செவ்வாய், 3 ஜூலை, 2018

ரஜினியின் அரசியல் வியூகம்? ராஜ்தாக்கரேயை சந்தித்த லதா ரஜினிகாந்த்

ரஜினியின் அரசியல் வியூகம்? ராஜ்தாக்கரேயை சந்தித்த லதா ரஜினிகாந்த்

மும்பை:
ராட்டிய நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ரஜினிகாந்தின் அரசியல் வியூகமாக இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில், பால்தாக்கரேயின்  சிவசேனா கட்சிக்கு எதிராக களமிறங்கியவர் ராஜ்தாக்கரே.  நவநிர் மாண் சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், சமீப காலமாக பாஜக ஆட்சி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து களமிறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது கூறிக்கொண்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் மனைவி ராஜ்தாக்கரேவை சந்தித்து பேசி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மும்பையில் உள்ள ராஜ்தாக்கரே வீட்டிற்கு சென்ற லதா,  அங்கு ராஜ்தாக்கரேவுடன் தனியாக ஆலோசனை நடத்தியதாகவும், பின்னர்   ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளா தாக்கரே வையும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சினிமா, அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் மும்பை தாதா ஒருவரை கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த படம் படுதோல்வியை அடைந்தது.  இந்த நிலையில், லதா ராஜ்தாக்கரேயை சந்தித்து பேசியிருப்பது சினிமா குறித்தா அல்லது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கவா என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகிறது.
பாஜ ஆதரவாளர் ரஜினி என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில், சமீப காலமபக பாஜவுக்கு எதிராக களமிறங்கி உள்ள ராஜ்தாக்கரேயை லதா சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக