புதன், 14 மார்ச், 2018

பிஜேபியின் கோரக்பூர் தோல்வி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது???


பிஜேபியின் கோரக்பூர் தோல்வி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது???

உபியின் கோரக்பூர் ஏதோ ஒரு சாதாரண தொகுதி கிடையாது.. 1989ல் இந்து மகாசபையும், 1991லிருந்து பிஜேபியும் என தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று ஏறத்தாழ 30 வருடங்கள் இந்துத்துவா சக்திகளின் செல்வாக்கிலிருந்த ஒரே தொகுதிதான் கோரக்பூர்..

புகழ்பெற்ற கோராக்நாத் கோயிலின் தலைவரான கோராக்பூர் நாத் மடத்தின் தலைவர்கள் தொடர்ந்து ஜெயித்த தொகுதி.. அந்த மடத்தின் செல்வாக்கு பெருமளவில் உள்ள தொகுதி..

தற்போதைய உபி முதல்வர் யோகி தொடர்ந்து 5 ஜெயித்து MPயாக இருந்த தொகுதி கோரக்பூர். கடந்த தேர்தலில் மூன்ற லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், 52% சதவீத ஓட்டுக்களுடன் பிஜேபி ஜெயித்தது.. தனி தனியாக போட்டியிட்ட சமாஜவாதியும், பகுஜன்சமாஜும் பெற்ற மொத்த வாக்கு சதவீதம் 39% மட்டும் தான்..

இப்போதோ, மத்தியில் ஆட்சி, மாநிலத்தில் ஆட்சி.. சென்ற ஆண்டுதான் அங்கு பெரிய வெற்றியை பெற்று பிஜேபி ஆட்சி அமைத்தது.. இப்போ ஒரே ஆண்டில், நடந்த இடைதேர்தலில் பிஜேபி தோல்வி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக