ஞாயிறு, 4 மார்ச், 2018

மதி நியூஸ் 05/03/18 !

மதி நியூஸ் 05/03/18 !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தில் அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் முழக்கம் : அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அரசிடம் ஆலோசித்த பின் மாநிலங்களவையில் விவாதிக்கப்படும் - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் : காவிரி உரிமை மீட்புக் குழு.

ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையிலுள்ள ரவிச்சந்திரன் 2வார கால பரோலில் சொந்த ஊருக்குச் சென்றார்.

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட 4 மனுக்கள் மீதான விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் : அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு.

ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமையும் என்றால், அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்ய தயார் - அதிமுக எம்பி மைத்ரேயன்.

சட்டப்பேரவை புதிய செயலாளராக சீனிவாசன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு.

சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும் அகற்றம்விதிமீறல் பேனர் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் தமிழக அரசு தகவல் - விசாரணை நாளை ஒத்திவைப்பு.

தமிழக முதலமைச்சர் தலைமையிலான மாநாட்டில் 12 பிரிவுகளின் கீழ் ஆய்வு : மதத் தீவிரவாதம், இடதுசாரி தீவிரவாதம் குறித்து கூட்டத்தில் விவாதம்.கோவில்கள் பாதுகாப்பு, பேரிடர் மீட்புக்கு புதிய படை உள்ளிட்ட 12 பிரிவுகளில் ஆய்வு.

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு : வடகிழக்கு மாநில பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினியோ, கமலோ யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்ஜிஆர் , ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் அரசியல் செய்ய வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்.

சிரிப்புக்கும் சில மதிப்பு உள்ளது நான் ஓபிஎஸ்ஸை பார்த்து சிரித்ததால் அவருக்கு முதல்வர் பதவியே போய்விட்டது - முக.ஸ்டாலின்.

விரக்தியின் உச்சியில் இருக்கும் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை என பேசுகிறார்.எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் பக்குவப்படாத தலைவராக விளங்குகிறார்.நான் எந்த விஷயத்தையும் முந்திரிக் கொட்டை போன்று சொல்வது கிடையாது – அமைச்சர் ஜெயக்குமார்.

நள்ளிரவு 12 மணிக்கு கூட பெண்கள் சுதந்திரமாக செல்லும் நிலை தமிழகத்தில் உள்ளது.இந்திய அளவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.

நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடிக்கு வாசலில் நின்று பாஜக தலைவர்கள் வரவேற்பு - 3 மாநில பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு மோடியே கரணம் என எம்.பி.க்கள் பாராட்டு.

ராமேஸ்வரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அப்துல் கலாமின் அண்ணன் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரிப்பு.

4 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த தமிழக ஐஎப்எஸ் அதிகாரி மணிகண்டன் குடும்பத்தினருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல்.

சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு : மாணவர்கள் போராட்டம் குறித்து கவனிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு கருத்து.

சென்னை : ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் கமல் ஆலோசனை.

அரசு சேவைகளை வெளிப்படையாகவும், விரைவாகவும் வழங்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் - ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு - நாளை விசாரணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக