வெள்ளி, 9 மார்ச், 2018

மதி நியூஸ் 09/03/18

மதி நியூஸ்  09/03/18

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்தால், குற்றவாளிக்கு மரண தண்டனை - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பள்ளி நிர்வாகங்களே முழு பொறுப்பு - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.

உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழுக்கு 2-வது இடம், ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் அதிக இணையதளங்கள்.

யாழ்பாண நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தககங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால்அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது - போக்குவரத்து காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு.

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் கல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் தாக்கிக் கொண்டனர்.

விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே புதுக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி.

எங்கள் கட்சி பெண் நிர்வாகியை தாக்கிய மிகக் கொச்சயான நபர் அய்யாகண்ணு; அவரை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை - ஹெச் ராஜா.

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் - பா.ஜனதா.

அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

நேர்மையான, திறமையான வழக்கறிஞர்களை நியமிக்காவிட்டால், அது மாநிலத்தின் நலனுக்கு எதிரானதாகி விடும் - உயர்நீதிமன்றம்.

கர்நாடகா பாகல்கோட் தாலுகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ.

திரிபுராவில் லெனின் சிலைஅகற்றப்பட்டதற்கு
கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர்
பெங்களூருவில் போராட்டம்.

கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்துவிட்டு, அழகேசன் தற்கொலைக்கு முயன்றார் - துணை ஆணையர் அரவிந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக