குமரியில் மழை நீடிப்பு பலத்த காற்று : 1000த்துக்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்புகின்றன.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 1000த்துக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். தென் மேற்கு பருவமழை காரணமாக குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும், சாரல் மழையுமாக பெய்து வருவதால், குமரி மாவட்டம் குளுகுளு கால நிலையை எட்டி இருக்கிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, அருமனை உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவ்வப்போது சாரலும், பலத்த மழையுமாக இருந்தது. காற்றும் வேகமாக வீசியது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்தது. இந்த மழை காரணமாக அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 11.20 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.30 அடியை எட்டி உள்ளது. சிற்றார் 1 14.01 அடி, சிற்றார் 2 14.10 அடி, பொய்கை 15.40 அடி, மாம்பழத்துறையாறு 54.12 அடியாக உள்ளன. மாம்பழத்துறையாறு முழு கொள்ளளவு 54.12 அடியை எட்டி இருக்கிறது. மழை அளவை பொறுத்தவரை பூதப்பாண்டி 12.2 மில்லி மீட்டர், சிற்றார் 1 10, களியல் 6.2, கன்னிமார் 2.6, கொட்டாரம் 11.6, குழித்துறை 27, மயிலாடி 6.6, நாகர்கோவில் 14.2, பேச்சிப்பாறை 16, பெருஞ்சாணி 13.6, புத்தன் அணை 14.2, சிவலோகம் (சிற்றார் 2) 6.2, சுருளகோடு 18.4, தக்கலை 18, குளச்சல் 9.6, இரணியல் 9.6, பாலமோர் 37, மாம்பழத்துறையாறு 23, ஆரல்வாய்மொழி 6, கோழிப்போர்விளை 18, அடையாமடை 31, குருந்தன்கோடு 7.6, முள்ளங்கினாவிளை 18, ஆணைக்கிடங்கு 17.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 2040 குளங்கள் உள்ளன. இவற்றில் 50 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.
1000த்துக்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. மழை நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில தினங்களல் இந்த குளங்களும் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் நேற்று காலை கடல் காற்று அதிகமாக இருந்தது. மேலும் நீர் மட்டமும் தாழ்வான நிலையில் இருந்ததால், நேற்று காலை படகு போக்குவரத்து நடைபெற வில்லை. பின்னர் காலை 11 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு காலையில் இருந்து முற்றிலுமாக படகு போக்குவரத்து நடைபெற வில்லை. பகல் 2 மணியில் இருந்து கடல் காற்று அதிகமாக இருந்ததால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரியில் மழை பெய்த வண்ணம் இருந்தது. விடுமுறை தினமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்தது. இதே போல் திற்பரப்பிலும் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக