சாதனை! காற்றாலை மின்சாரம் கொள்முதல்;
தமிழகத்தில் முதல் முறையாக, காற்றாலைகளில் இருந்து, 10.41 கோடி யூனிட் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்துள்ளது.
தமிழகத்தில், 8,152 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. ஆண்டுதோறும், மே முதல் செப்., வரை, காற்றாலை சீசன்.
அப்போது, காற்றாலைகளில் இருந்து, அதிக மின்சாரம் கிடைக்கும்.
அதன்படி, நடப்பு சீசனில், காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, ஒன்பது கோடி யூனிட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்து வருகிறது. கடந்த, 2017 ஆக., 4ல், காற்றாலைகளில் இருந்து, 10.26 கோடி யூனிட் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்தது.
இதுவே, இதுவரை, மின் வாரியம் வாங்கிய, அதிக அளவாகும். இந்நிலையில், இம் மாதம், 18ம் தேதி, 10.41 கோடி யூனிட் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் வாரியம், புதிய சாதனை படைத்துள்ளது.
இது குறித்து,காற்றாலை உற்பத்தியாளர்கள் கூறிய தாவது: ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், மொத்தமின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை மின்சாரத்தின் பங்கு, 40 சதவீதத்திற்கு மேல் உள்ளது.ஆனால், தமிழகத்தில், மின் வாரியம், சராசரியாக, 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்து கிறது. காற்றாலைகளில் இருந்து, தற்போது கிடைக்கும், 13 கோடி யூனிட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை முழுவதுமாக பயன்படுத்த, மின் வாரியம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, காற்றாலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக