செவ்வாய், 3 ஜூலை, 2018

செல்போனில் பேசியது நிர்மலாதேவி குரல்தான் தடயவியல் சோதனையில் உறுதி

செல்போனில் பேசியது நிர்மலாதேவி குரல்தான் தடயவியல் சோதனையில் உறுதி


சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் செல்போனில் பேசியது நிர்மலா தேவி குரல்தான் என்று தடவியல் சோதனையில் உறுதியாகி உள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக ஏற்பட்ட புகாரை அடுத்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த, ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி அளித்தது.
இதையடுத்து, நிர்மலா தேவிக்கு சென்னை தடயவியல் ஆய்வகத்தில் கடந்த 28-ம் தேதி குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தொலைபேசி ஆடியோவில் பதிவான குரல் நிர்மலா தேவி உடையதுதான் என உறுதியாகியுள்ளது. அது நிர்மலா தேவியின் குரல் தான் என தடயவியல் துறை உறுதி செய்துள்ளது. தடயவியல்துறை உறுதி செய்ததை தொடர்ந்து நிர்மலா தேவியும் செல்போனில் இருப்பது தன்னுடைய குரல் தான் என ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தடயவியல்துறை அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸிடம் ஒப்படைப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக