உலகின் மிக உயரமான மலைப்பாதையில் குவியும் சாகச விரும்பிகள்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நுப்ரா பள்ளத்தாக்கு பகுதியையும் லெஹ் என்னும் இடத்தையும் இணைக்கும் பாதையாக கர்துங் லா பாஸ் பகுதிய உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் தற்போது குவிந்து வருகின்றனர்.
இந்த பாதை 5,000 மீ உயரமும், லேஹ்-வில் இருந்து 39.7 கி.மீ. தூரமும் கொண்டது. மேலும், இது நுப்ரா மற்றும் ஸ்யோக் பள்ளத்தாக்கை இணைக்கும் முக்கிய நுழைவுப் பாதையாகும் உள்ளது.
இந்த பாதை கோடை காலத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்வதற்கு திறக்கப்படும். அந்த வகையில் இந்த மலைப்பாதையானது தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இதற்காக உலகின் பல இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தற்போது இங்கு குவிந்து வருகின்றனர். அவர்கள் உலகின் மிக உயரமான மலைப்பாதையில் சாகச பயணத்தை உற்சாகமாக மேற்கொள்கின்றனர்.
இதில், பலர் இயற்கை எழில் கொஞ்சும் பனி படர்ந்த மலைகளை கண்டு ரசித்துக்கொண்டும், தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக