பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் #StephenHawking
வாழ்க்கை மாறியது
இவருக்கு 21 வயது இருக்கும் போது மோட்டார் நியூரான் நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இவரது கழுத்திற்கு கீழே உள்ள பகுதி முழுக்க வேலை செய்யாமல் போனது. மொத்தமாக வீல் சேரில் முடங்கினார் ஹாக்கிங். அவரது ஆயுள் காலம் சில காலமே என்று டாக்டர்கள் கூறி விட்டனர். ஆனால் அதை ஹாக்கிங் முறியடித்தார்.
உதவி
நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகளில் இறங்கினார். இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது. அதன்பின் நடந்தது வரலாறு, அறிவியல் சரித்திரம். இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் வெளியானது.
ஏலியன்கள் வருவார்கள்
இவர் ஏலியன்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டு இருந்தார். கண்டிப்பாக இந்த பிரபஞ்சத்தில் எங்காவது ஒரு இடத்தில் வேற்றுகிரக உயிர்கள் வாழும் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் நம்மை சந்திப்பார்களா என்பது மட்டும் சந்தேகம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
கால பயணம்
டைம் டிராவலுக்கு சரியான விளக்கம் கொடுத்தவர் இவர்தான். எதிர்காலத்தில் ஒளியை விட வேகமாக மக்கள் பயணம் செய்வார்கள் அப்போது டைம் டிராவல் சாத்தியம் என்று குறிப்பிட்டார்.
மிகவும் சிறந்தவர்
இவரது ஆராய்ச்சிகள், கருத்துக்களை பார்த்த உலக விஞ்ஞானிகள் இவரை சுற்றி சுற்றி வந்தார்கள். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் ஹாக்கிங் என்பதில் சந்தேகமே இல்லை.
'பிக் பேங்க்' முதல் 'பிளாக் ஹோல்' வரை.. நாற்காலியில் உட்கார்ந்து அறிவியலை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்
காசு இல்லை
இவர் பள்ளியில் பீஸ் கட்ட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். இதற்காக இவருக்கு விருப்பமான வெஸ்டிமின்ஸ்டர் பள்ளியில் சேர முடியாமல் வீட்டில் முடங்கி போய் இருக்கிறார். கடைசியில் செயின்ட் அல்பான்ஸ் என்னும் சிறிய பள்ளியில் சேர்ந்தார். இவரது பிக் பேங்க் அந்த சிறிய பள்ளியில்தான் தொடங்கியது.
முட்டாள்
இவரை இவரது சக நண்பர்கள் பள்ளியில் ஐன்ஸ்டின் என்று அழைத்து வந்தார்கள். இவர் அப்போது எதையும் புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருந்தார். ஐன்ஸ்டின் அவருடைய சிறுவயதில் அப்படித்தான் இருந்தார். அதன் காரணமாகவே அப்படி அழைத்தார்கள். இருவருமே வளர்ந்த பின் அறிவியலை மாற்றியது வரலாறு.
உடல் முடக்கம்
இவருக்கு 21 வயது இருக்கும் போது ''மோட்டார் நியூரான்'' பாதிக்கப்பட்டது. இது ''அமியோடிராபிக் ஸ்கிலோரோசிஸ்'' வகையை சார்ந்த நரம்பியல் குறைபாடு ஆகும். இதனால் இவர் உடல் மொத்தமும் இயங்காமல் போனது. கழுத்துக்கு கீழ் இவரால் எதையும் அசைக்க முடியவில்லை.
2 வருடத்தில் இறந்துவிடுவார்
இவர் இரண்டு வருடத்தில் இறந்து விடுவார் என்று 23 வயதை கடைசி வருடமாக டாக்டர்கள் குறித்தார்கள். ஆனால் அப்போதும் கூட மனம் தளராமல், இவர் கேம்பிரிட்ஜில் டாக்டர் பட்டம் படிக்க சென்றார். அந்த தன்னம்பிக்கைதான் இவரது வாழ்க்கையை மாற்றியது.
கண் மூலம் பேசினார்
இவருக்காக ''ஸ்பீச் டிரான்ஸ்லேட்டர்'' தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டது. இவர் கண்களில் ஏற்படும் அசைவுகள் வார்த்தைகளாக மாற்றப்பட்டது. அதை வைத்து இவர் செய்த சாதனைகள் பல. பேட்டிகள் கொடுத்தார், புத்தகம் எழுதினார், நாடகத்தில் நடித்தார், மொத்த அறிவியல் உலகையே கட்டுக்குள் வைத்து இருந்தார்.
அசாத்தியம்
50 வருடங்கள் இவர் ஒரே இருக்கையில் இருந்தார். ஆனால் உலகமே இவரை சுற்றி வந்தது. 9 கிரகம் சூரியனை சுற்றுவது போல. ஒரு முறை அவரது வீட்டில் பெரிய விருந்து ஏற்பாடு செய்துவிட்டு, எதிர்கால சந்ததிக்காக காத்து இருந்தார். ஆனால் அப்போது யாரும் டைம் டிராவல் செய்து அவரை பார்க்க வரவில்லை. அப்போது அவர் இப்படி கூறினார் ''இப்போது என்னை யாரும் பார்க்க வரவில்லை. ஆனால் ஒருநாள் நீங்கள் எதிர்காலத்தில் இருந்து யாரையாவது பார்க்க கடந்த காலத்திற்கு செல்வீர்கள்'' என்று குறிப்பிட்டார்.
காஸ்மிக், கருந்துளை
காஸ்மிக் (அண்டம்) குறித்து ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு இவர்தான் காரணம் என்று சொல்லலாம். ஏன் இவர் மட்டும்தான் காரணம் என்று கூட குறிப்பிடலாம். அதே போல உலகமே பெருவெடிப்பு எனப்படும் பிக் பேங்க் குறித்து பேசிய போது, இவர் மட்டும்தான் கருந்துளை எனப்படும் பிளாக் ஹோல் குறித்து பேசினார். பிளாக் ஹோல் தான் இந்த பிரபஞ்சத்தின் முடிவாகும்.
21 வயதில் அரிய நோயால் தாக்கப்பட்டாலும் தன்னம்பிக்கை நாயகனாக திகழ்ந்த ஹாக்கிங்
லண்டன் : ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார். யார் ஸ்டீபன் ஹாக்கிங் அவர் செய்த சாதனைகள் என்ன?
இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தார்.
இவரின் பெற்றோர் நல்ல கல்வி பின்புலத்தை கொண்டவர்கள், ஸ்டீபனுக்கு 4 உடன்பிறந்தவர்களும் உள்ளனர்.
பள்ளி சென்று பாடங்கள் படிக்காமல் எப்போதும் தன்னை சுற்றி புத்தகங்களை வைத்துக் கொண்டு பிடித்தவற்றை படித்து வளர்ந்தவர் ஸ்டீபன். இதனாலேயே ஸ்டீபனை அவரது நண்பர்கள் ஐன்ஸ்டீன் என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர்.
பள்ளி செல்லாத ஸ்டீபன்
புத்தகங்களே வாழ்க்கையாக இருந்த ஸ்டீபன்
1962ம் ஆண்டில் பட்டதாரியான ஸ்டீபன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சேர்வதற்காக இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இயற்பியல் என்பது எப்போதுமே ஒரு போரான பாடமாகத்தான் பள்ளி காலங்களில் இருந்தது. ஆனால் வேதியியல் மிகவும் பிடித்தமானதாக இருக்கும், ஏனெனில் அதில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் என்று ஹாக்கிங் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இயற்பியலும், வானியலும் நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்பதற்கான புரிதல்களை ஏற்படுத்தும். அண்டம் பற்றி ஆழமாக தெரிந்து கொள்வதே என்னுடைய விருப்பம் என்றும் ஸ்டீபன் கூறி இருக்கிறார்.
ஆய்வுகள் என்ன?
என்னென்ன ஆய்வுகள் செய்தார்?
இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியவை. கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இந்த வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.
நரம்பு நோய் பாதிப்பு
பேச்சு, உடலின் செயல்பாடுகள் முடக்கம்
21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார் ஹாக்கிங்ஸ். குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினி வழியாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்ததோடு வீல் சேரில் இருந்தவாறே பிறருக்கான உந்து சக்தியாகவும் இருந்தார்.
பிரபலமான புத்தகங்கள்
பிரபல புத்தகங்கள்
அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய 'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time),The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக