வெள்ளி, 2 மார்ச், 2018

02/03/18 ! நியூஸ்

 02/03/18 !

தஞ்சை பெரியகோயிலில் ராஜராஜ சோழன் சிலை , அவரது மனைவி லோகம்மாள் சிலையை காணவில்லை தஞ்சை பெரியகோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல்போய் உள்ளன : எஸ்பி.செந்தில்குமார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் முதலமைச்சர் தெளிவாக உள்ளார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் - பாஜக எம்பி இல.கணேசன்.

ஆந்திர மாநில காவல் துறையினர் தமிழகத்திற்குள் புகுந்து தமிழர்களை சட்ட விரோதமாக கைது செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமதித்ததாக எழுந்த புகாரில் முகாந்திரமிருந்தால் விஜயேந்திரர் மீது வழக்கு பதிந்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட நோட்டீஸ்; 8 வாரத்திற்குள் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மாநில மனித உரிமைகள் ஆணையம்.

மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் டிடிவி தினகரன் ரூ.10 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்தது எப்படி ? - அமைச்சர் ஜெயக்குமார்.

கபாலி படத்தால் ரூ.2.77 கோடி நஷ்டம் ஏற்பட்டு கடனை செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொள்ள உள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர் செல்வக்குமார் மிரட்டல்.

தலைமைச் செயலகத்தில் நாளை காலை முக.ஸ்டாலினுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக டிடிவி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு : வெற்றிவேலின் வீடு , அலுவலகங்களில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.

சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து எல்கேஜி மாணவன் பிரத்தீஸ்வரன் (3) உயிரிழப்பு.

காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டார் : சங்கர மடம் அதிகாரபூர்வ அறிவிப்பு.

காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 7ம் தேதி கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.

சென்னை : மதுரவாயலில் தனியார் நிகர்நிலை பல்கலை.யில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை வரும் 5-ம் தேதி திறந்து வைக்கிறார் ரஜினிகாந்த்.

வெளி மாநிலத்தில் உயிரிழந்த மாணவர்களின் தொடர் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்.

தஞ்சை பெரிய கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட ராஜராஜ சோழன் சிலை குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை.

ஒட்டன்சத்திரம் சாலை டெண்டர் விட்டதில் ஊழல் நடந்துள்ளது டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிடுவேன் - டிடிவி.தினகரன்.

ஐடி ஊழியர் லாவண்யாவை தாக்கி வழிப்பறி செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய, அவரின் முக அமைப்பு போலவே 3 மாதிரிகள் உருவாக்கம்.தலைமை நிர்வாகிகள் முடிவு செய்த பின் சரியான முக அமைப்பு பொருத்தப்படும்.ஒரு வாரத்திற்குள் ஜெயலலிதா சிலையில் மாற்றம் - சிலை வடிவமைப்பாளர் பிரசாத்.

தமிழகத்தில் எத்தனை மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது ? : உயர்நீதிமன்ற மதுரை கிளை.

ஒக்கிபுயலில் காணாமல் போன கடலூர் மாவட்ட மீனவர்கள் 19 பேருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் - இரண்டு நாட்களில் நிதி வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி அறிவிப்பு.

செம்மரம் வெட்டுவதற்கு முன்பே தமிழர்கள் 84 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்து விட்டோம் - செம்மரக்கடத்தல் தடுப்பு எஸ்பி. ரவிசங்கர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ல் சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது - நடிகர் கமல்ஹாசன்.

பிராமணர்களை தனிச் சமூகமாக அங்கீகரித்து ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவிப்பு.

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் : மகளிருக்கான 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் தங்கம் வென்றார்.

திருவண்ணாமலை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த 4 பேரில் மூவர் உயிரிழப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக