டெல்லியில் நடைபெற்ற சசிகலா புஷ்பாவின் திருமணம்
இன்று டெல்லியில் சசிகலா புஷ்பாவின் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா. இவரது கணவர் லிங்கேஸ்வரன். இவருக்கும் சசிகலா புஷ்பாவிற்கும் முறைப்படி விவாகரத்தானது.
இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பாவுக்கும்,டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் சத்யபிரியா என்பவர் தனது குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், டெல்லி ராமசாமி தனது கணவர் என்றும் தனக்கும் அவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது எனவும் கூறி வழக்கு தொடர்ந்தார். சத்திய பிரியா தொடர்ந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்வதில் சிக்கல் எற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கும் ராமசாமிக்கும் டெல்லியில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக