இடஒதுக்கீடு என்ற வார்த்தையே தவறானது.
ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் எங்கும் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.
அவர் (REPRESENTATION) என்ற வார்த்தையை மட்டும்தான் பயன்படுத்துகிறார்.
இடஒதுக்கீடு - பிரதிநிதித்துவ என்ற இரு வார்த்தைகளுக்கும் உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்று.
இடஒதுக்கீடு என்பது ஒருவருக்காக ஒரு இடத்தை சலுகையின் அடிப்படையில் ஒதுக்குவது. இது வரலாற்றில் எங்கும் நிகழவில்லை.
இடஒதுக்கீடு என்றால் இலவசமாகக் கொடுப்பது என்பது பொருள்.
பிரதிநிதித்துவம் என்பது பிறப்புரிமை ஆகும். பிறப்புரிமை என்பதின் பொருளில்தான் அம்பேத்கர் இதைக் கொண்டுவந்தார்.
பூர்வகுடிகளான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ இடங்களை கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.
இந்தியாவின் நான்கு தூண்ககளிலிருந்து பேசுவோம்.
1). முதலில், நான்காவது தூண் ஊடகத்திலிருந்து வருவோம்.
இந்தியாவில் 50 சதவிகித மக்கள் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் நேஷனல் மீடியாவில் வெறும் 4% இருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் என்று 25 சதவிகிதத்தினர் வாழும் மக்களில் ஒரு சதவிகிதம்கூட இல்லை.
மதச் சிறுபான்மையினர் 15 சதவிகித மக்களில் வெறும் 3% மக்கள்தான் தேசிய மீடியாவில் இருக்கிறார்கள்.
ஆக இந்தியாவின் 90% மக்கள் இந்திய ஊடக துறையில் 7%-தான் இருக்கிறார்கள்.
மீதமுள்ளவர்வர்கள்தான் ஆளும் வர்க்கத்தினர். இவர்கள்தான் மீடியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தருவதுதான் செய்தி. இவர்கள்தான் ஆள்கிறார்கள்.
ஆக, ஜனநாயகத்தின் மிக முக்கிமான துறையான இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. இதை யாரும் பேசுவதில்லை. இதை மீடியா மறைக்கிறது.
2). நீதித்துறை. உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பெண்கூட இன்னும் தலைமை நீதிபதியாக பதவியில் அமரவில்லை.
70 ஆண்டுகளில் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்றமுறையில் கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து சதாசிவம் என்று ஒருவர் என இதுவரை இரண்டு நபர்கள்தான் முக்கியப் பதவிக்கு வந்திருக்கிறார்கள்.
இன்னும் மதச்சிறுபான்மையினர் யாரும் வரவில்லை.
70 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் முக்கியமான துறையான நீதித்துறையில் பிரதிநிதித்துவம் இல்லை.
3). மூன்றாவதாக, ஆட்சி நிர்வாகத்தில் முதன்மைச் செயலாளர், பல்கலைக்கழகம், ஐஐடி, இஸ்ரோ, ஆராய்ச்சி நிறுவனம் முதல் உயர் கல்வி நிறுவனங்கள் ஆகிய முக்கியமான இந்தியாவின் கேந்திரங்களில் முக்கியப் பதவிகளில் பிரதிநிதித்துவம் இல்லை.
ராணுவத்தில் இல்லை, இந்தியாவின் மிக அதிகாரமிக்க அலுவலகமான பிரதமர் அலுவகத்தில் கேபினட் செக்ரட்டரி இல்லை. வெளியுறவுச் செயலர்கள் என்று பி.சி., எஸ்.சி., என்று எங்கும் யாருக்கும் உயர் பதவிகள் வழங்குவது இல்லை.
4). சரி, எங்கு பிரதிநிதித்துவம் இருக்கிறது என்றால் அம்பேத்கர் கொண்டுவந்த பாராளுமன்ற, சட்டமன்றத்தில் மட்டுமே போதிய பிரதிநிதித்துவம் இருக்கிறது.
ஆனால் இங்கு பெண்களுக்கு இல்லை. 50 சதவிகித பெண் பிரதிநிதித்துவம் இன்னும் கொண்டுவரவில்லை.
இங்கு ஜனநாயகத்தின் மிக முக்கிய நான்கு தூண்களும் கால்கள் இல்லாமல் இயங்குகிறது.
2 ஆயிரம் ஆண்டுகள் ஏற்படுத்திய அநீதி இன்னும் நேர் செய்யப்படவில்லை.
இந்த யதார்த்தத்தை கையில் வைத்துக்கொண்டுதான் நாம் விவாதம் செய்ய வேண்டும்.
இடஒதுக்கீடுகளுக்கு எதிராக ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் முட்டாளாக இருப்பான்.
ஒரு நாட்டில், பெரும்பான்மை மக்களைப் புறக்கணிப்பது என்பது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்.
தனியார்துறைகளில் இடஒதுக்கீடு:
தனியார்துறைகளில் இப்போது இடஒதுக்கீடு கேட்பது வலிமையாக இருக்கிறது.
எப்படியென்றால் தனியார் நிறுவனம் ஒன்று இங்கு தொழில் தொடங்க வருகிறது என்றால் நிலம், தண்ணீர், மின்சாரம் என்று எல்லாமே மக்களின் சொத்து.
மக்களிடமிருந்து எடுப்பதால் அது அரசு உடைமை ஆகிறது. அதனால் அங்கும் இடஒதுக்கீடு கேட்கிறார்கள்.
அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழும் விகிதப்படி பிரதிநிதித்துவத்தை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இன்னும் 10 சதவிகிதம்கூட அவர்களுக்கு நீதி வழங்கவில்லை. ஆனால் 70 ஆண்டுகளாக இடஒதுக்கீடுகளை அனுபவிக்கிறார்கள் என்று கூறுவது அயோக்கியத்தனத்தின் உச்சம்.இதில், தலித் மக்கள் மட்டும்தான் இடஒதுக்கீடுகளுக்காக போராடுகிறார்கள் என்று பிரித்துப் பேசவைத்து பிளவுகளை உண்டாக்குவதில் இப்போது கவனம் செலுத்திவருகிறார்கள்.
இடஒதுக்கீடு என்பது அனைவருக்குமானது. இங்கு ஒரு பிரிவினருக்கு என்று எதுவும் தரவில்லை..
இடஒதுக்கீடு என்பது பொருளாதார நலத்திட்ட உதவி இல்லை. காலங்காலமாக ஒருசாரார்களின் மீது சுமத்திவந்த மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான இழப்பீடு ஆகும்
இந்த நாட்டை ஆள அனைவருக்கும் உரிமையிருக்கிறது.
முதலில் இடஒதுக்கீடு என்பதை அனைத்து மக்களும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இனி, இடஒதுக்கீடு என்று சொல்ல வேண்டாம் - பிரதிநிதித்துவம் என்றுதான் சொல்ல வேண்டும்---
தோழர் புனிதபாண்டியனின் பேட்டி இடஒதுக்கீடு பற்றிய முக்கியமான பார்வையை தருகிறது.
நன்றி: --மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக