வியாழன், 5 ஜூலை, 2018

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!

கோப்புப்படம் சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக நாளை(ஜூலை 7) அமெரிக்கா செல்கிறார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும், அவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வேகமாக நடக்க முடியாமலும், தொடர்ச்சியாக நீண்ட நேரம் பேசமுடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். 

இந்நிலையில் தேமுதிக தலைவர் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை 7 (நாளை) அமெரிக்கா செல்ல இருக்கிறார். விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேமலதாவும் செல்கிறார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறும் விஜயகாந்த், அடுத்த மாதம் (ஆகஸ்டு) தனது பிறந்த நாளான 25-ந் தேதிக்குள் தமிழகம் திரும்புவார் என்று தேமுதிக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சிகிச்சைக்குப் பின் தமிழகம் திரும்பும் விஜயகாந்த் செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சி ஆண்டு விழாவில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாற்றுவார் அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக