புதன், 25 ஜூலை, 2018

தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்... கட்சி நிகழ்ச்சிகள் ரத்து?

தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்... கட்சி நிகழ்ச்சிகள் ரத்து?

தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
கருணாநிதி உடல் நலக்குறைவால் கடந்த 2016 டிசம்பர் மாதம் 15ம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  கடந்த 18ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கருணாநிதியால் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாது’ எனத் தெரிவித்துள்ளனர். 
அவரது உடல் நலம் சீராக இல்லாததால் மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது இதயம் மட்டுமே துடிக்கிறது’ எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படாமல் கோபலாபுரம் இல்லத்திலேயே கருணாநிதி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திமுகவினரின் பயணங்களும், கட்சி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
ஆனால், இதுகுறித்து தி.மு.க., தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தி.மு.க நிர்வாகிகளும் அமைதிகாத்து வருவது சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இதனால், தி.மு.க தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
என்று தவறாக  வதந்திகள் பரப்ப படுகிறது யாரும்  நம்ப வேண்டாம் . .கருணாநிதி நலமாக உள்ளார் என்று  மு.க. ஸ்டாலின்  பேட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக