விண்வெளியில் நாம் வியக்கும் அளவிற்கு நடக்கும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!
விமானப் பயணம் என்பது எல்லாரும் சுவாரஸ்யமானதாக இருக்கும். விமானப் பயணத்திற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி இனி நம் வருங்கால சந்ததியினர் எல்லாம் சர்வசாதரணமாக சென்று வரப்போகிறார்கள்.
இதன் துவக்கப்புள்ளியாக தொடர்ந்து விண்வெளி ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கிறன. நம் கற்பனைக்கும் எட்டாத பல்வேறு ஆச்சரியங்களை தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கிறது இந்த இயற்கை. விண்வெளி ஆராய்சிகள் தொடர்வதற்காக ஆராய்சியாளர்கள் சென்று வருவது இப்போது அன்றாட நிகழ்வாகிவிட்ட இந்த நிலையில் விண்வெளியைப் பற்றி நமக்குத் தெரியாத விஷயங்கள், நாமொன்று நினைத்துக் கொண்டிருக்க உண்மையில் அது தானா? என்று சந்தேகமாய் இருக்கிற விஷயங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
பூமியில் இருப்பதை விட விண்வெளியில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருக்குமாம். சுத்தம் செய்யப்பட்ட இடமாக தெரிந்தாலும், அங்கே கண்ணுக்குத் தெரியாத பாக்டீர்யாக்கள் ஏராளமானது இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள் அதோடு அந்த விண்கலத்தில் நான்காயிரத்திற்கும் அதிகமான வகைகள் கொண்ட பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அல்லது விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு ஹோம் சிக் வரும். அதே போல விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கு ஸ்பேஸ் சிக் ஏற்படுமாம். இதனை ஸ்பேஸ் அடாப்சன் சிண்ட்ரோம் என்று அழைக்கிறார்கள். அதாவது புதிதான அந்த சூழ்நிலையை பழகிக் கொள்ள சில தடுமாற்றங்கள் நிகழ்வதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். சில மனதளவிலும் தடுமாற்றங்களை சந்திப்பர். உடல் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அங்கே செரிமானப் பிரச்சனை, குமட்டல்,வாந்தி ஆகியவை ஏற்படும்.
வீரர்களை காரமான உணவுகளை சாப்பிடுமாறு வலியுறுத்துவார்களாம். ஏன் தெரியுமா? இங்கே நமக்கு சளிப்பிடித்தால் அதனை எளிதாக காரி உமிழ்ந்து வெளியேற்றுவதைப் போல அங்கே வெளியேற்ற முடியாது. பெரும்பாலான நேரங்கள் தலைகீழாக மிதக்க வேண்டிய சூழல் இருக்கும். ஒரு வேலை அங்கே சளிப்பிடித்தால் அவை மூச்சுக் குழாயில் சிரமத்தை ஏற்படுத்த வழியுண்டு என்பதால் எச்சரித்து அனுப்பப்படுகிறார்கள்.
இங்கே இருப்பதைப் போன்று தலை முதல் காலுக்கு ரத்த ஓட்டம் ஏற்படுவதில்லை . உடலிலிருந்து மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் இருக்கும். அங்கே நாட்களை கடந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகமெல்லாம் வீக்கத்துடன் காணப்படும். சிலருக்கு இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள அதிக நாட்கள் ஆகும்.
உப்பு கம்மியா இருக்கு என்று சொல்லி தூவிக் கொள்வது, சூப்ல லைட்டா பெப்பர் போட்டா செம்மையா இருக்கும் என்று சேர்ப்பது எல்லாம் அங்கே நடக்காது. எவ்வளவு சிறிய துகள்களாக இருந்தாலும் சரி உப்பை கீழே கொட்டும் போது அவை புவியீர்ப்பு விசை இல்லாததினால் மிதக்க ஆரம்பித்து விடும். இதனால் வீரர்கள் உப்பு,மிளகு போன்றவற்றை தண்ணீர் பதத்தில் கொண்டு சென்று தான் பயன்படுத்துவார்களாம்.
டெட் ஸ்கின் . நமது சருமத்திலிருந்து இறந்த செல்கள் தொடர்ந்து உதிர்ந்து கொண்டேயிருக்கிறது. அவற்றை நாம் யாரும் கண்டுணர்வதில்லை. ஆனால் விண்வெளியில் புவியீர்பு விசை இல்லாததினால் சருமத்தில் திட்டு திட்டாக தோல் பிய்ந்து வரும். ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்று பயம் கொள்ளத் தேவையில்லை.அது நம் சருமத்தின் இறந்த செல்கள் தான்.
விண்வெளிப்பயணத்தின் ஆரம்ப நாட்களில் ஆராய்ச்சியாளர்கள் அங்கே போய் என்ன சாப்பிடுவார்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பது குறித்த சரியான திட்டமிடல் எதுவும் இருந்திருக்கவில்லை. உப்பு துகள் கூட பறக்கும் இடத்தில் எப்படி எடுத்து சாப்பிடுவார்கள். வகை வகையான உணவெல்லாம் கிடைக்காது. சாப்பிடும் உணவை ட்யூபில் நிரப்பி அவற்றை ட்யூப் வழியாக எடுத்துக் கொள்வார்களாம்
விண்வெளி வாடை எப்படியிருக்கும் என்று தெரியுமா? விண்வெளியில் நடந்த ஒரு வீரர் பூமிக்கு திரும்பி தன்னுடைய ஹெல்மெட்டை கழற்றியிருக்கிறார். அப்போது வெல்டிங் செய்யும் போது ஒரு வாடை வருமே அந்த வாடை வந்திருக்கிறது. சல்ஃபர் கேஸ் வாடை போல இருந்தது என்றும் சொல்கிறார்கள்.
விண்வெளியில் முழுக்க இப்படித்தான் மோசமாக நாற்றமெடுக்குமாம். இதனை போக்க அங்கிருக்கும் வீரர்கள் குறைந்தது இரண்டு மணி நேர உடற்பயிற்சி செய்ய வேண்டியதாய் இருக்கிறது. உடற்பயிற்சி என்றதும் இங்கு ஜிம்மில் பயிற்சி செய்வது போல அல்ல. இது தவிர நாற்றத்தின் தாக்கத்தை போக்கக்கூடிய மெசின்களும் பொருத்தப்பட்டிருக்கும்.
கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததும் எழுந்து சென்று விட முடியாது. வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக அடல்ட் டயாப்பர் அணிந்து கொள்வார்கள். ஆலன் செப்பார்ட் என்ற விண்வெளி வீரர் உடையிலேயே சிறுநீர் கழித்துக் கொண்ட முதல் வீரராம்
சிறுநீர் சிறுநீர்ப்பையில் நிறைந்து, நமக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்து நமக்கு நினைவூட்டுவது போல எல்லாம் விண்வெளியில் நடக்காது. அதனை கட்டுப்படுத்தும் ஆற்றலும் விண்வெளியில் இருக்காது. நம்மையும் அறியாமல் தானாக சிறுநீர் கழிந்திடும்.
பூமியிலேயே தண்ணி பஞ்சம் வந்து விட்ட போது விண்வெளியிலும் அதன் தாக்கம் இருக்கிறது. அங்கே வீரர்கள் தண்ணீருக்கு எங்கே செல்வார்கள்? அதனால் அவர்களின் சிறுநீரை சுத்திகரித்து தண்ணீராக வழங்கப்படுகிற மெஷினை 250 மில்லியன் டாலர் செலவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உடல் ரீதியாக ஏற்படுகிற மாற்றங்கள், போதுமான அளவு தண்ணீர் குடிக்க முடியாதது, கழிவுகள் சரியான வெளியேற்ற முடியாதது ஆகியவற்றால் வீரர்களுக்கு கேஸ் பிரச்சனை ஏற்படும். இங்கே இயற்கையாக கேஸை வெளியேற்றவது போல எல்லாம் அங்கே வெளியேற்ற முடியாது. விண்வெளியில் இருக்கும் போது வலுக்கட்டாயமாக கேஸை வெளியேற்ற நினைத்தால் அவை மேலே ஏறி வாந்தியை அல்லது தீவிரமான ஒமட்டலைத் தான் ஏற்படுத்தும்.
விண்வெளி வீரர்கள் எல்லாருக்கும் பர்ஃப் பேக் என்ற பை ஒன்று வழங்கப்படும். அந்த பயணம் முடியும் வரை அவர்களுக்கு எச்சில் துப்ப வேண்டும் என்றாலோ வாந்தி எடுக்க நேர்ந்தாலோ அந்த பையிலேயே தான் எடுக்க வேண்டும். பூமிக்கு திரும்பும் வரையில் அதனை முறையாக பாதுகாக்க வேண்டும்.
வாந்திக்கே இவ்வளவு நடைமுறை என்றால் மலம் கழிக்க என்ன செய்வார்கள்? என்ற சந்தேகம் எல்லாருக்கும் ஏற்படும். இதற்கும் கையில் ஒரு பை கொடுத்தனுப்புவார்களோ என்று யோசிக்க வேண்டாம். விண்களத்தில் வீரர்களுக்காக கழிவரை இருக்கிறது. இதில் உட்கார அதுவும் சரியான பொசிசனில் உட்கார வீரர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்டிப்பாக வீரர்கள் அந்த பொசிசனில் உட்கார்ந்து தான் மலம் கழிக்க வேண்டும். அதன் பிறகு அங்கே பொருத்தப்பட்டிருக்கும் ஓட்டையில் மலம் சரியாக விழுந்துவிட்டதா என்பதையும் உறுதி செய்வது அவசியம்.
விண்வெளி உடை அணிந்திருக்கும் போது வாயை மூடி தும்முவது என்பது சாத்தியமில்லை. அப்படியே தும்மினால் எச்சில் தலையில் மாட்டப்பட்டிருக்கும் ஹெல்மெட்டில் உள்ள முன்பக்கம் கண்ணாடியில் தெரித்து இடைஞ்சலை ஏற்படுத்தும். இதனால் தும்மல் வந்தாலும் சிக்கல் தான்.
விண்வெளிக்கு செல்லும் வீரர் அங்கேயே இறந்துவிட்டால்? பல காலங்களாக இதற்கு ஒரு முடிவு இல்லாமலே இருந்திருக்கிறது. அவர்கள் சாதரணமாக நிற்பதே மிகவும் சிரமமான ஒரு சூழலில் தங்களுடன் உயிரற்ற ஒரு பிணத்தை எப்படி வைத்துக் கொள்வார்கள், பூமிக்கு வரும் வரையில் எப்படி பாதுகாக்க முடியும். தொடர்ந்து நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் நாசா பாடி பேக் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ரத்த ஓட்டமே மாற்றம் ஏற்படுவதினால் தசை இறுக்கத்திலிருந்து விடுபட தினமும் இரண்டுமணிநேரம் உடற்பயிற்சி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதன் போது அதிகமான வியர்வை சுரக்கும். வியர்வை சுரப்பது என்பது இங்கே பூமியில் ஏற்படுவது போல தண்ணீயாக சொட்டாது. சருமத்திலேயே குமிழிகளாக நிற்கும். இதனை ஸ்வட் பால்ஸ் என்று அழைக்கிறார்கள். நீங்கள் துடைத்துக் கொள்ளும் வரை அப்படியே இருக்கும். புவியீர்ப்பு விசை இல்லாததினால் வியர்வை கீழே விழாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக