வியாழன், 15 மார்ச், 2018

மதி நியூஸ் 15/03/18 !

மதி நியூஸ்  15/03/18 !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏர்செல்லை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு கால் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக, திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய தயார் - முக.ஸ்டாலின்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலமைச்சர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேச்சு.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இன்று வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லைஅனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பிரதமரை சந்திக்க அரசு முயற்சி எடுக்கவில்லை - முக.ஸ்டாலின்.

அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும் - டிடிவி தினகரன்.

தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி; செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிப்பு.

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு.அரசு ஊழியர் ஊதிய உயர்வால் ரூ14,719 கோடி செலவு.மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் - தமிழக பட்ஜெட்.

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.
மீன்வளத்துறைக்கு ரூ.1016 கோடி ஒதுக்கீடு.
குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி ஒதுக்கீடு - தமிழக பட்ஜெட்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு
மெரினாவில் நினைவு மண்டபம்
அமைக்க ரூ.50.80 கோடி ஒதுக்கீடு.


பெரும்பான்மை இல்லாத அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுகாவினர் வெளிநடப்பு.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - டிடிவி அறிவிப்பு : கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களுக்கிடையே ஜெயலலிதா உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ள கொடியையும் அறிமுகப்படுத்தினார் டிடிவி தினகரன்.

நீரவ் மோடி, சோக்சியை கைது செய்ய, இன்டர்போல் நிறுவனத்தின் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்.

அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

சிலை விவகாரம் : ஹெச்.ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

சட்டமன்றத்துக்கு கருப்பு சட்டை அணிந்து திமுகவினர் வருகைதந்துள்ளனர்.

தெலுங்கானாவைச் சேர்ந்த தீவிரவாதி காஷ்மீரில் பாதுகாப்புப்படை உடனான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொலை.

துயரத்தின் வெளிபாடாகவே திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வருகை.தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம், அதன் பிரதிபலிப்பாகவே பட்ஜெட் இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல 2 வது நாளாக தடை.தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு : வனத்துறையினர்.

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் தினமும் மின்சார ரயில் 30-நிமிடம் தாமதமாக வருவதால் பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டம்.

சிபிஎஸ்இ 12-ம்வகுப்பு கணக்குப்பதிவியல் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் லீக் ஆனது - சிபிஎஸ்இ விசாரணை தேர்வை ரத்து செய்வது குறித்தும் சிபிஎஸ ஆலோசனை.

பாஜக தோல்வி தொடர உ.பி., பீகாரில் பின்பற்றப்பட்ட கூட்டணி பார்முலாவை, மற்ற இடங்களிலும் பின்பற்ற வேண்டும் - தி.க. தலைவர் கி.வீரமணி.

வேலூர் சத்துவாச்சாரியில் ரூ 2.45 கோடியில், மாநில முதன்மைநிலை பளுதூக்கும் மையத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

2 நாட்களுக்கு தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக