வெள்ளி, 13 ஜூலை, 2018

அதிர்ச்சி செய்தி! 8 வழிச்சாலையில் திடீர் பல்டி? அதிரடி மாற்றம்.

அதிர்ச்சி செய்தி! 8 வழிச்சாலையில் திடீர் பல்டி? அதிரடி மாற்றம்..




சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க சென்ன உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தடை கோரி வழக்கறிஞர் சுரேஷ்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டிய மனுதாரர், இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாக கருத்து தெரிவித்தார்.

மேலும் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் தவறான தகவல்களை அளித்து வருவதாகவும், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மிரட்டப்படுவதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டினார். இதனைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக பல பொதுநல வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தையும் வரும் 12ம் தேதி விசாரிக்கவுள்ளதாகவும், இதனால் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையக்கப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து வரும் 12-ம் தேதிக்குள் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக