வெள்ளி, 20 ஜூலை, 2018

இந்தியாவின் நம்பிக்கை ராகுல் காந்தி


ராகுல்..
ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே பாஜகவினரால் பப்பு என கேலிசெய்யபட்டவர்..
மிக நிதானமாக அதிலும் தெளிவான ஆதாரங்களோடு .. செவியில் அறைகிற மாதிரி கேள்விகளை தொடுக்கிறார்.. பாவம் பதில் சொல்ல வாய்ப்பு வழங்கபடுமென சபாநாயகர் எழுந்துநின்று சொல்லியும் எங்கே தொடர்ந்து பேசினால் இருப்பதையும் கழட்டி நிர்வாணபடுத்திவிடுவாரோ என அஞ்சி  சில அறிவிலி அமைச்சர்களும் ஊறுகாய்களும்
கூச்சலிட்டு சபையை நடத்தவிடவில்லை..
சரக்கிருக்கிவன் என்ன பேசினாலும் அதற்கு தகுந்த பதிலை நமக்கான வாய்ப்பு வரும் போது பதிலிளித்து விடுவான் பொய்களால் கட்டமைக்கபட்டவர்கள் அடிதளம் வலுவிழப்பது கூட தெரியாமல் கூச்சல் ரகளையில் ஈடுபட்டு திசைதிருப்புகிறார்கள்..
..
பாஜகவினர் எப்போதுமே நேர்மையான விவாதத்திற்கு வருவதில்லை 2ஜி விவாதத்தில் கூட பொய்யென்று தெரிந்தும் சிஏஜி அறிக்கை அனுமானம் என்றறிந்தும்.. தொடர்ந்து கூச்சல் ரகளை செய்து பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதே சிஏஜி அறிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாதென்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் பேசுவார்.. எப்போதுமே விவாதத்தில் கலந்து கொள்வதில்லை கலந்துகொண்டாலும் உண்மையை பேசுவதில்லை..
..
நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானம்  தோற்று போகுமென்று அறிந்தும் ஏன் கொண்டுவந்தார்கள் .. அரசின் செயல்களை கையாலாகாததனத்தை .. பணக்காரனுக்காக ..காப்ரேட்களுக்காக அரசு செயல்படுவதை, மதமோதலை செயற்கையாக உருவாக்கி குளிர்காயும் அயோக்கியதனத்தை,தாழ்த்தபட்ட மக்கள் நாட்டில் வேட்டையாடபடுவதை.. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து எழமுடியாமல் தவிப்பதை .. பணமதிப்பிழப்பென்ற பெயரில் மக்களை நடுதெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழிக்கிறேன் பேர்வழியென்று .. 480 % விழுக்காடு கருப்புபணம் புழங்கல் அதிகரிப்பதை..சுவிஸ் பேங்கில் இருக்கும் கருப்புபணத்தை மீட்டு மக்கள் வங்கி கணக்கில் ஒவ்வொருவருக்கும் #15 லட்சம்  வரவு வைப்பேன் என்றதை.., நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அஞ்சி ஓடியொழிகிற பிரதமரை அடையாளம்காட்ட..
சமூகநலன் சமநீதியற்ற அரசை தோலூறித்து காட்ட நீதிமன்றங்களை மநுநீதி மன்றங்களாக்கிய கொடுமையை விளக்க.. தொடர்ந்து புறக்கணிக்கபடும் மாநில நலன்களை பட்டியலிட்ட காட்ட வாக்கெடுப்போடு கூடிய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரபட்டது.. இன்னும் சிலமாதங்களே இந்த அரசின் பதவிகாலம் உள்ள நிலையில் .. மக்களுக்கு இவர்களின் யோக்கியதையை சொல்லவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம்.. எங்கே முழுவதும் கிழித்து தொங்கவிட்டுவிடுவார்களோ என அஞ்சி..
கூச்சலிட்டு அரசை எதிர்ப்பவர்களின் குரலை நசுக்கி மக்களுக்கு தெரியாமல் செய்துவிடலாமென நினைத்தால் அதைவிட அறிவிலித்தனம் வேறில்லை  ..
காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யாததை நான் நான்கே ஆண்டுகளில் செய்துமுடித்திவிட்டேனென பொதுகூட்டங்களில்
குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் ( அவர்தான் சொன்னார்) கண்களை பார்த்து பேச கூட அஞ்சம் கொள்கிறாரென்றால்  56 இன்ச் சுருங்கிவிட்டதா..?  ஐந்தாண்டுகளில் 20 தடவைக்குமேல் பாராளுமன்றத்திற்கு வராத பிரதமர்.. வாய்திறந்தால் பொய் பேசி திரியும் பிரதமர் சொன்னதை செய்ய வக்கில்லாத பிரதமர் காப்ரேட்களும் பிரதமர் .. சாமானியனுக்கு தேவையில்லை.. இவர் தோற்கடிக்கபடவேண்டும்.. ஜனநாயக முறைப்படி தேர்தலில் .. நாட்டை நாசமாக்கி இரத்தம் சிந்திய நம் மண்ணை சுத்தபடுத்திட ..
இந்த காவுகேட்கும் காவிகளை முகத்திரையை கிழித்து இனி எப்போதும் வரமுடியாதவாறு மாபெரும் தோல்வியை தருவோம்..
அதற்காக முதல் குரலாய் ராகுல் குரல் நாடாளுமன்ற ஒலித்ததாகவே எண்ணுகிறேன்..
..
இந்தியாவின் நம்பிக்கை ராகுல் காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக