செவ்வாய், 3 ஜூலை, 2018

பள்ளி மாணவர்களின் நலம் கருதி வருகிறதே புதிய அசத்தலான திட்டம் .,மகிழ்ச்சியில் மாணவர்கள் .!

பள்ளி மாணவர்களின் நலம் கருதி வருகிறதே புதிய அசத்தலான திட்டம் .,மகிழ்ச்சியில் மாணவர்கள் .!



பள்ளி மாணவர்களின் நலம் கருதி வருகிறதே புதிய அசத்தலான திட்டம் .,மகிழ்ச்சியில் மாணவர்கள் .!

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை பால் வழங்க ராஜஸ்தானில் அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று ராஜஸ்தானின் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தேமி கலான் பகுதியில் அன்னபூர்ணா பால் விநியோக திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.  
இத்திட்டத்தின்படி, அரசு பள்ளி கூடங்கள் மற்றும் மதரசாக்களில் படித்து வரும் 62 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வாரம் 3 முறை பால் வழங்கவேண்டும் என திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் ரூ.218 கோடி பட்ஜெட்டில் அமல்படுத்தப்பட உள்ளது.  இதற்காக 5 லட்சம் லிட்டர் பால் பள்ளி கூடங்களுக்கு வழங்கப்படும்.  காலை இறை வணக்கத்திற்கு பின்  மாணவ மாணவியருக்கு 200 மி.லிட்டர் பால் வழங்கப்பட உள்ளது.
         
இதுபற்றி முதல் மந்திரி வசுந்தரா கூறும்பொழுது, நானும் ஒரு தாய்தான்.  குழந்தைகள் நன்கு உண்டு வளர்ந்து, ஆரோக்கியமுடன் இருப்பதை பார்ப்பதில்  உள்ள மகிழ்ச்சி பற்றிய உணர்வு எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
இத்திட்டம் சரியான வகையில்  அமல்படுத்தப்படுகிறது என்பதை அதிகாரிகள் அடிக்கடி உறுதி செய்ய வேண்டும் என ராஜஸ்தானின் முதல் மந்திரி வசுந்தரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக