புதன், 4 ஜூலை, 2018

04-07-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

04-07-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

அதிமுக கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்புகளை தொடர்ந்து, 3வது நீதிபதி இன்று வழக்கின் விசாரணையை துவக்குகிறார்.
டெல்லி மாநிலத்தில் முதன்மை ஆட்சி அதிகாரங்கள் மாநில அரசுக்கா அல்லது துணைநிலை ஆளுநருக்கா என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று விசாரிக்கிறது.
தொடர் மழை காரணமாக, அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில், 5 பக்தர்கள் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். 

மாட்டிறைச்சி வைத்திருக்கும் காரணத்திற்காக பசு பாதுகாப்பு அமைப்பினரால் பலர் அடித்துக் கொல்லப்பட்டும் சம்பவங்கள் குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்த காரணத்திற்காகவும், பொதுமக்களோ, பாதுகாப்பு அமைப்பினரோ தங்கள் கையில் சட்டத்தை எடுக்க கூடாது என கூறியது. இதுபோன்ற அமைப்புகளை ஒடுக்க மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று போட்டியில், ஸ்விட்சர்லாந்தை ஸ்வீடன் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், கொலம்பியாவை இங்கிலாந்து பெனால்டி ஷூட்டில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 
54 பந்துகளில் கே.எல்.ராகுல் அடித்த சதத்தின் உதவியோடு, இங்கிலாந்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் டி20 போட்டியை கைப்பற்றியது இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக