செவ்வாய், 20 மார்ச், 2018

மதி நியூஸ் 19/03/18 !

மதி நியூஸ்   19/03/18 !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 11வது நாளாக அதிமுக எம்பிக்கள் போராட்டம்.

2ஜி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்.

எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால் அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது - ராணுவ தலைமை தளபதி பிபின்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெரிய பிரச்னை என்றால் தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் பெரிய பிரச்னை - அதிமுக எம்பி வேணுகோபால்.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனின் 15 நாள் பரோல் நிறைவடைந்ததை அடுத்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆருஷி கொலை வழக்கில் அவரது பெற்றோரின் விடுதலைக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

கால்நடை தீவன 4-வது வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு.

பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது - தமிழக முதல்வர்.

காவிரிக்கும், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து பிரச்சனைக்கும் தொடர்பில்லை ஒன்றோடு ஒன்றை முடிச்சுப் போட வேண்டாம் - ஓபிஎஸ்.

தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி, உலகம் உள்ளவரை தழைத்தோங்கும் -
தமிழ் மொழியை பாஜக நசுக்க பார்ப்பதாக ராகுல்காந்தி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு.

வாக்குச் சீட்டு முறை கொண்டு வந்தாலும், காங்கிரஸ் கட்சியால் டெபாசிட் வாங்க முடியாது - தமிழிசை சௌந்தரராஜன்.

ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற தடை கோரிய மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து வழக்கு விசாரணையை ஏப்.9க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

திருச்சி பெண் உஷா உயிரிழக்க முக்கிய காரணம் அவரது கணவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுதான் : சென்னை உயர்நீதிமன்றம்.

டெல்லியில் மார்ச் 23-ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக-வின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வரும் 28ம் தேதி ஆஜராக 7 மருத்துவர்களுக்கு சம்மன்.

மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முடிவெடுக்க வரும் 29ஆம் தேதி வரை காத்திருப்போம் - ஓபிஎஸ்.

திராவிடம் இந்து விரோதம் அல்ல; சிலர் திராவிடம் என்ற பெயரில் இந்து விரோதம் செய்கின்றனர் - மன்னார்குடி ஜீயர்.

அரசியல் பயணத்தில் ரஜினி- கமல் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் ஆண்டாள் குறித்த கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம் - மன்னார்குடி ஜீயர்.

மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே, அதிமுக எம்பிக்கள் அவையை முடக்குகிறார்கள் என்றே தெரிகிறது - சமாஜ்வாதி எம்.பி. ராம்கோபால் யாதவ்.

டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் உள்ள ரோஹின்கியா முஸ்லீம்கள் அகதிகள் முகாம்களின் தரத்தினை உயர்த்த கோரிய மனு மீது விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

"லிங்காயத்" சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்தது கர்நாடகா அரசு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ரங்கராஜ மகா தேசிக ஜீயர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக