எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்தினை எதிர்த்து திருவண்ணாமலையில் எழுச்சித்தமிழர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
......
சேலத்திலிருந்து சென்னை வரையில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி சாலைத் திட்டம் ஒன்றை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த முற்பட்டுள்ளன.
இதனால் ஐந்து மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களும் குடியிருப்புகளும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்களின் கருத்தை அறியாமலும், ஒப்புதலை பெறாமலும், பயமுறுத்தி பலவந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. மறுப்பு தெரிவிக்கும் மக்களை பொய் வழக்கு போட்டு கைது செய்கிறது.
இந்த அடக்குமுறையைக் கண்டித்தும் நிலப்பறிப்பை எதிர்த்தும் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் - விடுதலைசிறுத்தைகள்
இணைந்து திருவண்ணாமலையில் தலைவர்
தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக