தலைப்புச் செய்திகள்-20-07-18
*பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி பாராட்டு*
டெல்லி: பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
*பேரிடர் பயிற்சியின்போது மாணவி பலியான சம்பவம் : பயிற்சியாளர் வீட்டிலிருந்து ஆவணங்கள் பறிமுதல்*
கோவை : கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி பலியான சம்பவத்தில் கைதான போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் வீட்டில் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணினி, மடிக்கணினி, சான்றிதழ்கள், பிரிண்டர் இயந்திரம், சீல் உள்ளிடவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
*ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு*
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250லிருந்து ரூ.300 ஆகவும், இதர பிரிவினருக்கு ரூ.500லிருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
*கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.275ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்*
புதுடெல்லி : கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 10 சதவிகிதம் சர்க்கரை சத்துள்ள கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.275ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக்கத்தில் NAAC கமிட்டி நாளை ஆய்வு*
நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக்கத்தின் தரத்தை NAAC கமிட்டி நாளை ஆய்வு செய்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு ஆய்வு நடைபெற உள்ளதாகவும், ஆய்வு முடிவில் A++ தரம் கிடைக்கும் என நம்புவதாகவும் துணைவேந்தர் பாஸ்கர் கூறியுள்ளார்.
*குகையில் இருந்து நாங்கள் மீட்கப்பட்டது அரிய நிகழ்வாகும்: தாய்லாந்து சிறுவர்கள் பேட்டி*
சியாங்ராய்: மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தாய்லாந்து சிறுவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் சியாங்ராய் நகரில் இருந்து தேசிய அளவில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட 12 சிறுவர்களும் இதனை தெரிவித்துள்ளனர். குகையில் இருந்து நாங்கள் மீட்கப்பட்டது அரிய நிகழ்வாகும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். தாம் லுவாங் குகைக்குள் 12 சிறுவர்ளும் கால்பந்து பயிற்சியாளரும் ஜூன் 23ம் தேதி சிக்கினர். ஜூலை 8 முதல் 10 வரை அணிஅணியாக 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*தூத்துக்குடியில் 99 நாட்கள் நடைபெற்ற போராட்டம் குறித்து அறிக்கை தாக்க செய்ய காவல்துறைக்கு உத்தரவு*
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா? என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டம் குறித்து உளவுத்துறை சீலிட்ட கவரில் அறிக்கை தாக்க செய்ய உத்தரவிட்டுள்ளது.
*ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் முரண்பாடு*
சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், பாதுகாப்பு அதிகாரி, ஓட்டுனர் முரண்பாடான வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆணையத்தில் அப்பல்லோ ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இன்று வாக்குமூலம் அளித்தார். இருதரப்பினரின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. மருத்துவமனை செல்லும் வழியில் ஜெ.வுக்கு சுயநினைவு திரும்பியதாக சசிகலா வாக்குமூலம் அளித்திருந்தார். மருத்துவமனை வந்த பிறகே ஜெ.வுக்கு நினைவு திரும்பியதாக டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
*ஜூலை 20 முதல் சரக்கு வாகனங்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் : லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு*
சென்னை : ஜூலை 20ம் தேதி முதல் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டீசல் விலை, காப்பீடு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.
*எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தோண்டத் தோண்ட நகை குவியல்*
சென்னை: எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தோண்டத் தோண்ட நகை குவியல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்யாதுரையின் வீடு, அலுவலகங்களில் 3வது நாளாக ஐ.டி. ரெய்டு தொடர்கிறது. இதுவரை ரூ.605 கோடி பணம், 354 கிலோ தங்கம் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை குறைத்துக் காட்ட முயற்சி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
*பலாத்கார குற்றவாளிகளுக்கு மனிதாபிமானம் காட்டக்ககூடாது: கமல்ஹாசன் பேட்டி*
சென்னை: ரெய்டுகளில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கே? என கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருமான வரி ரெய்டு கண்துடைப்போ என்ற சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், பலாத்கார வழக்குகளில் தெரிந்தவர்களே ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதித்துறை விரைவாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பலாத்கார குற்றவாளிகளுக்கு மனிதாபிமானம் காட்டக்ககூடாது எனவும் கமல் கூறியுள்ளார்.
*சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடு : அமைச்சர் சுரேந்தரன்*
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடு என்று கேரள அமைச்சர் சுரேந்தரன் கூறியுள்ளார். கேரள அரசின் நிலைப்பாடு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கேரள அரசு கட்டுப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
*நிலம் அளவிடும் பணியின்போது பாதுகாப்புக்கு செல்லும் போலீஸ் அத்துமீறுவது ஏன்? ஐகோர்ட் சரமாரி கேள்வி*
சென்னை: 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலம் அளவிடும் பணியின்போது பாதுகாப்புக்கு செல்லும் போலீஸ் அத்துமீறுவது ஏன்? என ஐகோர்ட் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது. வயதானவர்களை போலீஸ் துன்புறுத்தி தள்ளிவிடுவது கண்டனத்துக்குரியது என ஐகோர்ட் கூறியுள்ளது.
*தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்*
தாய்லாந்து : தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றபோது வெள்ளம் வந்ததால் குகையில் சிக்கிய சிறுவர்கள் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
*இமாச்சல பிரதேசத்தில் போர் விமானம் நொறுங்கிய விவகாரம்: மாயமான விமானி உயிரிழப்பு*
இமாச்சல பிரதேசம்: பஞ்சாப்பின் பதான்கோட் பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்த எம்ஐஜி -21 ரக போர் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இமாச்சல பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் உள்ள பட்டா ஜட்டியன் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தையடுத்து விமானியை காணவில்லை. இந்த போர் விமானத்தில் பயணி மட்டுமே இருந்தார். இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் விமானி உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*புதுச்சேரியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த உதவிப் பேராசிரியர் கைது*
புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசு ஓவியக்கல்லூரி ஊழியரான 63 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில் உதவிப் பேராசிரியரான ராஜேந்திரன்(55) கைது செய்யப்பட்டுள்ளார். உதவிப் பேராசிரியர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
*நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் மேலும் ரூ.6 கோடி பறிமுதல்*
சென்னை : நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் இதுவரை ரூ.180 கோடி பணம் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி சோதனையில் நேற்று வரை ரூ.174 கோடி பிடிபட்ட நிலையில் மேலும் ரூ.6 கோடி சிக்கியுள்ளது.
*அசாம் மாநிலத்தின் விளையாட்டு தூதுவராக ஹிமா தாஸ் நியமனம்*
டிஸ்பூர்: அசாம் மாநிலத்தின் விளையாட்டு தூதுவராக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனுவால் தெரிவித்துள்ளார். ஃபின்லாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றவர் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
*சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய எந்த அடிப்படையில் தடை விதிக்கிறீர்கள்: தலைமை நீதிபதி*
புதுடெல்லி: சபரிமலை கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, 'எந்த அடிப்படையில் நீங்கள் (கோவில் நிர்வாகிகள்) பெண்களை கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கிறீர்கள், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நீங்கள் பொதுமக்களுக்காக நடை திறந்தால், யார்வேண்டுமானாலும் செல்லலாம். ஆண்களை போலவே பெண்களுக்கும் பிரார்த்தனை செய்ய சமஉரிமை உண்டு. எனவே பெண்களுக்கு என்று பிரார்த்தனை செய்ய தனியாக சட்டம் இயற்ற முடியாது' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
*இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி: பிசிசிஐ அறிவிப்பு*
மும்மை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட வீரர்கள் பெயரை பிசிசிஐ அறிவித்துள்ளது. தவான், ராகுல், புஜாரா, விஜய், ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, பாண்ட்யா ஆகியோர் அணியில் இ்டம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் அணியில் இடமபெறவில்லை; ரிஷப் பாண்ட், குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக