நடராஜன் இவ்ளோ நல்லவரா?
தமிழன போராளி, தியாக தலைவர், கிங் மேக்கர், சாணக்கியன் என எம்.நடராஜனின் மரணத்துக்கு பிறகு எழுந்திருக்கும் பெருங்கூச்சல், 'இன்னாது நடராஜன் இவ்ளோ நல்லவரா?'' என கேட்க வைத்திருக்கிறது.
1991-ல் ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும், தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டதும், அவர் ஆண்டதற்கும், பின்னாள் இருந்து இயக்கியது நடராஜானா? ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க போராட்டங்கள், காய் நகர்த்தல்கள், வியூகங்கள் அனைத்தையும் நடராஜன்தான் செய்ததாக ஊடகவியலாளர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் உண்மை என்றால், ஜெயலலிதாவுக்கு ஒன்றுமே தெரியாதா? ஜெயலலிதாவுக்கு சுயபுத்தியே கிடையாதா? இப்போது இரங்கல் தெரிவிப்பவர்கள் சொல்வது உண்மை என்றால், இதுவும் உண்மையா?
யுத்தம் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலித்தான் இந்த ஸ்டேட்மெண்ட் நடராஜனுடையதா? இன்று விளாரில் முள்ளி வாய்க்கால் முற்றம் கட்டிய நடராஜனால் ஏன் அன்று ஜெயலலிதாவினை ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அன்று ஆதரவாக எதுவும் செய்யச் சொல்லவில்லை? மக்களை திரட்டமுடியவில்லை?
ஈழத்தமிழர் விவகாரத்தில் சோ சொன்னதை மட்டுமே செய்தார் ஜெயலலிதா. அடிக்கடி போயஸ்கார்டனுக்கு போன சோ, ஜெயலலிதாவுக்கு எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்து பைப்பில் சிகரெட்டை புகைத்துக் கொண்டே பேசுவார். எனக்குத் தெரிந்து அமைச்சர், முதல்வர் என உச்சத்தை தொட்ட ஒரு தமிழன் கூட ஜெயலலிதாவின் முன்னாள் நிமிர்ந்து உட்கார்ந்தது கூட இல்லை. தமிழகத்தில் ஒரு தமிழன் கூட ஆண்களாக இல்லையா? என உலகமே காரி உமிழ்ந்தது. ஜெயலலிதாவுக்கு இந்த மரியாதை எல்லாம் நடராஜன் சொல்லி கொடுத்ததா?
ஜெயலலிதாவின் 60 வது பிறந்த நாளில் ஜெயலலிதா சோ, பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன், சாண்டிலியன், முக்தா சீனிவாசன் மாதிரி 10 பார்ப்பனர் வீட்டில் போய் அட்சயதை போடச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கினார். ஒரு தமிழன், திராவிடன் வீட்டிற்கு கூட ஜெயலலிதா போகவில்லை. இதுவும் நடராஜன் சொல்லித்தான் நடந்ததா? ஏன் ஒரு தமிழன் கூட ஜெயலலிதாவை ஆசீர்வாதம் செய்ய தகுதி இல்லாமல் இருந்தானா?
ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்ற பச்சைத் துரோகம் செய்தார். ஆட்சியில் இல்லாத ஜெயலலிதா ஏன் மக்களை திரட்டவில்லை. கருணாநிதியின் பச்சை துரோகத்துக்கு மவுன துணையாக ஜெயலலிதா இருந்தார் என்பதே உண்மை. ஈழப் போராளியான நடராஜன் ஏன் கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்யவில்லை. ஜெயலலிதாவை அழுத்தம் கொடுக்க சொல்லவில்லை. தமிழன் என்பவன் வெறும் ஓட்டுப் போடும் மெஷின் அவன் ஓட்டுப் போடத்தான். அவனுக்கு எந்தத்தகுதியும் இல்லை என ஜெயலலிதா நினைத்து ஆட்சி செய்தார். இதில் நடராஜன் என்பவர் ஒரு அரசியல் தரகர் மட்டுமே. அதைத்தாண்டி அவர் செய்த சாதனை என்னவென்றால் அவரது குடும்பத்தினரிடம் உள்ள சொத்துகள்தான்.
ஒரு சாதாரண ஏ.பி.ஆர்.ஓ.வாக வாழ்க்கையை ஆரம்பித்த நடராஜனின் வாழ்க்கையில் இன்று உலகம் முழுவதும் பல லட்சம் கோடிகளுக்கு சொத்துகள் இருக்கிறது. இதை கொள்ளையடிக்க நடராஜனின் செய்த தகிடுதத்தங்களை நாடறியும். அவரது குடும்பங்கள் அமைத்த வியூகங்களை ஊரறியும்.
நடராஜானின் தீராத ஆசை எப்படியாவது தமிழகத்தின் முதல்வராக ஆக வேண்டும் என்பதே. ஆதலால்தான் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகும் அவர் லாபியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். கடைசிவரை அது நிறைவேறாமல் போய்விட்டது. இது தமிழர்கள் செய்த புண்ணியம். ஒரு வேளை நடராஜன் முதல்வர் ஆகியிருந்தால் தமிழகம் இன்னும் எத்தனை இன்னல்களை சந்தித்து இருக்குமோ? இன்னும் எத்தனை இயற்கை வளங்களை இழந்து இருக்குமோ? மன்னார்குடியிலிருந்து இந்நேரம் குறைந்தது 10 நபர்களாவது முதல்வர் ஆகியிருப்பார்கள். அதிகார மையங்கள் எப்படி இருக்கும் என நினைத்தாலே அதிபயங்கரமாக இருக்கிறது.நல்ல வேலை இந்த விவகாரத்தில் புளி மூட்டை எடப்பாடி ஒரு வழியில் தமிழர்களுக்கு கிடைத்த கிஃப்ட்.
ஒரு தெலுங்கரோ ,மலையாளியோ இப்படி தனது மனைவியை இன்னொருவர் வீட்டில் விட்டு இருந்து இருப்பார்களா? பணம் சம்பாதிக்கவும், கொள்ளையடிக்கவும், அடித்த பணத்தில் உல்லாசமாக ஊர் சுத்தவும், பிடித்த நடிகைகளுடன் மஜா செய்ய வேண்டும். இதுதான் நடராஜன் வகுத்து வாழ்ந்த கொள்கை. முதல்வர் நாற்காலி மீது தீராத ஆசைகொண்டு இருந்தார் நடராஜன். மற்றபடி அனைத்து கட்டிங், கமிஷன், அதிகாரம் செய்வது என அனைத்து வேலைகளும் நடராஜன் மூலம் சசிகலாவிற்கு சென்றதை இந்த உலகம் அறியும்.
ஐரோப்பியாவில் செய்த முதலீடுகள் குறித்து கேட்டு தற்போது பழ.நெடுமாறன் பிள்ளையை பிடித்து உலுக்க ஆரம்பித்துள்ளனர். அவர் ஒரு வார்த்தை மட்டுமே சொல்லி இருக்கிறார், நான் நினைக்கவே இல்லை இவர் இவ்வளவு சீக்கிரம் போய் சேருவார் என நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். இந்த வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்ததை சொல்லியா தெரிய வேண்டும். விடுதலைப் புலிகளை ஏன் நெடுமாறன் ஏன் கையில் எடுத்து வைத்திருந்தார் என்பது இப்போது புரியும்.
போனால் போகட்டும் வங்கிக் குடித்ததிற்கும் , புகைத்ததிற்கும், புசித்தற்காகவும் ஒரு வாரம் பேசிக்கொள்ளட்டுமே என விட்டால், கடந்த கால உண்மைகளை அப்படியே விழுங்கும் அளவுக்கு ஓவர் சப்தம். அதனால் பழசை கொஞ்சம் கிளற வேண்டியிருந்தது. குறிப்பாக ஊடகவியலாளர்கள் உண்மை என்னவென்று அறியாமல் இரங்கல் எழுதுகிறேன் என்ற பெயரில் பல்வேறு வரலாற்று சம்பவங்களை திரித்து கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக ஒரு பத்திரிகையாளர் இப்படி எழுதி இருக்கிறார் ''69 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையின் கீழ் கொண்டுவந்தது நடராஜனே என்று'' . தமிழகம் மட்டுமல்ல டெல்லியே அறியும் இந்த விஷயத்தை செய்தது தஞ்சாவூர் எஸ்.டி.எஸ் சோம சுந்தரம் என. ஜெயா, சங்கர்தயாள் ஷர்மா, நரசிம்மராவ் காலத்தில் இவர்தான் இதனை செய்தார். தவிர 69 சதவிகித இட ஒதுக்கீடுக்காக அரும்பாடுபட்டது அய்யா ஆனைமுத்து தான். இவரை கண்டால் கருணாநிதியே நடுங்குவார். 94 வயதில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் போய் உண்மையை தெரிந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக