செவ்வாய், 3 ஜூலை, 2018

அதிர்ச்சியில் அமித் ஷா, மோடி! பாஜகவை வீழ்த்த அதிரடி வீயூகம் கொடுத்த கூட்டணி கட்சி!



அதிர்ச்சியில் அமித் ஷா, மோடி! பாஜகவை வீழ்த்த அதிரடி வீயூகம் கொடுத்த கூட்டணி கட்சி!

பாரதிய ஜனதா கட்சியின் எக்காலத்திலும் இணை பிரியாத கூட்டணி கட்சியாக இருந்தது சிவசேனா கட்சி. ஆனால் இந்த கட்சிகளிடையே கடந்த சில வருடங்களாக போட்டி போட்டு சண்டையிட்டு வருகின்றனர். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது, அதில் பாஜகவை வீழ்த்த வீயூகங்கள் வகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. 
2019-ம் ஆண்டு நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் குறிப்பாக மாநிலக் கட்சிகள் கடந்த கால  தவறுகளை சரி செய்யும் விதமாக ஒன்றாக இணைய வேண்டும் என கூறியுள்ளது. 
ஆனால் எதிர்க்கட்சிகள் முன் தற்போது இருக்கும் ஒரே சிக்கல் ராகுல் காந்தியை தலைவராக ஏற்பதா அல்லது இல்லையா என்பது மட்டுமே. அதே சமயத்தில் பிரதமர் பதவிக்கு பல மாநில கட்சிகள் தரப்பில் ஏராளமான தலைவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இதுவும் ஒரு பிரச்சனையாக உள்ளது. 
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாஜகவின் தொடர் வெற்றி காரணம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருப்பது மட்டுமே. இதுவே பாஜ கட்சிக்கு மிகப்பெரிய வலிமையையும், நம்பிக்கையையும், எதையும் சாதிக்கும் தன்மையையும் அளிக்கிறது. அதேபோல எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, வெற்றி பெற்றிவிடுகிறது. 
இருப்பினும் தற்போது மக்களிடையே ஒருவிதமான கோபம் பாஜக மீது நிலவுகிறது. அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவை விட்டு பிரிந்துவிட்டது. இப்போது பாஜக தோல்வி உறுதியாகும் வேளையில் 2019-ம் ஆண்டு தேர்தலில் மாநில  கட்சிகளின் துணையுடன் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி சாத்தியம்.

குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எப்படி அதிர்ச்சி கொடுத்து, பயங்காட்டியது என்பதை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. ஆதலால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தி தலைமையை ஏற்பதா அல்லது இல்லையா என்பது இப்போதுள்ள சிக்கலாகும்.
ஜனநாயகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகள் அனைவரும் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ராகுல் காந்தியின் தலைமையில் கண்டிப்பாக, மிக விரைவில் இணைய வேண்டும். அதிகாரப் பசிக்காக, பதவி ஆசைக்காக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாமல் வைத்திருப்பதே பாஜகவின் வேலையாக உள்ளது அதனை அனைவரும் உடைத்துவிட்டு வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
மேலும் தேர், குதிரைகள் தயாராக இருக்கின்றன, சக்கரங்கள்தான் வேண்டும். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது சாத்தியமில்லை என்று சிவசேனா கட்சி கருத்து தெரிவித்து பாஜகவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக