செவ்வாய், 20 மார்ச், 2018

இன்றைய தலைப்பு செய்திகள்-20 -03-18

இன்றைய தலைப்பு செய்திகள்-20 -03-18


*புதுச்சேரியில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு*

புதுச்சேரி: புதுச்சேரி 100 அடி சாலை மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார் தீப்பற்றி எரிவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களில் காரில் எரியும் தீயை அணைக்க தீவிர நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர்.

*வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: டிடிவி சகோதரி ஸ்ரீதளதேவி ஜாமினில் விடுதலை*

புழல்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டிடிவி சகோதரி ஸ்ரீதளதேவி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து புழல் சிறையில் இருந்து ஸ்ரீதளதேவி விடுதலை செய்யப்பட்டார்.

*காஞ்சிபுரம் பாலேஸ்வரம் முதியோர் காப்பக நிர்வாகி தாமஸ் மீது வழக்குப்பதிவு*

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலேஸ்வரம் முதியோர் காப்பக நிர்வாகி தாமஸ் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல குழுமம் அளித்த புகாரின் பேரில் சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமிகளை வேலைக்கு அமர்த்தியது, சுகாதாரமற்ற முறையில் காப்பகத்தை நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பகத்தில் இறந்தவர்களின் எலும்புகளை தூளாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததாக தாமஸ்மீது புகார் எழுந்துள்ளது.

*கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தஞ்சாவூர் சென்றடைந்தார் சசிகலா*

தஞ்சாவூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா தஞ்சாவூர் சென்றடைந்தார். கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோலில் சசிகலா சென்றுள்ளார். சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நடராஜன் உடல் கொண்டு செல்லப்பட்டது. தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நடராஜனின் உடல் நாளை மாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.

*பத்மவிபூஷன் விருது பெற்ற இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து*

டெல்லி: பத்மவிபூஷன் விருது பெற்ற இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைக்கு ஈடு இணையில்லா பங்களிப்பு செய்தவர் இளையராஜா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

*2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது*

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். இளையராஜா உட்பட மூவருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

*காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை*

குப்வாரா: காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றுவருவதால் அந்த பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

*கர்நாடகாவில் கார்- இருசக்கர வாகனம் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு*

பிடர்: கர்நாடக மாநிலம் பிடர் பகுதியில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்*

டெல்லி: ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

*நெல்லையில் சிலிண்டர் வெடித்து தாய்-மகள் உயிரிழப்பு*

நெல்லை: நெல்லை கல்லிடைக்குறிச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தாய்-சேய் உயிரிழந்தனர். தாய் மஞ்சு மற்றும் 6 மாத பெண் குழந்தை தீயில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு*

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாஜக தலைவர்கள் பெங்களூருவில் சந்தித்து பேசினர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோருடன்  ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் முதல்வரை சந்தித்து பேசினர்.

*டெல்லி ஜே.என்.யு. பேராசிரியர் அதுல் ஜோஹ்ரி கைது*

புதுடெல்லி: டெல்லி ஜே.என்.யு. பேராசிரியர் அதுல் ஜோஹ்ரி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் அதுல் ஜோஹ்ரி மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் வந்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து அதுல் ஜோஹ்ரி மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பேராசிரியர் ஜோஹ்ரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே தகவல்*

சென்னை : ஆவடி- அம்பத்தூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரட்டூர், பட்ரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் 3 புறநகர் ரயில் நிற்காது. இரவு 11.45 சென்ட்ரல் - திருவள்ளூர் நள்ளிரவு 12.15 சென்ட்ரல்-ஆவடி நள்ளிரவு 1.20 கடற்கரை- அரக்கோணம் ரயில்கள் நிற்காது. மேலும் நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் ஆவடி-பட்டாபிராம் புறநகர் ரயிலும் இந்து கல்லூரியில் நிற்காது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

*முத்தலாக் மசோதா: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அமைப்பினர் போராட்டம்*



நாக்பூர்: முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாக்பூரில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

*ஜேஎன்யூ பேராசிரியர் மீது 9 மாணவிகள் பாலியல் புகார்: பேராசிரியர் கைது*

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் ஒன்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்துள்ளர். இதையடுத்து பேராசிரியரை கைது செய்ய கோரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தையடுத்து பேராசிரியர் மீது 8 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி பேராசிரியருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் அவர் நேற்று ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று பேராசிரியர் ஆஜரான நிலையில் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

*ஜம்மு-ராஜோரி-பூஞ்ச் நெடுஞ்சாலையை மறித்து மாணவர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு*



ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நௌஷேரா பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நௌஷேராவை மாவட்டமாக அறிவிக்க கோரி ஜம்மு-ராஜோரி-பூஞ்ச் நெடுஞ்சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

*அரசுப் பள்ளியிலேயே நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு : தேனி ஆட்சியர் பதில் தர உத்தரவு*

மதுரை : அரசு அறிவிப்பின் படி கம்பம் லோயர்கோம்ப் அரசுப் பள்ளியிலேயே நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கில், தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 12-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளியில் தரமான கட்டிடம் மின்வசதி இணையம் காணொலிக்காட்சி வசதியுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*நாமக்கல் அருகே நில முறைகேடு : வி.ஏ.ஓ.க்கு 3 ஆண்டு சிறை*

நாமக்கல் : நாமக்கல் மங்களபுரத்தில் ராணி என்பவரின் 2 ஏக்கர் நிலத்தை முறைகேடாக தனது பெயரில் பத்தர பதிவு செய்த வி.ஏ.ஓ.க்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.முறைகேடு புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஜோதி வேலு என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ரூ.5000 அபராதம் விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

*ஜேஎன்யூ பேராசிரியர் மீது பாலியல் புகார்: டெல்லி போலீசார் விசாரணை*

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் ஒன்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்துள்ளர். இதையடுத்து பேராசிரியரை கைது செய்ய கோரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தையடுத்து பேராசிரியர் மீது 8 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி பேராசிரியருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் அவர் நேற்று ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று பேராசிரியர் ஆஜரான நிலையில் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*ஈராக்கில் 39 இந்தியர்கள் மரணம் விவகாரம்: சுஷ்மா சுவராஜூக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம்*



பஞ்சாப்: ஈராக்கில் 39 இந்தியர்கள் மரணம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். ஈராக்கில் 39 இந்தியர்கள் மரணமடைந்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கக் கோரியும் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

®➖➖➖➖➖➖➖➖➖🔚

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக