செவ்வாய், 20 மார்ச், 2018

லிங்காயத்து - இந்துக்கள் அல்ல - தனி மதம் - தமிழ் சமய சூழல்

லிங்காயத்து - இந்துக்கள் அல்ல - தனி மதம் - தமிழ் சமய சூழல்

கர்நாடகாவில் பெருமளவில் உள்ள லிங்காயத்து பிரிவு மக்கள், தாங்கள் "ஹிந்துக்கள்" கிடையாது, எங்களுடையது பசவண்ணாவால் 12 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட தனி சமயம்.. எனவே எங்களை தனி மதமாக அறிவிக்கவேண்டும்.. என்ற கோரிக்கையை எழுப்பிவருகிறார்கள்.. இது திடீர் கோரிக்கையல்ல.. பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கையை லிங்காயத்து சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..

காரணம், லிங்காயத்துகளின் கொள்கைகளும், வழிபாட்டு முறைகளும், வைதீக ஹிந்து முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.. இந்து சனதான வேதங்களையும் உபநிஷத்துகளையும், பிறப்பின் அடிப்படை வர்ணங்களையும், மனுதர்மத்தையும் ஏற்றுகொள்ளாத, புறம்தள்ளுகிற பிரிவு தான் இந்த லிங்காயத்துகள்.. அனைவரும் சமம் என்னும் சன்மார்க்க முறையினர்.. யாகம், நெருப்பு போன்றவற்றை கைகொள்ளாதவர்கள்.. பிராமணர்களை வைத்து எந்த சடங்கு, பூஜைகளை செய்யாதவர்கள்.. பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வை திணிக்கும் மனுதர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்காத முற்போக்கான அறிவியல் பூர்வமான மதம்தான் லிங்காயத்துகளின் வீரசைவம். இவர்களுடைய  திருமணம் மற்ற ஹிந்துக்கள் போல் அந்தணர் வைத்து நடத்த படுவதில்லை. வேதங்கள் ஓதப்படுவதில்லை. நெருப்பு மூட்டப்படுவதில்லை. இவர்களுடைய மடங்களின் தலைவர்கள் தலைமையில் திருமணங்கள் நடத்தப்படுகிறது.

பார்க்கபோனால், பசவண்ணா ஒரு பிராமணர்.. அரசர்களின் ஆலோசகராக இருந்தவர்.. அக்காலத்திய வைதீக சனதான முறைகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, மனம் வெதும்பி, தனி வழிபாட்டு முறையை ஏற்ப்படுத்தி, எந்த சாதியினரும், இந்த வழிபாட்டு முறையை பின்பற்றலாம், என இந்த லிங்காயத்து வழிபாட்டு  முறையை ஸ்தாபித்தார்.. உள்ளங்கையில் ஒரு சிறு கருப்பு நிற லிங்க வடிவம் மட்டுமே வைத்து வழிபடுவார்கள்.. மற்றப்படி கோயில், சிலைகள், தெய்வங்கள் என்ற பொதுவான இந்து வழிபாட்டுமுறை கிடையாது..

தமிழ் சமய சூழல்..

ஹிந்துக்கள் என்னும் தனி அடையாளம்மே ஆங்கிலேயர் ஆட்சியின் பின் பகுதிகளில் தான் கொடுக்கப்பட்டது.. அதுவரை, இந்தியாவில், சைவர்கள், வைணவர்கள், ஆசிகம், சாகியம் என பல்வேறு பிரிவுகள், தனி தனியான வழிபாட்டு முறைகளை கொண்டிருந்தன.. தமிழகத்தில் அரசர்கள் எந்த பிரிவை பின்பற்றினாரோ, அதுவே அந்நேரத்தில் மக்களின் மதமாக விளங்கியது.. மூத்தோர் (குலதெய்வம், வீட்டு சாமி) வழிபாடு, வீரர்களின் நடுக்கல் வழிபாடு போன்றவைகளே முதலில் தமிழர்கள் மத்தியில் இருந்தது.. பின்னர், சமணம், பவுத்தம் போன்ற சமயங்கள் எழுச்சிபெற்ற காலங்களில், சைவம், வைணவம் போன்றவை, ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற சமய அடியார்களால் மீள்விக்கப்பட்டது.. அப்போதும், சைவம், வைணவம் என பிரிந்தே செயல்பட்டன.. இப்போதும், பெருமாளை கும்பிடும் வைதீக வைணவ பிரிவினர், சிவன் கோயில்களுக்கு செல்லமாட்ர்கள்.. இதிலும், துவைதம், உருவ வழிபாட்டை மறுக்கும் அத்வைதம், விசிட்டாத்துவைதம், வடகலை, தென்கலை என ஏகப்பட்ட பிரிவுகள்...

பொதுவாக சைவ பிரிவு தமிழக மக்களிடைய பரவலாக ஊடுருவிய ஒன்றாக விளங்கியது.. பிராமணர்கள் அல்லாத பல்வேறு சைவ மடங்கள் இங்கு உண்டு.. தமிழ் சமூகம் எப்போது சனதான மனுதர்ம வைதீக வேத மதத்தை எதிர்த்தே வந்துள்ளது.. சைவ மடங்கள், சைவ சிந்தாந்த திருச்சபைகள், சித்தர்களின் மரபுகள், பட்டினத்தார் போன்ற துறவிகள், அருப்பெரும் சோதி வள்ளலாரரின் சன்மார்க்க சபை, முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர் என பல்வேறு காலகட்டங்களில் வைதீக வேத மதத்தை, அதின் மக்களை பிரிக்கும், இழிவுபடுத்தும் கொள்கைகளை எதிர்த்து, சமதர்மம் பேசினார்கள்.. ஈழத்திலும் தமிழர்கள் சைவ மதத்தினர் என்றுதான் அடையாளபடுத்திகொண்டனர்..

ஆனால், பிற்காலத்தில், எதிர்ப்பவர்களையும் உள்வாங்கி, "ஹிந்து" என பொது அடையாளம் சனதான மதவாதிகளால் உருவாக்கப்பட்டது.. இந்திய அரசியல் சட்டத்திலும், யார் இந்துகள் என்னும் பிரிவில், யாரல்லாம் முகமதியர் இல்லையோ, கிருஸ்துவர் இல்லையோ, பார்சி இல்லையோ, யூதமதம் இல்லையோ, அவர்கள் எல்லாம் சட்டத்தின்படி இந்துக்கள்.. அதிலும் பவுத்த, சீக்கிய, சமணர் (ஜெயின்) கள், சட்டத்தின் படி இந்துக்கள், ஆனால், மதத்தின் படி இந்துக்கள் அல்ல.. (The Buddhists, Jains and Sikhs are explicitly included in the Hindus by law but separated from the Hindus by religion)

இப்படி பிராமணர்களின் மேலாதிகத்துக்காக, எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  கலந்து கட்டப்பட்ட கதம்பம் தான் இப்போதைய ஹிந்து மதம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக