சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருந்த டெல்லி ராமசாமி ஏற்கனவே திருமணமானவர் :மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையாேடு வந்த அவர் மனைவி சத்யபிரியா
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடியபோது, சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. இந்த நிலையில்தான் அவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. டெல்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா மணக்கப்போவதாக அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அவர், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்று குறிப்பிடப்பட்டு செ ய்திகள் வந்து காெ ண்டிருக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையாேடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்ற தாே டு தன்னை நீதீபதி என்று சாெ ல்லித்தான் ராமசாமி என்னை திருமணம் முடித்தார் எனக்கூறி அதற்கான பாே ட்டாே ஆதாரங்களை காண்பித்த தாே டு அவர் கூட சேர்ந்து வாழ வே ண்டும் என கண்ணீருடன் குறிப்பிட்டார் .செய்திகளில் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப்பாே வதாக வந்த தகவல்கள் உண்மை தானா என தனக்கு உறுதி செய்யப்பட வே ண்டும் என காே ரிக்கை வைத்துள்ளார் .மே லுமஒரு வருடம் தான் ராமசாமியாே டு சேர்ந்து வாழ்ந்ததாகவும் ,அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர் பாே ன் மூலம் தன்னிடம் பேசி வந்தார் .இந்நிலையில் அவரைப்பற்றி புதிய திருமணதகவல் செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக