*வாட்ஸ்ஆப் புது வசதியை செயல்படுத்துவது எப்படி!?*
வாட்ஸ் அப் குரூப்பில் தேவையில்லாத பதிவுகளை தடுக்க புது வசதி!
வதந்தி, போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஏதுவாக, வாட்ஸ் அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களின் இன்றியமையாத செயலியாகவும், உலகின் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ் அப் திகழ்ந்து வருகிறது.
இதன் மூலம், தனிநபர் அல்லது குழுக்களில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் எழுத்தாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, படம், பிடிஎப் போன்ற ஃபைல்கள், தொடர்புகள், என அனைத்தையும் அனுப்பலாம், பெறலாம். வீடியோ அழைப்பு செய்தும் பேசலாம்.இத்தனை வசதி இருந்தும், வாட்ஸ் அப் குரூப்களால் அவதிப்படுவோர் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் ஏதேனும் குரூப்களில் சேர்ந்துவிட்டு, தற்போது அதில் வரும் தேவையில்லாத தகவல்களால் அவதிப்படுவோரும் உள்ளனர். சிலர் தொல்லை தாங்க முடியாமல் குரூப்பை விட்டே வெளியேறிவிடுகின்றனர்.இது ஒரு புறம் இருக்க, குரூப்பில் உள்ளவர்கள், கடமைக்கு ஏதேனும் ஃபார்வேர்ட் மெசேஜ்களை தாங்கள் இருக்கும் குரூப்புகளுக்கெல்லாம் அனுப்பி விடுவர். சில வேளை சண்டைகளும் நடக்கும். இதனால், அட்மின்களுக்கு தலைவலியாக இருக்கும். கண்டித்தாலும், அவர்கள் பதிவிடுவதை அட்மினால் தடுக்க முடியாத நிலை தான். தற்போது இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு வழங்கியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். வாட்ஸ் அப்பின் புதிய வசதிகள்...
வாட்ஸ் அப் குரூப்பில் யாரெல்லாம் தகவல்களை பகிரலாம் என்பதை கட்டுப்படுத்த முடியும்
குரூப் படம், பெயர் உள்ளிட்டவற்றை அட்மின் மட்டுமே மாற்றக்கூடிய வசதி
ஃபார்வேர்ட் செய்யப்பட்ட தகவல்களை அடையாளம் காண முடியும்.
குரூப்பில் இருந்து வெளியேறியவரை மீண்டும் வலிய குரூப்பில் இணைக்க முடியாது
குரூப்பை உருவாக்கியவரை மற்ற அட்மின்களால் நீக்க முடியாது.
இதனால், குரூப் தொடங்கப்பட்டதற்கான நோக்கம் பிறழாமல், தகவல்கள் பகிரப்படுவதோடு, தேவையில்லாத தகவல்களை கட்டுப்படுத்தலாம். வதந்தி, போலி செய்திகள் பரவுவதையும் தடுக்க முடியும்.எப்படி பெறுவது?
வாட்ஸ் அப் செயலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொண்டால் மட்டுமே, மேற்காணும் வசதிகள் கிடைக்கப்பெறும்.அட்மினாக இருக்கும் குரூப்பில் வலது பக்கம் இருக்கும் செட்டிங் ஐகானை (மூன்று புள்ளி) கிளிக் செய்து, Group Info என்பதை தேர்வு செய்யவும். பின்னர் Group Settings ஐ கிளிக் செய்தால், Edit Group Info மற்றும் Send Messages என்று இருக்கும்.அதனுள் சென்று யாரெல்லாம் குரூப் தகவல்களை திருத்தலாம், யாரெல்லாம் குரூப்பில் தகவல்களை பதிவு செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக