வெள்ளத்தில் மூழ்கிய ஒகேனக்கல்! பரிசல் இயக்க தடை!!
வெள்ளத்தில் மூழ்கிய ஒகேனக்கல்! பரிசல் இயக்க தடை!!
ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளப்பெருக்கை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
அந்த தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன்காரணமாக ஒகேனக்கல் அருவியில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உருவாகியிருப்பது போல் உள்ளது. இந்த கண்கொள்ளா காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் சுற்றுவட்டார கிராம மக்களும் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகிறார்கள்.
2013ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தால் ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்க 5வது நாளாக தடைவிக்கப்பட்டது.
மேலும் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் ஒகேனக்கல் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக