ஞாயிறு, 1 ஜூலை, 2018

புதிய விதிமுறை..! புதிய வசதி..!! வாட்ஸ் அப்-பின் அசத்தல் அறிமுகம்.!! நீண்ட நாள் தலைவலிக்கு முற்றுப்புள்ளி..!!

புதிய விதிமுறை..! புதிய வசதி..!! வாட்ஸ் அப்-பின் அசத்தல் அறிமுகம்.!! நீண்ட நாள் தலைவலிக்கு முற்றுப்புள்ளி..!!



புதிய விதிமுறை..! புதிய வசதி..!! வாட்ஸ் அப்-பின் அசத்தல் அறிமுகம்.!! நீண்ட நாள் தலைவலிக்கு முற்றுப்புள்ளி..!!!

வாட்ஸ் அப் எனும் சமூகவலைதளத்தில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் சில வசதிகள் அறிமுக செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் வாட்ஸ் அப் குரூப் அட்மினாக இருப்பவர், அந்த குரூப்பில் உள்ள யார், யார் தகவல் அனுப்ப வேண்டும் என்பதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
இதன் காரணமாக முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வாட்ஸ் அப் குரூப்பில், குரூப் உறுப்பினர்கள் தங்கள் இஷ்டத்துக்கு தேவையற்ற தகவலைப் பகிர்ந்து கடுப்பேற்றுவது தவிர்க்கப்படும்.
மேலும், முக்கியமான தகவல்களைப், இதுமாதிரியான தேவையில்லாத தகவல்கள் பின்னுக்குத் தள்ளுவதை தவிர்க்கலாம். இந்த வசதியைப் பெற நீங்கள் புதிய அப்டேட் பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
பின், வாட்ஸ் அப் குரூப் செட்டிங்க்ஸ் மெனுவுக்கு சென்று, சென்ட் மெஸேஜ் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும், அதில் எடிட் குரூப் இன்ஃபோவும் என்று இருக்கும். அதை கிளிக் செய்தால், ஆல் பார்டிசிபன்ட்ஸ், ஒன்லி அட்மின்ஸ் என்று இரண்டு ஆப்ஷன் இருக்கும். 
இதில், ஒன்லி அட்மின்ஸ் என்பதை செலக்ட் செய்தால் அவர்கள் மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். அதே வேளையில் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள ஆல் பார்ட்டிசபன்ட்ஸுக்கும் பிராட்காஸ்ட் மெஸேஜாக சென்றுவிடும். அதில் யார் தகவல் அனுப்ப வேண்டும் என்பதை அட்மின் நிர்ணயிக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக