போக்குவரத்து கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள்
❇ அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
❇ மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய கடன் தொகையில் ரூ.3,001.47 கோடி மூலதனப் பங்குத் தொகையாக இந்த ஆண்டில் மாற்றம் செய்யப்படும்.
❇ இந்த நிதியாண்டில் மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்கு மொத்தமாக தேவைப்படும் ரூ.600 கோடியை பங்கு மூலதனமாக அரசு வழங்கும்.
❇ 2017-18-ல் வாங்க அனுமதிக்கப்பட்ட 2,000 புதிய பேருந்துகளுடன், இந்த 3,000 பேருந்துகளையும் கொண்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள 4,593 பழைய பேருந்துகளும் புதிதாக மாற்றப்படும்.
❇ நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைகள், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க, வழிவகை முன்பணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.900 கோடி நிதி வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
❇ மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டணச் சலுகை மானியத்துக்காக ரூ.799.25 கோடி உட்பட போக்குவரத்து துறைக்கு ரூ.2,717.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக