சனி, 17 மார்ச், 2018

எதிர்கட்சி தலைவராய் #கேப்டன் அவர்கள் "Great " ஆகிவிட்டார்...


எதிர்கட்சி தலைவராய் #கேப்டன் அவர்கள் "Great " ஆகிவிட்டார்...

ஜூ.வியின் வாசகர்களில் பங்குப்பெற்ற 24,527 பேரில் #13135பேர் கருத்து...

#71சதவீத வாசகர்களின் மனம் கவர்ந்த தலைவராய் கேப்டன்.

எதிர்கட்சி தலைவராக கேப்டன் விஜயகாந்த் ! கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக சரியாக செயல்படவில்லை, இவருக்கு பேசவே தெரியவில்லை, பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் அதிமேதாவிகளுக்காக இந்த பதிவு !!!

1. இதுவரை எந்த ஒரு முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும் செய்யாத தமிழகத்தின் பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக அழைத்து சென்று டெல்லியில் பிரதமரிடத்தில் வலுவான கோரிக்கைகளை ஒருமித்த குரலுடன் வலுவாக பதிய செய்தார்...........

2. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதும் தனது கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து சென்று பல்வேறு தமிழக பிரச்சனைகளை முன் வைத்தார், ஆக இரண்டு பிரதமர்களையும் சந்தித்து தமிழக பிரச்சனைகளை முன் வைத்தார்...........

3.தமிழகத்தின் முக்கிய வழக்குகளான ஜல்லிகட்டு மற்றும் கெயில் வழக்குகளில் தமிழக அரசு, மற்ற கட்சியினர் போல வெற்று அறிக்கை விடாமல் , உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு தொடர்ந்து சொந்த செலவில் வழக்கு நடத்தி வருகிறார்.......

4. தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார்.......

5. மக்களின் மீதான வாழ்க்கைச் சுமையை மேலும் ஏற்றும் வகையில் பால் விலை, பஸ் கட்டண உயர்வை கடுமையாக எதிர்த்து ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் சிங்கம் போல் குரல் கொடுத்ததால் சட்டமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்ய பட்டார், அன்றும் இந்த மீடியாக்கள் கேப்டன் அவர்களை தவறாக சித்தரித்தது.........

6. மின் கட்டண உயர்வை பல மடங்கு உயர்த்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினார்.......

7.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று "மக்களுக்காக மக்கள் பணி" என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டதிற்க்கும் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.........

8.மக்கள் மன்றத்தில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அரசின் பல தவறுகளை சுட்டி காட்டி மக்கள் பிரச்சனைகளை துணிவுடன் பேசியதற்க்கு பலனாக இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் எந்த ஒரு எதிர்கட்சி தலைவர் மீதும் போடாத வகையில் 71 அவதூறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர் , இதில் அனைத்தையும் சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்..........

9. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் , உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி உள்ளார்...... (அதற்காகவும் அவதூறு வழக்குகளை சந்தித்து உள்ளார்).........

10. தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் டைட்டானியம் அதிகமாக உள்ள கனிம வளம் மிகுந்த மணலை (அணு ஆயுதம் தயாரிக்க யுரெனியத்திற்கு அடுத்து டைட்டானியம் தான் என்று நம் கலாம் அய்யா அவர்கள் கூறினார்கள்) அந்த பகுதியின் தொழில் அதிபர் V.வைகுண்டராஜன் (வி வி மினரல்ஸ் ) திமுக , அதிமுக என இருவருக்கும் நெருக்கமானவர், அவர் கப்பலில் அந்த கனிம மணலை பல கோடிக்கணக்கான டன்களை தினம்தோறும் அமெரிக்க விற்கு கடத்தி வருகிறார், அந்த மாவட்ட ஆட்சியர் அதை கண்டுபிடித்து 60 லட்சம் கோடி கொள்ளை அடித்துள்ளனர் என்று கூறிய மறு நாளே அவர் இடமாற்றம் செய்ய பெற்றார் , எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அதைப் பற்றி பேசாத போதும், எந்த ஒரு மீடியாவும் இதை கையில் எடுக்காத போதும் "விஜயகாந்த்" அவர்கள் அதை கண்டித்து தூத்துகுடிக்கே சென்று வி வி மினரல்ஸ் அலுவலகம் முன்னே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி மீடியாக்களின் கண்களுக்கும் மக்களுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்தினார்.........

11. தங்கள் உரிமைக்காக போராடிய மாற்று திறனாளிகள் தாக்கப்படுவதை கண்டித்து அனைவரும் கண்டன அறிக்கை விட்டனர் ஆனால் நமது கேப்டன் அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். அது மட்டுமல்ல 1000 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை வழங்கி மனிதநேயத்தை நிலை நாட்டினார்.....

12. இலங்கை தமிழரை வைத்து அரசியல் செய்பவருக்கு மத்தியில் இங்கு நம்மை நாடி வந்துள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம் சென்று 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழ்வாதார பொருட்களை வழங்கினார்......

13. தானே புயலாகட்டும் ,சென்னை பெருவெள்ளமாகட்டும் முதல் ஆளாக வந்து வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மனித நேய தலைவர்........க்

14. மதுவிலக்குக்காக போராடிய சசி பெருமாள் குடும்பதிற்கு முதல் ஆளாக சென்று ஆறுதல் மட்டும் கூறாமல் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதரத்திற்கு பொருளதவி வழங்கியவர்.........

15. தனிப்பட்ட விமர்சனங்கள் தன்னை பற்றி வந்த போதும் அதை பொருட்படுத்தாமல் மது விலக்குக்காக சென்னை கோயம்பேடு முதல் , தலைமை செயலகம் வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கைதானார்..........

16. காஷ்மீர் வெள்ளம் , ஆந்திரா புயல் என நாட்டில் எங்கு இயற்க்கை பேரிடர் நடந்தாலும் முதல் ஆளாக சென்று உதவிக்கரம் நீட்டும் மனித நேயர் கேப்டன். (தமிழகத்திற்கு மட்டும் கேப்டன் அல்ல இந்தியாவிற்கே கேப்டன்)............

17. ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட போது அதிலும் ஜாதி,மத அரசியல் நடத்தியவர்களுக்கு மத்தியில் முதல் ஆளாக அவர்களின் அனைவரின் வீட்டுக்கும் சென்று 20 லட்சம் கொடுத்தும், ஈமசடங்கு செய்வதற்க்கும் அவர்களின் வாழ்வில் வளம்பெற உதவிக்கரம் நீட்டியவர்......

18. மதிப்பிற்குரிய அய்யா டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார், ஆனால் முதல் ஆளாக சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதுடன் தமிழகம் முழுவதும் தன் கட்சி கொடிகளை 1 வாரத்திற்க்கு அரைக்கம்பத்தில் பறக்க விட செய்த ஒரே அரசியல் கட்சி தலைவர்.........

19. மந்திரி பதவிகளுக்காக பிரதமரிடம் மனு கொடுக்கும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் டாக்டர் கலாம் அய்யாவின் பிறந்த நாளை தேசிய மாணவர்கள் தினமாக அறிவிக்க கோரி அன்றே மனு அளித்தார்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக