சசிக்கலா புஷ்பா இரண்டாவது திருமணம்
சசிக்கலா புஷ்பா இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும், அந்த திருமண பத்திரிக்கை, திருச்சி சிவாவோடு இருந்த புகைப்படம், ஒரு நீதிமன்ற டைவர்ஸ் காபி போன்றவை இந்த வாரம் முழுக்க ஆங்காங்கே கேலியும் கிண்டலும்மா கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கு.
அது உண்மையா, பொய்யா என்பது இரண்டாவது.
அந்த கேலி கிண்டல் வழியா எவ்வளவு மனித மனம் கேவலமா மாறிக்கொண்டு இருக்குனு என்பதை நினைத்து அருவருப்பாவும் வேதனையாகவும் இருக்கு.
அவங்கவங்க வாழ்க்கைய வாழ அவரவர்க்கு உரிமை இருக்கு. முறைப்படி விவாகரத்து செய்துட்டு, இன்னொருத்தர் கூட வாழ போறாங்க. நடுவில் இன்னும் சிலரோடு கூட வாழ்ந்து இருக்கலாம்.. அதுனால் என்ன??
ஒரு தனி மனித படுக்கை அறையை எட்டிப்பார்த்து அதை கிண்டல் செய்வது மனித மன குரூரத்தை படம் பிடித்து காட்டுகிறது.
41 வயசுல கல்யாணம் தேவையானு எல்லாம் கிண்டல் பண்றாங்க. ஏன் 42 வயசானவங்க யாரும் அவரவர் துணையை தொடுவதில்லையா??
ஊர் என்ன நினைக்கும், உலகம் என்ன நினைக்கும்னு பயந்துகிட்டு அவனவன் பொய்யா வாழ்ந்துகிட்டு இருக்கான். இது போல் துணிச்சலான முடிவெடுக்க முடியாத கோழைகளின் பொறாமையின் வெளிப்பாடுதான் அந்த கிண்டலும், கேலியும்.
அரசியலில் அவங்க செயல்பாட்டை எவ்வளவு வேண்டுமான விமர்சிக்கலாம் தப்பில்லை. அடுத்தவன் இப்படித்தான் வாழனும்னு நானோ நீங்களோ எதிர்ப்பார்ப்பதை விட அபத்தம் வேறு என்ன இருக்கு???
புது மண தம்பதிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. நீடூழி வாழ்க.. thanks (parimala ) Facebook
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக