்ற முடியாமல்,
குழந்தையைப் போல அரற்றுகிறார் ராஜம்மாள்.

‘‘2007-ம் வருஷம்.. நான் தாம்பரம் கேந்திரிய வித்யாலயா 2 (ஏர்ஃபோர்ஸ் ஸ்டேஷன்) ஸ்கூல்ல பிரைமரி செக்ஷன்ல வேலை பார்த்துட்டிருந்தேன். அங்கே முதல் வகுப்புக்கு எடுக்கிற அதே ஆசிரியைதான் மூணாவது வகுப்பு வரை. அதனால குழந்தைங்க நல்லா பழகி ஒட்டிக்குவாங்க. வைபவியும் அப்படித்தான்..

நார்மல் குழந்தைகளைவிட கொஞ்சம் பருமனா இருந்ததால், மத்த பசங்க அவளைக் கிண்டல் பண்ணுவாங்க. நான் அவகிட்ட பரிவா நடந்துக்குவேன். அதனால என்கிட்ட அந்தக் குழந்தைக்குக் கூடுதல் பிரியம். தன் லன்ச் பாக்ஸை பிரிச்சு, நான் ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு ‘நல்லாருக்கு’னு சொன்ன பிறகுதான் அது சாப்பிடும். என் புடவை நல்லாயிருந்தா முதல்ல ஓடி வந்து சொல்லும்! ‘உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு யார்’னு கேட்டாகூட, ‘ராஜ்மா மேம்’னு என் பேரைச் சொல்லும்.

வைபவியோட அப்பா ராம கிருஷ்ணராஜா, ஏர்ஃபோர்ஸ்ல விங் கமாண்டர்; அம்மா ப்ரியா ஹவுஸ் வொய்ஃப்! கல்யாணமாகி 10 வருஷங்கள் குழந்தையில்லாம, டில்லிக்குப் பக்கத்திலிருக்கிற வைஷ்ணவிதேவி கோயில்ல பிரார்த்தனை செய்து, முதல்ல பையன் வைஷ்ணவ் பிறந்திருக் கான். அடுத்ததுதான் வைபவி! அதனால வீட்டுல அந்த ரெண்டு குழந்தைகளும் அவங்களுக்கு ரொம்ப செல்லம்!

வைபவி தேர்டு ஸ்டாண்டர்டு முடிக்கிறப்போ, அவங்கப்பாவுக்கு அலகாபாத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. ‘போகவே மாட்டேன்’னு அடம் பிடிச்சு நின்னுது வைபவி. ‘ராஜ்மா மேமும் என்கூட வரணும்’னு ஒரே அழுகை! நான் வர முடியாதுங்கிற யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கத் தெரியாத வயசு! ‘எங்க அப்பா விங் கமாண்டர் தானே மேம்? பிரின்ஸிபால்கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கி உங்களையும் அங்கே கூட்டிட்டுப் போயிடுவேன்’னு அது சொன்னப்ப, அந்தப் பிஞ்சு இதயத்தின் பாசத்தில் வாயடைச்சுப் போயிட்டேன். அப்புறம் ஒரு வழியா, ‘ஃப்ளைட்ல இப்போ டிக்கெட் இல்லையாம்.. நாளைக்கு ஃப்ளைட்ல மேடம் வருவாங்க!’னு சொல்லி அவளை சமாதானப் படுத்தி, அனுப்பி வச்சோம்!

அங்கே போயும் ரொம்ப நாட்களுக்கு ‘என்ன இன்னும், மேம் வரலையே?’னு கேட்டுட்டே இருந்திருக்கா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லி சமாளிச்சிருக்காங்க. ஒரு கட்டத் துல அவளே புரிஞ்சுக்கிட்டா. அதுக்கப்புறம் போன்ல பேச ஆரம்பிச்சா!

வருஷா வருஷம் ஏப்ரல்ல அவ பிறந்த நாளுக்கு நான் வாழ்த்துச் சொல்வேன். என் பிறந்த நாளன்னிக்கு காலையில் வர்ற முதல் கால் அவளோடதாத்தான் இருக்கும். என்கிட்ட பேசும்போது எல்லாம் மறக்காம அவ கேட்கும் கேள்வி.. ‘ஏன் மேம் எந்த டீச்சருமே உங்களை மாதிரி இருக்க மாட்டேங் கிறாங்க?’ என்பதுதான். அவளோட அன்பை நினைச்சு எனக்குக் கண்ணீரே துளிர்க்கும். ‘எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங் கம்மா’ என்பதுபோல பதில் சொல்வேன். ‘யூ ஆர் ஸோ லவிங்! ஸோ ஸ்வீட்! ஐ லவ் யூ ராஜ்மா மேம்! யூ ஆர் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்!’ - இதெல்லாம் வைபவி அடிக்கடி சொல்ற வார்த்தைகள்.
எதுன்னாலும் நான் சொன்னா கேட்டுக்குவா. வீட்ல அவ ஏதாவது மருந்து சாப்பிடலைன்னா கூட அவங்க பாட்டி, எனக்கு போன் பண்ணுவாங்க. நான் சொன்னதும் சமர்த்தா சாப்பிட்டுடும் குழந்தை! அந்த அளவுக்கு ஏதோ ஒரு அட்மிரேஷன், அட்டாச்மென்ட்!

இன்னொரு விஷயம் கேட்டு நான் ஆடிப் போய்ட்டேன்... ‘டின்னருக்கு என்ன வேணும்’னு பாட்டி கேட்டா, ‘சப்பாத்தி வித் மை டீச்சர்’னு சொல்வாளாம். அவளுக்கு ராஜ்மா (பீன்ஸ்) ரொம்பப் பிடிக்கும். வீட்ல, அவளோட ரூம்ல நான் தேசிய நல்லாசிரியர் விருது வாங்கின போட்டோவை வச்சிருக்கிறதா அவங்க அம்மா சொல்வாங்க.

ஆச்சு.. கால ஓட்டத்தில் இப்படியே பத்து வருஷங்கள் ஓடிடுச்சு. வைபவி பத்தாவது படிச்சிட்டிருந்தா. போன வருஷம் அக்டோபர்னு நினைக்கிறேன்.. நான் போன்ல பேசினப்போ, அவ குரலே சரியில்லை. ஏதோ மேல் மூச்சு வாங்குற மாதிரி பேசினா. ‘குழந்தைக்கு ஏதோ உடம்புக்கு’னு தெரிஞ்சுது. வைபவியின் அப்பா கிட்ட பேசும்போது அவர் குரலும் சுரத்தில்லாம இருந்தது. என்னன்னு புரிஞ்சுக்க முடியல.

நவம்பர் மாசம் வெள்ளம் வந்தப்போ, நான் எப்படி இருக்கேன்னு கேக்கறதுக்காக பேசினாங்க. ரெண்டு தடவை வைபவி பேசினபோதும், ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசியிருக்கானு பின்னாலதான் தெரிஞ்சுது! அவளுக்கு கிட்னியில் பிரச்னை, டயாலிசிஸ் பண்ணிட்டிருக்காங்க என்பது வரை தகவல் சொன்னாங்க.

மனசு வலிச்சுது! ‘கடவுளே... ஏன் இந்தச் சின்னக் குழந்தையை இப்படி கஷ்டப்படுத்துற?’னு என் இஷ்ட தெய்வம் பெருமாள் கிட்ட வேண்டிக்கிட்டேன். அதுக்கு அடுத்த முறை பேசும்போது, ‘எனக்குக் குழந்தையைப் பார்க் கணும் போலிருக்கு!’னு சொல்லி, ஏர் டிக்கெட் எல்லாம் கூட ட்ரை பண்ணினேன். ஆனால், அவங்கப்பா ‘பொங்கலுக்கு சென்னை வந்தாலும் வருவோம் மேடம். வைபவியும் உங்களைப் பார்க்கணும்னு தினமும் சொல்லிட்டே இருக்கு!’ என்றார். அதனால நான் கிளம்பல.

ஆனா, பொங்கலுக்கு வரல. அதுக்கப்புறம், இந்த பிப்ரவரி மாசம் 6-ம் தேதி.. திடீர்னு வைபவிகிட்டே இருந்து போன்! என்னோட அட்ரஸைக் கேட்டா. எதுக்குனு கேட்டப்போ, அப்பா ஏதோ கொரியர் அனுப்பணும்னு சொன்னாங்கன்னு சொன்னாள். ஆனா, என்கிட்ட சொல்லாம சர்ப்ரைஸா என் முன்னால வந்து நிற்கணும்கிறது அவளோட திட்டமா இருந்திருக்கு.

7-ம் தேதி பார்த்தா, கார்ல வந்து இறங்குறாங்க. வைபவியும், அவ பேரன்ட்ஸும். அப்படியே அவளைக் கட்டிப் பிடிச்சி, உச்சி முகர்ந்தேன். டயாலிசிஸ் பண்ணின அடையாளமா கழுத்துல தழும்பு. துப்பட்டாவால அதை மறைச்சிருந்தா. முகம் லேசாக உப்பியதுபோல இருந்துச்சு. என்னைப் பார்த்த சந்தோஷத்தில் நோயைக்கூட மறந்துட்டு, முகத்தில் அவ்வளவு ஒரு மலர்ச்சி யோட பேசிட்டிருந்தா.. அவளோட டென்த் எக்ஸாம்ஸ் பத்தி சொன்னா. ‘நான் நல்லா எழுதி உங்க ஸ்டூடன்ட்னு ப்ரூவ் ப்ண்ணுவேன்’னு சொன்னா.

எல்லோருக்கும் டீ போட்டேன். வைபவிக்கும் கொடுத்தேன். அரை டம்ளர் குடிச்சது குழந்தை. கொஞ்ச நேரம் படுத்தது. அப்புறம், படுத்திருக்க முடியலனு எழுந்து உட்கார்ந்தது. என்னோட கட்டில்ல, காலைக் கீழே தொங்கப் போட்டுக்கிட்டு அவள் நடுவிலே யும் நானும் அவளோட அம்மாவும் ரெண்டு பக்கத்துலயும் உக்கார்ந் திருந்தோம். அவளுக்கு முன்னாடி அழக்கூடாதுனு அவ பெற்றோர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல், பல்லைக் கடிச்சிக்கிட்டு சிரிச்சபடி இருந்தாங்க. அது மனசை ரொம்ப சங்கடப்படுத்திச்சு.

‘எனக்கு ஞாபகம் இருக்கு மேம்.. தாம்பரம்ல ஸ்கூல் டே ஃபங்க்ஷன்ல பிங்க் டிரெஸ் போட்டு என்னை ஆட வச்சீங்க!’னு சொல்லி சிரிச்சா. ‘ஐ மிஸ் யூ மேம்’னு கட்டிக்கிட்டா.

பேசிட்டு இருக்கும்போதே ‘டயர்டா இருக்கு மேம்’னு சொல்லிக்கிட்டே என் தோள்ல சாஞ்சுக்கிட்டா! லேசா மூச்சுத் திணறல் இருந்ததுபோல.. மூச்சு விட்டா! தண்ணி கேட்டா.. கொடுத்ததும் வாங்கி ஒரு மடக்கு குடிச்சா! என் வலது கையால் அவளோட தோள்களை அணைச்சதுபோல பிடிச்சிருந் தேன். இன்னொரு கையால் கன்னத்தில் தட்டிக் கொடுத்துட்டு இருந்தேன். பேச்சே இல்லை! அவங்க அம்மா, ‘பேபி, பேபி’னு கூப்பிட்டுப் பார்த்தாங்க.

நானும் பதற்றமாகி ‘வைபவி... பாப்பா’னு கன்னத்தைத் தட்டிப் பார்த்தேன். எனக்கு உச்சந்தலை யிலிருந்து உள்ளங்கால் வரை என்னவோ ஓடின மாதிரி உணர்வு! அப்படியே படுக்க வச்சோம்! மூக்கில் லேசா ஒரு திரவம் வடிஞ்சிருந்தது. நாக்கின் நுனி லேசா வெளியில் தள்ளியபடி இருக்க, உடலில் எந்த அசைவும் இல்லை. எனக்குள்ள ‘சிலீர்’னு என்னமோ பண்ணுச்சு! ‘விபரீதம்’னு மூளையில் உறைச்சது.

அடிச்சுப் பிடிச்சு கீழிறங்கி ஓடி, ஒரு டாக்டரைக் கூட்டிட்டு வந்தேன். டாக்டர் வந்து செயற்கை முறை சுவாசத்துக்கு முயற்சி செய்து பார்த்தாங்க. கடைசியில், நாடியைப் பிடிச்சிப் பார்த்துட்டு, உதட்டைப் பிதுக்கினாங்க!

‘ஐயோ.. கடவுளே!’னு நான் கதறின அந்த நிமிஷத்திலிருந்து அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் ஏதோ கனவு போலத்தான் இருக்கு!

ஆம்புலன்ஸ் வந்தது. வேறொரு பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ப் பார்த்தாங்க. ‘வைபவி உயிரோடு இல்லை’ங்கற கொடுமையான நிஜத்தை அவங்களும் உறுதிப்படுத்தினாங்க. அங்கேயிருந்து வைபவியை, கொரட்டூர்ல இருக்குற அவங்க பெரியப்பா வீட்டுக்குக் கொண்டு போனோம். ஒரு ஜடம் மாதிரி நான் அந்தக் குழந்தையின் முகத்தையே பார்த்தபடி இருக்க, வந்தவங்க எல்லாம், ‘யார் அந்த மேடம்?’னும் ‘இவங்கதான் அந்த டீச்சரா?’னும் என்னைப் பார்த்துட்டுப் போனாங்க. ‘இவங்களைப் பார்க்கத்தான் அங்கேயிருந்து வந்துச்சாம்.. இந்த மேடம்னா உசுராம்!’னு எல்லாரும் சொல்லச் சொல்ல எனக்கு கட்டுப் படுத்த முடியாமல் அழுகை!

அடுத்த நாள் ஃப்ளைட்ல வந்திறங்கிய பாட்டியும் வைபவி யின் அண்ணாவும் கதறிய கதறல்.. ‘ராஜ்மா மேடத்தைப் பார்த்துட்டு வந்துடறேன் பாட்டினு சொன்னியே கண்ணு! எங்கேடா போன? இதோ பாரு உன்னோட ராஜ்மா... எழுந்து வாடா!’னு அந்த அம்மா ஓலமிட்டது இன்னும் என் காதுகளை விட்டுப் போகலை!’’ அந்த நிகழ்வை அப்படியே கண்களில் காட்டிக் கலங்குகிறார் ராஜம்மாள்.

‘‘என்ன பந்தம் இது? எந்த ஜென்மத்து பந்தம்? விட்ட குறை தொட்ட குறையாக பூர்வ ஜென்மத்தில் விட்டுப் போனதை நிறைவு செய்ய வந்த தேவதை... இனி என்னோடு எப்போதும் இருந்து என்னை வழி நடத்தப் போகும் என் குட்டி தேவதை! அந்தக் குழந்தையை இழந்து தவிக்கிற பெற்றோருக்கும், அண்ணனுக்கும், பாட்டிக்கும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் தைரியத்தைக் கடவுள் தரணும்!’’ என்கிறவருக்கு வைபவி தினமும் கனவில் வருகிறாளாம்.

‘வைபவி... என் செல்லமே! உனக்கு அன்பைத் தவிர வேற எதையுமே நான் கொடுக்கலையே! ஆனா.. நீ எனக்குக் கொடுத்திருக் கிறது மிகப் பெரிய கௌரவம். நான் வாங்கின நல்லாசிரியர் விருதெல்லாம், நீ கொடுத்திருக்கும் இந்த விருதுக்கு முன்னால் எம்மாத்திரம்? இந்தக் கடனை நான் எப்படிக் கழிப்பேன்? மீண்டும் பிறந்து வா கண்ணே! உனக்கு வகுப்பெடுக்கக் காத்திருக் கேன் இந்த ராஜ்மா!’ எனத் தான் எழுதி வைத்திருக்கும் வரிகளை நமக்குக் காட்டுகிறார் ராஜம்மாள்.

நம் விழிகளின் நீர்த்திரையால் கலைந்து தெரிகின்றன எழுத்துகள்!
- பிரேமா நாராயணன்

இந்த நேசம் வந்தது எப்படி?

இத்தனை பாசத்தையும் நேசத்தையும் ராஜம்மாள் ஈட்டியது எப்படி? அவர் குழந்தைகளிடம் காட்டுவது அப்படி என்ன ஸ்பெஷல் டிரீட்மென்ட்?

‘‘குழந்தைகளின் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய சொத்து! பொதுவாக ஆசிரியர் & மாணவி உறவு, அந்தப் பள்ளியை விட்டுப் போகும் வரைதான் இருக்கும். பெற்றோரும் அப்படித்தான். ‘நம்ம குழந்தையை நல்லா பார்த்துக்கணுமே’ என்று ஒரு பள்ளியில் படிக்கும் வரைதான் ஆசிரியர்களிடம் நன்றாகப் பழகுவார்கள். ஆனால், என் விஷயத்தில் யாரும் அப்படியல்ல. நான் போடும் ஒரு கமென்ட்டையோ, ஸ்டாரையோகூட குழந்தைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். காரணம், ‘யூ ஆர் டீர்ச்சர்’ஸ் பிரைடு’ என்பது போன்ற இணக்கமான கமென்ட்டுகளை எழுதுவேன். அதனால் எந்தக் குழந்தையுமே என்னை விட்டு விலகினதில்லை. *எந்தக் குழந்தையையும், ‘நீ அன்ஃபிட்’, ‘முட்டாள்’, ‘லாயக்கில்லாதவன்’ என்றெல்லாம் நான் ஒதுக்கியதில்லை.*

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு..

*Every child is a master piece!*
*Every child is the Master’s piece!*

இது என்னுடைய ஃபேவரைட் கோட்!

நன்கு படித்து, நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களையே பாராட்ட வேண்டும் என்பதில்லை.

*நன்கு படிக்காத மற்ற குழந்தைகளையும் பாராட்ட வேண்டும். அவர்களுக்குள் என்ன திறமை இருக்கும் என்பது நமக்கு இப்போது தெரியாது. நம் பாராட்டுகளே அதைக் கண்டுபிடிக்க உதவும்!’’*

என்கிறார் இந்த நல்லாசிரியர் NilgiriRaji Rajammal.

தென்னிந்தியாவில் காலூன்ற ரூ.4,800 கோடியில் பாஜகவின் ஆபரேஷன் திராவிடம் தெலுங்கு நடிகர் சிவாஜி பகீர்

தென்னிந்தியாவில் காலூன்ற ரூ.4,800 கோடியில் பாஜகவின் ஆபரேஷன் திராவிடம் தெலுங்கு நடிகர் சிவாஜி பகீர்

விஜயவாடா : 2019 மக்களவைத் தேர்தலில் தென்இந்தியாவை வளைக்க ரூ. 4,800 கோடியில் ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டத்தை தேசிய கட்சி ஒன்று திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, தமிழில் 'காதல் சுகமானது' என்ற படத்திலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்துள்ளார்,
சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களில், மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என குரல் கொடுத்தார்.
பாஜகவில் சேர்ந்து, மாநிலத்தை பிரித்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்தார்.

சில மாதங்கள் வரை எந்த கட்சியிலும் இல்லாமல் சமூக பிரச்சினைகளை மட்டும் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த 20 நிமிட வீடியோவில் சிவாஜி தேசிய கட்சிகள் எப்படி மாநிலக் கட்சிகளின் உதவியுடன் தென் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற குறி வைக்கிறது என்பதை விவரித்துள்ளார்.

*பாஜகவின் ஆபரேஷன் திராவிடம்*

ஓராண்டுக்கு முன்னர் தேசிய கட்சியை சேர்ந்த கல்யாண்ஜியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் இந்த ஆபரேஷன் திராவிடம் பற்றி கேட்டேன்.
இதன் முக்கிய நோக்கமே 2019ல் தென் இந்தியா முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்று கூறினார்.

*தமிழகத்திற்கு ஆபரேஷன் ராவணா*

தென் மாநிலங்களை வகை பிரித்து இதற்கு பெயரிட்டுள்ளனர். அதாவது ஆந்திரா, தெலுங்கானாவிற்கு '
ஆபரேஷன் கருடா',

கேரளா, தமிழ்நாட்டிற்கு '
ஆபரேஷன் ராவணா',

 கர்நாடகாவிற்கு 'ஆபரேஷன் குமாரா' என பெயர்வைத்துள்ளது பாஜக என்றும் சிவாஜி கூறியுள்ளார்

*பாஜகவின் ரகசிய உளவாளிகள்*

இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்ஸ்' எனப்படும் ரகசிய நபர்கள் மூலம் பாஜக, 4 மாநிலங்களில் அரசியல் சித்து விளையாட்டுகள் தொடங்கியதன் மூலம் கட்சிகளில் உட்பூசல் ஏற்படும்.

 பலர் தாய் கட்சிகளில் இருந்து வெளியேறுவார்கள்.
பலர் புதிய கட்சிகளை தொடங்குவார்கள்.
மக்களைக் குழப்பும் பல தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவார்கள்.
 இதற்கென தனி அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க
ரூ. 4,800 கோடியை ஒதுக்கி செலவிட்டு வருகிறது.

*ஆந்திராவில் விரைவில் கலவரத்       தீ*

பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சிலர் மயங்கிப் போவார்கள்.
குறிப்பாக ஆந்திராவில் பெரும் கலவரம் நடக்க உள்ளது.

ஒடிசா மற்றும் பீஹார் மாநிலங்களில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை அரங்கேற்றிய பின்னர், ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தற்போதைய ஆந்திர ஆட்சியை கலைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*கட்டம் கட்டப்படும் சந்திரபாபு நாயுடு*

முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதிவாகும்.
ஒரு கட்டத்தில் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடப்படும்.

இதன் மூலம் தெலுங்கு தேச கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கி சந்திரபாபு நாயுடுவை பொருளாதாரரீதியாகவும் நிலை குலைய செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

*விழித்துக்கொள்ளுங்கள் மக்களே*

கடந்த 6 மாதங்களாக நான் டெல்லியில் தங்கி இருந்தபோது ஸ்லீப்பர் செல்லில் உள்ளவர்களில் ஒருவர் இந்த தகவல்களை எனக்கு தெரிவித்தார்.

எனக்கு தெரிந்து அரசியல் பூதாகர விஷயங்களை ஆந்திர மக்களிடம் தெரிவிக்காவிட்டால் அவர்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள்.

 ஆந்திரா மட்டுமின்றி,
தென் மாநிலங்களில் நம்பக்கூட முடியாத பல செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அந்த கீழ்த்தரமான செயல்களில் கூட ஈடுபடவும் பாஜக தயங்காது.

 பொதுமக்கள் அந்த தேசிய கட்சியின் சதியில் விழாமல் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் சிவாஜி கூறியுள்ளார்.

வெள்ளி, 23 மார்ச், 2018

வங்கிகள் பற்றிய திரு. சமஸ் அவர்கள் தி இந்து வில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை


வங்கிகள் பற்றிய திரு. சமஸ் அவர்கள் தி இந்து வில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை

மக்கள் சேமிப்பையெல்லாம் வங்கிகளுக்குள் கொண்டுவந்துவிட்டு தனியார்மயத்தைப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்!

நீரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது? சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். மேலாளராக நண்பர் இருக்கும் ஒரு வங்கியில், “ஒரு மணி நேரம் இங்கு உட்கார்ந்திருந்தால், சூழலை நீங்களே புரிந்துகொள்ளலாம்” என்றார். கொஞ்சம் அந்தக் காலத்து மனிதர் என்பதோடு, பெரிய கூட்டம் நெருக்கியடிக்கும் வங்கிக் கிளையும் அல்ல அதுவென்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட உறவு உண்டு. அந்த ஓரிரு மணி நேரத்தில், கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர் அவரிடம் வந்து பேசிவிட்டு போனார்கள். பெரும்பாலானோர் கேட்டது, “ஏன் சார், நம்ம பேங்காவது பாதுகாப்பா இருக்கா? பேசாம பணத்தையெல்லாம் எடுத்து வேற எதுலேயாவது முதலீடு பண்ணிறலாமான்னு தோணுது!”

அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த ஒரு பெண், தன்னுடைய வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் முடிவோடு வந்திருந்தார். அவரைச் சமாளித்து, திருப்பியனுப்ப மட்டும் நண்பருக்கு அரை மணி நேரம் ஆனது. நண்பர் அசந்துபோனார். “இதுரைக்கும் இல்லாத அச்சம், என் வாழ்நாள்ல பார்க்காதது மக்கள்கிடட்ட இப்போ உருவாகியிருக்கு!”

அங்கிருந்து திரும்பிய பின் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டில் வைப்புத்தொகையில் பெருத்த சேதாரத்தைச் சந்திக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் பலர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றுவருவதாகவும் அங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் மிகப் பெரிய வங்கி ஊழல் இது. ஊழல் என்பதைக் காட்டிலும் சட்டப்பூர்வக் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும் எழுதிக்கொண்டிருக்கிறபடி இது வெறும் ரூ.12,600 கோடி இழப்புடன் முடியப்போவதில்லை. வங்கிகளை இந்திரா காந்தி நாட்டுடமையாக்கிய பின்னரான, இந்த அரை நூற்றாண்டில் பொதுத்துறை வங்கிகள் சேர்த்திருக்கும் பெரும் சொத்தான நம்பகத்தன்மையை இந்த ஊழல் சூறையாடிக்கொண்டிருக்கிறது. கொடுமை, எந்த அரசாங்கம் இந்த நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க வேண்டுமோ, அதுவே பொதுத்துறை வங்கிகளை மானபங்கப்படுத்திவருகிறது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் முதலியோரெல்லாம், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம்” என்று பேசிவருவது பொறுப்பின்மையின் உச்சம்.

நமக்கு ஒரு கடை இருக்கிறது. நீண்ட காலம் நல்ல வருமானம் தந்த கடை. காலத்துக்கும் உறுதுணையாக இருக்கவல்ல கடை. கொஞ்ச காலமாக நஷ்டம் காட்டுகிறது. “நிர்வாகம் சரியில்லை அதுதான் காரணம்” என்கிறார் ஒருவர். “சரியப்பா, இனி நீங்கள்தான் நிர்வாகி. மேம்படுத்திக்காட்டுங்கள்” என்று அவரையே கல்லாவில் உட்கார வைத்துவிடுகிறோம். ஒரு நல்ல நிர்வாகி என்ன செய்ய வேண்டும்? நிர்வாகத்தைச் செம்மையாக்கி, லாபத்தை நோக்கி கடையைத் திருப்ப வேண்டும். அது நடக்கவில்லை. “கடையை விற்று காசாக்கித் தின்றுவிடலாம்” என்கிறார் புரிய நிர்வாகி. “இதுதான் சீர்திருத்தம். இந்த முடிவெடுக்க ஒரு நிர்வாகிக்குத் துணிச்சல் வேண்டும்!” என்று கூடவே ஜல்லியடிக்கிறது ஒரு கும்பல். உடைமையாளர்கள் நாம் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குகிறதா? விற்றுவிடு! பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கிறதா? விற்றுவிடு! கோல் இந்தியா லாபத்தில் போகிறதா? அதன் பங்குகளையும் விற்றுவிடு! கேட்கவே நாராசமாய் இருக்கிறது. இன்றைக்குக் காலையில் கேள்விப்பட்ட இரு செய்திகள் இவை. கதர் கிராம வாரியத் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் 7 லட்சம் பேர் கடந்த ஆண்டில் வேலையை இழந்திருக்கிறார்கள். ரயில்வே துறை புதிதாகக் கொண்டுவரும் ஏற்பாட்டின்படி, இருப்புப் பாதைப் பராமரிப்புப் பணிக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்படவிருந்த 65,000 வேலைகள் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. புதிதாக ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூடக் கட்டியெழுப்ப முடியாதவர்கள், நேரடியாக அரசுத் துறையிலிருந்து ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைக்கூட உருவாக்க முடியாதவர்கள், தேசத்தின் நவநிர்மாண வளர்ச்சிக்காக அப்படி கட்டியெழுப்பப்பட்ட ஒவ்வொன்றையும் கை மாற்றிவிடத் துடிக்கிறார்கள்; இருக்கிற வேலைவாய்ப்புகளைக் குறைத்திட நினைக்கிறார்கள் என்றால், இவர்கள் யார் நலனுக்காக இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்? இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

ஊழலைத் துளியும் சகித்துக்கொள்ள முடியாத அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த மோடி அரசின் ஆட்சியில்தான், இந்த மாபெரும் ஊழலின் ஒட்டுமொத்த பலிகடாக்களாகவும் கீழ்நிலை ஊழியர்களை உருமாற்றும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கீழ்நிலை வங்கி ஊழியர்களைப் பணிமாற்றம் செய்வதால் என்ன பெரிய மாற்றங்கள் நடந்துவிடும்? இந்த ஊழலுக்கான மையக் காரணம் வங்கிகளின் உரிமையாளர் அரசா அல்லது தனியாரா என்பதில் இல்லை; ரிசர்வ் வங்கியின் தவறான கொள்கைகளிலும் அரசின் கண்காணிப்பின்மையிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும், பெருமுதலாளிகள் - ஆட்சியாளர்கள் இடையிலான கள்ள உறவிலும் இருக்கிறது. இந்தியன் வங்கி சரிவைச் சந்தித்தபோது கசிந்த கதைகளையும் ஊழலில் அடிபட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களையும் இன்னமும் நாடு மறந்துவிடவில்லை. இவ்வளவு பெரிய தொகை உயர்நிலை நிர்வாகத்துக்குத் தெரியாமல், தணிக்கையாளர்கள் கண்களில் படாமல் எப்படித் தொடர்ந்து நடந்திருக்க முடியும் என்னும் எளிய கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை.

ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதி அமைச்சர், பிரதமர் ஒருவரும் இதுபற்றிப் பேசவில்லை. எல்லாவற்றையும்விடக் கொடுமை இவைபற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள், காட்டிவரும் மென்போக்கும், குற்றவாளிகளை வரலாற்றிலிருந்து தேட முற்படும் அறிவுஜீவிகளின் முனைப்பும்! எனக்கு மோடிகள், அருண் ஜேட்லிகளைக் காட்டிலும், “இன்னும் ஏன் பொதுத்துறை நிறுவனங்களை அரசு கையில் வைத்திருக்கிறது? விற்றிடு! விற்றிடு!” என்று கூப்பாடு போடும் சேகர் குப்தாக்கள், அர்னப் கோஸ்வாமிகள் அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.

அமைப்புக்கு கொடி பிடித்து, அமைப்பின் குற்றங்களை எப்படியாவது நியாயப்படுத்தி தன்னைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திக்கொள்ளும் கேவலம் அறிவுத்தளத்தில் எல்லா காலங்களிலும் நடப்பது. நம் காலத்தின் அடுத்தகட்ட இழிநிலை, அமைப்பின் அயோக்கியத்தனத்துக்கான முன்கூட்டிய ஒப்புதலை, அதற்கு உகந்த சூழலை மக்களிடம் உற்பத்தி செய்யும் வேலையை அறிவுஜீவிகள் தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டிருப்பது. ஒருநாள் இப்படியும்கூட எழுதுவார்கள், “எடையைக் குறைக்க வேண்டும் என்றால், தலையை வெட்டிக்கொள்வது நல்லது. தங்கள் எடையைச் சுமக்க முடியாமல் மக்கள் அல்லலுறுகிறார்கள்; நோய்க்கு ஆளாகிறர்கள். தேச நலன் கருதி அவர்களுடைய தலையை அரசாங்கம் வெட்டி உதவ வேண்டும்! ஒரு துணிச்சலான ஆட்சியாளரால்தான் இதைச் செய்ய முடியும்!”

இந்திராவுக்கு இந்திய மக்கள் மனதில் இன்னமும் ஈரமான ஒரு இடமும் இருக்கிறது என்றால், அது ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வைக் குறைக்க அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கானதாகவே இருக்கும். நிறைய செய்ய நினைத்தார். மாற்றுக்குரல்களைக் கவனத்தில் கொள்ள முடியாத அவருடைய இயல்பின் காரணமாக, உருப்படியான யோசனைகளுக்குக் காது கொடுக்காமலேயே தோற்றுப்போனார். எப்படிப் பார்த்தாலும் வங்கிகளை தேசியமயமாக்க 1969-ல் இந்திரா எடுத்த நடவடிக்கை அசலான துணிச்சல். பொதுத்துறை வங்கிகளில் இன்று நடந்துகொண்டிருக்கும் மோசடிகளுக்கு இந்திராவின் நாட்டுடமையாக்க நடவடிக்கையை காரணமாகப் பேசுவது, மடத்தனம் மட்டுமல்ல; கடைந்தெடுத்த வரலாற்றுப் புரட்டுமாகும்.

இந்திரா ஏன் வங்கிகளை நாட்டுடமையாக்கினார்? 1. அதுவரையில் இந்நாட்டின் வங்கிகள் பெருமளவில் மேல்தட்டு - மேல்சாதிக்காரர்களுக்கானவையாகவே இருந்தன. 2. சென்ட்ரல் வங்கி என்றால் டாடா குழுமம், யூகோ வங்கி என்றால் பிர்லா குழுமம், கனரா வங்கி என்றால் பை குழுமம் என்று ஒவ்வொரு வங்கியையும் ஒவ்வொரு தொழில் குழுமங்கள் தம் கையில் வைத்துக்கொண்டு ஆடின. 3. இந்நாட்டின் உற்பத்தியில், அன்றைய தேதியில் 44% பங்களிப்பைக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு, வங்கிகள் அளிக்கும் மொத்தக் கடன்களில் 2% கடன்கூட போய்ச்சேரவில்லை. 4. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, வங்கிகள் எந்நேரமும் திவாலாகலாம் என்றிருந்த பாதுகாப்பற்ற சூழல். சுதந்திர இந்தியாவில் வங்கிகள் நாட்டுடைமையாக்கம் செய்யப்படும் வரையிலான காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 35 வங்கிகள் திவாலாகிக்கொண்டிருந்தன. வங்கிகளை இந்திரா நாட்டுடைமையாக்கிய பின்னரே, மக்களின் முதலீடுகளுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு கிடைத்தது. வங்கிகள் அளிக்கும் மொத்த கடன்களில் குறைந்தபட்சம் 18% விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. சாமானிய மக்கள் வங்கிகளுக்குள் நுழைய முடிந்தது.

பணமதிப்புநீக்கம் போன்ற ஒரு பகாசுர நடவடிக்கைக்குப் பின், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் வங்கிச் செயல்பாட்டோடு பொருத்தும் வேலைகளை முடுக்கி, மக்களின் எல்லா சேமிப்புகளையும் சுரண்டி வங்கிகளில் போட வைக்கும் நிர்பந்தங்களை ஒவ்வொரு நாளும் உருவாக்கி, கடைசியில் அவர்களுடைய கடைசி நம்பிக்கையாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று பேசுவது திட்டமிட்ட கொள்ளைக்கான அறைகூவலேயன்றி வேறு அல்ல. கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணைந்த அவர்களது சேமிப்பை, அவர்களுடைய உழைப்பிலிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த ரத்தத்தை பொதுத்துறை வசமிடமிருந்து தனியார் கைக்கு மடை மாற்றுவதற்குப் பெயர்தான் திறமையான நிர்வாகம், அந்த முடிவை எடுப்பதற்குப் பெயர்தான் நிர்வாகத் துணிச்சல் என்று எவரேனும் சொல்வார்கள் என்றால், மனம் கொதிக்கும் மக்களில் ஒருவனாக எழுதுகிறேன்: அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்குச் சமானம்!

- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

கழிப்பறை கட்டில்


கழிப்பறை கட்டில்

முதியவர்கள், உடல்நலமில்லாதவர்களின் முக்கிய பிரச்னை படுக்கையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பது.

என்னதான் பிள்ளைகளானாலும், உடன் பிறப்பானாலும், மனைவியானாலும், தாயானாலும்,

அவர்கள் முகம் சுழிக்காமல் பார்த்துக்
கொண்டாலும்,

படுக்கையிலேயே இயற்கை அழைப்புகளை கவனித்து அதை சுத்தம் செய்வது என்பது

கவனித்துக்
கொள்பவருக்கு மட்டுமல்ல,

படுக்கையில் இருப்பவருக்கும்

சங்கடமான விஷயம்.

*இதற்கு தீர்வாக* தென்காசியைச் சேர்ந்த *வெல்டர் சரவணமுத்து* கழிப்பறை கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளார்!

இதை யாருடைய உதவியுமின்றி படுக்கையில் இருப்பவரே பயன்படுத்தலாம். மட்டுமல்ல.

1) தண்ணீர் குழாய்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிலில் படுத்த நிலையிலேயே சுத்தமும் செய்து கொள்ளலாம்.

“பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தென்காசிலதான்.

அப்பா சண்முகம், ஆட்டோ மெக்கானிக்.

நானும் காருக்கெல்லாம் டிங்கரிங் பார்த்திருக்கேன்.

படிச்சது மூணாவது வரைதான்.

அதுக்காக இப்படியே காலத்தை ஓட்டிடலாம்னு நினைக்கலை.

*சொந்தமா ஏதாவது செய்யணும்னு நினைச்சேன்.*

*அப்படி ஆரம்பிச்சதுதான் வெல்டிங்.*

இன்ஜினியரிங் படிக்கிற பசங்க புராஜெக்ட் செய்யணும்னு வருவாங்க.

அவங்க ஐடியாக்களுக்கு தகுந்தா மாதிரி எலெக்ட்ரிக் வேலைகள் செய்து கொடுப்பேன்.

அப்படி செஞ்சதுல நிறைய பரிசுகள் வாங்கியிருக்கு.

 ‘இதே மாதிரி நாம பரிசு வாங்க முடியாதா’னு நண்பர்கள்கிட்ட கேட்டேன்.

 ‘உனக்கு படிப்பறிவே இல்லை.

உனக்கெதுக்கு இந்த ஆசை’னு கிண்டல் செஞ்சாங்க...’’ என்று சிரிக்கும் சரவணமுத்து

*அந்த கிண்டலையே சவாலாக ஏற்றிருக்கிறார்.*

 ‘‘இந்த நேரத்துல என் மனைவி யூட்ரெஸ் ஆபரேஷன் செஞ்சு 20 நாள்கள் படுக்கைலயே இருந்தாங்க.

என் மாமியார்தான் அவங்களை பார்த்துகிட்டாங்க.

அப்ப இரண்டு பேருமே கஷ்டமும் வருத்தமும் பட்டதை கண்ணால பார்த்தேன்.

அப்பதான்(Blessing in disgiuse) வயசானவங்களும், உடல்நிலை சரி
யில்லாதவங்களும் எந்தளவுக்கு சங்கடத்தை அனுபவிப்பாங்கனு தோணுச்சு.

*இதுக்கு நம்மால ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சு உருவாக்கினது தான் இந்தக் *கழிப்பறை கட்டில்*


என்கிட்ட இருந்த பொருட்களை வைச்சு இதை உருவாக்கினேன்.

இதைப் பார்த்துட்டு சென்னையைச் சேர்ந்த குருமூர்த்தி, *(திருப்பு முனை சம்பவம்)* தன் அம்மாவுக்காக இன்னும் கொஞ்சம் வசதிகளோட செய்து தரச் சொன்னார்.

*அதுமாதிரியே செஞ்சு முடிச்சதும் நம்பிக்கை வந்தது.*

1) இது பார்க்க சாதாரண கட்டில் மாதிரிதான் இருக்கும்.

2) ஒரு சின்ன ஸ்விட்ச் போர்டு இணைச்சிருப்பேன்.

3) அதுல டவுன் பட்டனை அழுத்தினா கட்டிலுக்கு நடுவுல கழிப்பறை வடிவ கதவு திறக்கும்.

 4) அதுலயே குழாய்கள் இணைச்சிருப்பேன். ஃபோர்ஸா தண்ணீரும் வரும்.

5) பயன்படுத்திட்டு க்ளோஸ் பட்டனை அழுத்தினா நேரடியா கழிவுகள் கழிப்பறைக்கு போயிடும்.

6) டியூப்பை மட்டும் எங்க, எப்படின்னு நாம சரியா பொருத்திக்கணும்.

7) ஸ்விட்ச் பாக்ஸ் கூட மூணு மீட்டர் நீளம் உடையதா, கட்டில சுத்தி எங்க வேணும்னாலும் கொண்டு போற மாதிரி இருக்கும்.

8) அதுல ஒரு சின்ன ஷவர் கூட இருக்கு. பயன்படுத்திட்டு சுத்தமும் செய்துக்கலாம்.

*இந்தக் கட்டில் மட்டும் இல்ல;*

*கரண்ட் போனாலும் எழுதற மாதிரி லைட் பேனா,*

*சாக்கடை சுத்தம் செய்யற மக்களுக்காக காற்ற சுத்தம் செய்து ஃபில்டர் பண்ணி சுவாசிக்கக் கூடிய மாஸ்க்...*

இதையெல்லாம் செய்திருக்கேன்.

*இந்த மாஸ்க்கை வண்டில போறவங்க கூட பயன்படுத்தலாம்*.

*தேங்காய் உரிக்க, துருவ*

இப்படி எல்லாத்துக்கும் மெஷின் செய்திருக்கேன்.

ஆனா, எங்க, எப்படி பதிவு செய்து பேடன்ட் ரைட்ஸ் வாங்கணும்னு தெரியாததால

எல்லாமே மாடல் அளவுலதான் இருக்கு.

*வேற சில ஐடியா கூட இருக்கு.*

என்ன பயன்? வசதி இல்லை. உதவி கிடைச்சா நல்லா இருக்கும்...’’ ஏக்கமாகச் சொல்கிறார் இந்த *படிக்காத மேதை.

Address of Innovator :
Mr. Saravanamuthu
Welding Technician
C/o. Nanchil Engineering Lathe Works
8B, Hindu College Road
Chettikulam,  Nagercoil -  629002, Kanyakumari District, Tamilnadu
Cell : 95854 75039

மதி இன்றைய தலைப்பு செய்திகள்-20

மதி இன்றைய தலைப்பு செய்திகள்-20


*தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் : ரஜினி*

சென்னை: தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியுள்ளார். ஈரோடு மாவட்ட ரசிகர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் ரஜினி பேசியுள்ளார். மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

*ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது : டெல்லி ஐகோர்ட்*



டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தகுதி நீக்க வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இரட்டை பதவி வகித்ததாக கூறி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டது.

*எண்ணூர்-தூத்துக்குடி வரை கேஸ் பைப்லைன் திட்டம் : மத்திய அரசு அனுமதி*

சென்னை: எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை கேஸ் பைப்லைன் பதிக்கும் திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு அரசாணை அளித்து, அனுமதி தந்துள்ளது. எண்ணூர்-பெங்களூர்-புதுச்சேரி-நாகை-மதுரை-தூத்துக்குடி இடையே நிலத்தை கையகப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1004 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

*ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : கார்த்திக் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்*

டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான் கார்த்திக் சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம்   ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

*ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: நிபந்தனை ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்*



புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்தை பிணயத்தொகையாக செலுத்தவும், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*பரமத்தி வேலூரில் இரும்புக் கடையில் வருமான வரித்துறை*

நாமக்கல்:பரமத்தி வேலூரில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான இரும்புக் கடையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

*விருத்தாசலம் அருகே போலி மருத்துவர் கைது*

கடலூர்: விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். 10ம் வகுப்பு படித்து விட்டு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் சங்கர் கைது செய்யப்பட்டார்.

*காவிரி வாரியம் அமைக்காவிட்டால் கடையடைப்பு நடத்த திட்டம் : விக்கிரமராஜா*

ஈரோடு: 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடையடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.

*அரக்கோணம் அருகே கல்லூரி சுவரில் இருந்த அம்பேத்கர் படம் மீது பெயின்ட் பூசி சேதம்*

திருவள்ளூர் : அரக்கோணம் அருகே கல்லூரி சுவரில் இருந்த அம்பேத்கர் படம் மீது பெயின்ட் பூசி சேதப்படுத்தியுள்ளனர் பத்மாபுரம் தனியார் கல்லூரி சுற்றுச்சுவரில் வரைந்திருந்த உருவப்படம் சேதப்படுத்தியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

*அம்பேத்கர் சட்டப்பல்கலை.க்கு துணைவேந்தரை நியமித்ததை கண்டித்து 27ம் தேதி போராட்டம்*

சென்னை : அம்பேத்கர் சட்டப்பல்கலை.க்கு துணைவேந்தரை நியமித்த ஆளுநரை கண்டித்து 27ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை, மதுரையில் திராவிடர் மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலை.யின் துணைவேந்தராக சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

*கர்நாடகாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாக புகார்*

பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சி மாறி வாக்களித்ததாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மாநிலங்களவை தேர்தலை ரத்து செய்ய கோரியும் ம.ஜனதள தலைவர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற்றது.

*NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு*

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில், நீட், ஜீ போட்டித் தேர்வுக்கான கையேடுகளை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டனர். NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இலவச கையேட்டை http://www.ammakalviyagam.in  என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி வைத்தனர்.அறிவுப்பூர்வமான, விஞ்ஞான பூர்வமான கல்வி பெற கையேடு பயனுள்ளதாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

*சிதம்பரம் அருகே விஷவண்டுகள் கொட்டியதில் 50 பேர் படுகாயம்*

கடலூர்: சிதம்பரம் அருகே காரைப்பாடியில் விஷவண்டுகள் கொட்டியதில் பெண்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.100 நாள் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவண்டுகள் கொட்டியதில் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

*நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் சரணடையும் போராட்டம்*

நெல்லை : நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் சரணடையும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ரதயாத்திரையில் உடன் வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

*தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு*

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. தற்போதைய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் பழைய பாடலை கொண்டு வருவதன் மூலம் அமைதியை குலைக்க விரும்புகிறீர்களா? என  கேள்வி எழுப்பியுள்ளனர்.

*கனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர் பூபேஷ் குமார் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு*



சென்னை : ரூ 824 கோடி வங்கி மோசடி வழக்கில் கனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர் பூபேஷ் குமார் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ள நிலையில், மத்திய குற்றப் பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவருக்கே தெரியாமல் வங்கியில் வைத்து ரூ.42 கோடி கடன் பெற்றதாக சென்னை போலீசாரும் பூபேஷ் குமார் மீது வழக்கு பதிவுசெய்துள்ளார்.

*டிடிவி தினகரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு*



டெல்லி : மார்ச் 26ம் தேதி நேரில் வர டிடிவி தினகரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 3 வாரத்திற்குள் டிடிவி தினகரனுக்கு கட்சி பெயர் மற்றும் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது தொடர்பாக ஆலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும்: தென் மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு*



பெங்களூரு: தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வரியை பிரித்து தர திட்டமிடப்பட்டது. 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போது வரிப்பணம் பிரித்து தரப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை தென் மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளனர். ஆனால் வட மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றார்.

*நடிகை ஜீனத் அமன் பாலியல் வழக்கு: குற்றப் பிரிவுக்கு மாற்றம்*

மும்பை: பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை ஜீனத் அமன் தொழிலதிபர் ஒருவர் மீது, பாலியல் தொல்லை தருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

*அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம்..!*


சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்க பரிவார தத்துவங்களை பரப்பக்கூடிய சூரியநாராயண சாஸ்திரி நியமனத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்கலை.யில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவரை துணைவேந்தராக நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.


வியாழன், 22 மார்ச், 2018

4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்


4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்

ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இந்த 6 மொழி குடும்பங்களில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர். இதில் பழமையான மொழி தமிழ்.
சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதி நியூஸ் 22/03/18 !

மதி நியூஸ்  22/03/18 !

தமிழகத்தில் பரிந்துரைக்கப்பட்ட 5 இடங்களில், ஏதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வரும் - தமிழக முதல்வர்.

காவிரி வழக்கு தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு.

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் : சென்னை காவல்துறை.

முக்கிய சுற்றுலாதலங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் இரவுநேர உணவகங்கள் திறக்க மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் திட்டம்.

மத அமைதியை குலைக்க யார் முயன்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் : முக.ஸ்டாலின்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மீதான குற்றச்சாட்டு உண்மை - ஃபேஸ்புக் நிறுவனர் அளித்த பகீர் ஒப்புதல் வாக்குமூலம்.

அறைக்குள்ளே அரசியல் நடத்தும் ஆன்மிக அரசியல் ஞானிதான் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்.

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டம் நிறைவேற்றம்.பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியிடப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் தனியார் மருத்துவ சேவையின் தரத்தை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.போலி மருத்துவர்களை கண்டறிய மருத்துவமனைகளை முறைபடுத்தும் சட்ட விதிமுறைகள் உதவும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

சிகிச்சையின் போது ஜெயலலிதா தங்கியிருந்த பகுதியில் எதிர்பாராதவிதமாக சிசிடிவி செயல்படவில்லை : அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி.

ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட விஎச்பியின் ரத யாத்திரை நெல்லை சென்றடைந்தது.கே.டி.சி. நகர், நான்கு வழிச்சாலை வழியாக கன்னியாகுமரி செல்கிறது ரத யாத்திரை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் - சட்டப்பேரவையில் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்.

தனி மனித அடையாளத்திற்காக ஆதாரை மட்டும் நம்பாமல், மாற்று ஏற்பாடுகளை செயல்படுத்த அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிவுரை - உச்சநீதிமன்றத்தில் ஆதார் சிஇஓ அஜய் பூஷன் பாண்டே தகவல்.

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரின் நியமனம் செல்லும் - உயர்நீதிமன்றம்.

புதுச்சேரி எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்பதை ஏற்க முடியாது : திருமாவளவன்.

உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு; ஆனால் உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறைப் பணிகள் இன்னும் முடியவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்.

இன்சுலினோமோ எனப்படும் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

சென்னையில் தனது கட்சிப் பணி குறித்து ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

“நீரின்றி அமையாது உலகு", என நீரின் இன்றியமையாத தன்மையை உலகத்திற்கு சொன்ன தமிழகத்திற்கு, காவிரி நதிநீர் பங்கீட்டில் நாம் பெறவேண்டிய நீரை பெறுவதற்கு பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம் : டிடிவி தினகரன்.

29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்வோம் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

வன்முறையை தூண்டும் வகையில் பேசும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல சோதனைக்கு அனுப்பக் கோரிய புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு : மார்ச் 28க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தக்கலை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஏப்.2-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே.

அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு.

ஈராக் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொலை, துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக ஆதாரம் வெளியீடு.

நியமன எம்.எல்.ஏ வழக்கு தீர்ப்பு தொடர்பாக, அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு நடவடிக்கை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள்மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து தம்புராஜ் தற்காலிக நீக்கம் : திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பை அரவிந்த் கூடுதலாக கவனிப்பார் நிர்வாகி சுதாகர் அறிவிப்பு.

அங்கன்வாடி ஊழியர் சுமதி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வாபஸ் : சுமதி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் - நெல்லை ஆட்சியர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

புதன், 21 மார்ச், 2018

சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருந்த டெல்லி ராமசாமி ஏற்கனவே திருமணமானவர் :மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையாேடு வந்த அவர் மனைவி சத்யபிரியா


சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருந்த டெல்லி ராமசாமி ஏற்கனவே திருமணமானவர் :மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையாேடு வந்த அவர் மனைவி சத்யபிரியா 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடியபோது, சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா  போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. இந்த நிலையில்தான் அவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. டெல்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா  மணக்கப்போவதாக அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அவர், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்று குறிப்பிடப்பட்டு செ ய்திகள் வந்து காெ ண்டிருக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையாேடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்ற தாே டு தன்னை நீதீபதி என்று சாெ ல்லித்தான் ராமசாமி என்னை திருமணம் முடித்தார் எனக்கூறி அதற்கான பாே ட்டாே ஆதாரங்களை காண்பித்த தாே டு அவர் கூட சேர்ந்து வாழ வே ண்டும் என கண்ணீருடன் குறிப்பிட்டார் .செய்திகளில் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப்பாே வதாக வந்த தகவல்கள் உண்மை தானா என தனக்கு உறுதி செய்யப்பட வே ண்டும் என காே ரிக்கை வைத்துள்ளார் .மே லுமஒரு வருடம் தான் ராமசாமியாே டு சேர்ந்து வாழ்ந்ததாகவும் ,அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர் பாே ன் மூலம் தன்னிடம் பேசி வந்தார் .இந்நிலையில் அவரைப்பற்றி புதிய திருமணதகவல் செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார் .