செவ்வாய், 20 மார்ச், 2018

மதி நியூஸ் 20/03/18 !



மதி நியூஸ் 20/03/18 !

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்கள் படுகொலை.

சிரியாவின் அர்பின் பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 15 பள்ளி குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கணவர் நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவிற்கு 15நாள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை : நெல்லை மாவட்டம், கோட்டை வாசல் பகுதிக்கு வந்தது ரதம்.

ரத யாத்திரையால் நெல்லையில் பதற்றம் : சொந்த வேலைக்கு சென்ற பொதுமக்களையும் கைது செய்யும் காவல்துறை.

தமிழகத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதற்கு பேரவையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் : மத நல்லிணக்க மண்ணில் ரத யாத்திரையை அனுமதித்தது அரசு செய்த துரோகம் - முக.ஸ்டாலின்.

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா ? பாஜக ஆட்சியா ? - முக.ஸ்டாலின் கேள்வி.

ஐந்து மாநிலங்கள் வழியாக வந்த ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது முக.ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்.

ரத யாத்திரை விவகாரம் : சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட முக.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது.

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே விடுதியில் உள்ள பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது ஆலங்குடி போலீசார் விசாரணை.

உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சசிகலா கணவர் ம.நடராஜன் காலமானார்.

ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம் - அஞ்சலி செலுத்திய பின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா பேட்டி.

பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் செயல்படுகிறது என்பது தெரியவில்லை: தொல். திருமாவளவன்.

பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் ? - அமைச்சர் ஜெயக்குமார்.

ரத யாத்திரைக்கும் பாஜக , ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி.க்கும் தொடர்பில்லை : அமைச்சர் ஜெயக்குமார்.

நெல்லையில் விஎச்பி நடத்தும் ரத யாத்திரைக்கு எந்தவித தடையும் இல்லை, பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர் - எஸ்பி அருண் சக்திகுமார்.

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடயிருந்த சீமான் , தொல். திருமாவளவன் , ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமராஜ்ய ரத யாத்திரை : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் 10 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.

தீவிரவாதிகளால் ஒன்பது முறை சுடப்பட்டு மீண்ட சிஆர்பிஎஃப் அதிகாரி சேத்தன் சீட்டா ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தார்.

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது பேரவையில் 2-ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.

ம.நடராசனின் மறைவு உள்ளத்தை உலுக்குகிறது - மதிமுக பொதுச்செயளாலர் வைகோ.

தமிழகத்தை கலவர பூமியாக்கி ஆட்சியை பிடிப்பதே பாஜகவின் திட்டம்.பக்தியை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றுவதே பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளார்ந்த திட்டம் : கி.வீரமணி.

இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் தான் : தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு.

மக்களை பிளவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷித் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ மறியல், 500-க்கும் மேற்பட்டோர் கைது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக