வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் அதிரடி விலை குறைப்பு!!!
சரக்கு மற்றும் சேவை வரி யில் உச்சபட்ச வரிவிகிதம் 28 சதவீ தமாகும். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பில் இருந்தன. கடந்த ஓர் ஆண்டில் 191 பொருட்கள் உச்சபட்ச வரி வரம்பில் இருந்து குறைக்கப்பட்டிருக்கின்றன.வரும் 27-ம் தேதி முதல் 35 பொருட்கள் மட்டுமே உச்சபட்ச வரி பிரிவில் இருக்கும். சிமென்ட், ஆட்டோமொபைல் உதிரி பாகங் கள், டயர், மோட்டார் வாகனங் கள், ஏசி, டிஜிட்டல் கேமரா, காற்றடைக்கப்பட்ட குளிர்பானங் கள், புகையிலை, சிகரெட் மற்றும் பான் மசாலா உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரம்பில் இருக்கும்.ஜூலை 21-ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 15 பொருட்களை உச்சபட்ச வரி வரம்பில் இருந்து ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்தது. வாஷிங் மெஷின், 68 சென்டிமீட்டர் வரை யிலான டிவி, குளிர்சாதன பெட்டி, பெயின்ட் உள்ளிட்ட பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து நீக்கப்பட்டன. தற்போது 35 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரியில் உள்ளன.
இதனால் ரூ.6,000 கோடி அள வுக்கு வரி இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வரி விகி தம் குறைக்கப்பட்டிருப்பதால், நுகர்வு உயர்ந்து இழப்பு சரியாகும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.'சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் வரிவிதிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.மேலும், புனித ஸ்தலங்களுக்காக செய்யப்படும் மார்பில், மரங்கள், கற்கள், எந்தவிதமான விலைஉயர்ந்த கற்கள் இல்லாமல் செய்யப்படும் ராக்கி கயிறு, வீடு கூட்டும் துடைப்பத்துக்கான மூலப்பொருட்கள், முக்கியமான நினைவு நாளில் ரிசர்வ் வங்கி வெளியிடும் காசுகள், இலையால் உருவாக்கப்படும் தட்டுகள், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.லித்தியம் அயன் பேட்டரி, வாக்கூம் கிளீனர், உணவு கலக்கும் மிக்ஸர், கிரைண்டர், முகச்சவரம் செய்யும் சேவிங் மெஷின், ஹேர் கிளிப்பர், வாட்டர் ஹீட்டர், அயர்ன் பாக்ஸ், வாட்டர் கூலர், ஐஸ் கிரீம் ப்ரீசர், டிரையர், அழகுசாதனப் பொருட்கள், பெர்பியூம்கள், சென்ட், பெயின்ட், வார்னிஷ் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் படிக்கப்படும் இ-புக் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் செருப்புகளுக்கு ரூ.500 முதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.1000 முதல் 5 சதவீதம் வரி விதிக்கப்படும். டிவிகளில் 68 செ.மீ வரை இருப்பவற்றுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிகுறைப்பு அனைத்தும் இம்மாதம் 27-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக