வியாழன், 5 ஜூலை, 2018

ஒரே ஒரு தீக்குச்சி! ஒரே ஒரு பிளேடு! ஏ.டி.எம்மில் இருந்து லட்சம் லட்சமாக......

ஒரே ஒரு தீக்குச்சி! ஒரே ஒரு பிளேடு! ஏ.டி.எம்மில் இருந்து லட்சம் லட்சமாக......


சென்னையில் இரண்டு ஏ.டி.எம். மெஷின் உள்ள மையங்களில் தீக்குச்சி மற்றும் பிளேடு துண்டுகளைப் பயன்படுத்தி, பல லட்சம் ரூபாய்களை கொள்ளையடித்த பலே கில்லாடிகளான பீகார் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் அண்ணாசாலை, அண்ணா சதுக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி , சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது, பணம் எடுத்தாக இரண்டு செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும், மேலும் தங்கள் கணக்கில் இருந்த பணம் திடீரென மாயமாவதாகவும் ஏ.டி.எம். ஹேங் ஆகி நின்றுவிட்டதால், பணம் எடுக்காத நிலையிலும், பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததாகவும், வாடிக்கையாளர்கள் பலர், தங்களது வங்கிகளில் தொடர்ந்து புகார் அளித்தனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகளுக்கு, வடமாநில இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் வந்தது.

காவல்துறையினரும் அந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் எதுவும் புரியாத நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தபோதுதான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் குமார், முன்னா குமார் ஆகியோர் மீண்டும், கடற்கரைச் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவரின் பணத்தை தங்களது வழக்கமான பாணியில் திருடிவிட்டு, வெளியேறியதைப் பார்த்தனர். சி.சி.டி.வி. காட்சியில் பார்த்த உருவம் என்பதால், இருவரையும் வளைத்துப் பிடித்த காவல்துறையினர், அண்ணா சதுக்கம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக