செவ்வாய், 31 அக்டோபர், 2017

தஞ்சையில் ராஜ ராஜ சோழன் சதய விழா நிறைவு!


தஞ்சையில் ராஜ ராஜ சோழன் சதய விழா நிறைவு!


*31/10/17- செவ்வாய்க்கிழமை!*

*தஞ்சை  பெரிய கோயிலில்  மாமன்னர் ராஜராஜசோழன் 1032 சதய விழா நேற்று முன்தினம் துவங்கியது.*

*விழாவின் இரண்டாம் நாளான நேற்று 30/10/17- ல் திருவேற்காடு  கருமாரி கோயில் பட்டர் பெரியகோயில் பணியாளர்களுக்கு புத்தாடை  வழங்கினார்.*

*இதைதொடர்ந்து பெரிய  கோயிலிலிருந்து திருமுறை வீதியுலா துவங்கியது.*

*பின்னர், ராஜ ராஜன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.*

*யானை மீது திருமுறைகளை வைத்து  ராஜவீதிகளில் திருமுறை வீதியுலா நடத்தினர்.*

*மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடந்தது. இதை தொடர்ந்து விழா நிறைவு பெற்றது.*


#Hindu Festivals 2018


#Hindu Festivals  2018

Sun 14 Jan – Pongal
Wed 31 Jan – Thaipusam
Tue 13 Feb – Maha Sivarathri
Thu 1 Mar – Maasi Maagam
Sun 18 Mar – Ugadhi
Sun 25 Mar – Sri Rama Navami
Sat 31 Mar – Panguni Uthiram
Sat 14 Apr - Tamil New Year
Sun 15 Apr - Vishu
Mon 28 Apr – Chitra Pournami
Mon 28 May – Vaikasi Visakam
Tue 17 Jul – Aadi begins
Fri 3 Aug – Aadi Perukku
Thu 16 Aug – Aadi ends
Fri 24 Aug – Onam
Fri 24 Aug – Varalakshmi Virudham
Sat 25 Aug – Aavani Avittam
Mon 3 Sep - Sri Krishna Jayanti
Thu 13 Sep - Vinayakar Chaturthi
Mon 17 Sep – Puratasi begins
Wed 10 Oct – Navarathri begins
Wed 17 Oct – Puratasi ends
Thu 18 Oct – Saraswathy Poojai
Wed 7 Nov – Deepavali
Tue 13 Nov – Kandha Sashti
Fri 23 Nov – Thirukarthigai
Sun 16 Dec – Margazhi begins
Wed19 Dec - Vaikunda Ekadesi

திங்கள், 30 அக்டோபர், 2017

TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு...



TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு....

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி
தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது.

இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளதுதடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங் களுக்கு, 2016ல் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்ற, 66 பேருக்கு, அக்., 25ல் நேர்காணல் தேர்வு நடக்கும்கைத்தறி துறை உதவி இயக்குனர் பணிக்கு, 14இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில், தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 12 பேருக்கு, வரும், 26ம் தேதி நேர்காணல் நடக்கும்சிறை அதிகாரி பணியில், ஆறு இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது.

இதில், தேர்ச்சி பெற்ற, 18 பேருக்கு, 27ம் தேதி நேர்காணல் நடக்கும்புவியியலாளர், உதவி புவியியலாளர் பணியில், 53 இடங்களுக்கு, 2016 ஜூனில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 141 பேருக்கு, அடுத்த மாதம், 6,7ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..

பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு



பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு

சென்னை நகரில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27237107, 044-27237207; வாட்ஸ்அப் - 9445071077, 9445051077 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077, 044-27664177, 044-2766646; என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

விடிய விடிய கொட்டும் கனமழை; 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; தத்தளிக்கும் சென்னை..



விடிய விடிய கொட்டும் கனமழை; 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; தத்தளிக்கும் சென்னை..

*கனமழை காரணமாக 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*

*இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*

*இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,விழுப்புரம், நாகை, புதுவை, கடலூர், காரைக்கால், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடபட்டுள்ளது*

*#விடிய விடிய கொட்டும் கனமழை*

*தமிழகத்தில் நேற்று தீவிரமடைந்த பருவமழை இடைவிடாது விடிய விடிய கொட்டி வருகிறது.*

*சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.*

*திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல் கடலூர், கும்பகோணம், திருவிடைமருதூரிலும் விடிய விடிய பலத்த மழை கொட்டி வருகிறது.*

*#சென்னை தத்தளிப்பு*

*சென்னையில் அடையாறு, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, பல்லவாரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகின்றன.*

*இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் குளங்களாக மாறியுள்ளன.*

*சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிக்கி வாகனங்கள், பழுதாகி நிற்பதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.*

*மேலும் தாழ்வான இடங்களில் உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.*

*குடியுருப்புகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தவித்து வருகின்றனர்.*

*#பாலத்தை சூழ்ந்த வெள்ளம்*

*கனமழை காரணமாக சென்னை குரோம்பேட்டை பள்ளிகரணை பாலத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.*

*பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.*

*சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள பாலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது*

சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப் பற்றி சொல்ல மாட்டார்கள்.



சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப் பற்றி சொல்ல மாட்டார்கள்.

#சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.

அப்படித்தான் அதனை சொல்லமுடியும்.

 எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை

கிட்டதட்ட ஒரு #கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.

#சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.

அரசுக்கு எதிரான கருத்துக்கள் பேசினால் அவ்வளவுதான், மக்கள் உரிமை என்பதெல்லாம் அங்கு .... கு சமானம்

பத்திரிகை முதல் எல்லாம் அரசு கட்டுப்பாடு

#அமெரிக்கா வில் வரி 30%, அது யாராயினும் கட்டித்தான் ஆகவேண்டும்,

 மக்களை வேறுவகையான வாழ்க்கை முறையில் திருப்பிவிட்டு ஒரு மாதிரியான அரசியல் செய்யும் நாடு அது.

அம்மக்களின் மனநிலையே வேறு, இந்திய மனநிலைக்கும் அவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்திய அமெரிக்க ஒப்பீடு எல்லாம் அர்த்தம் இல்லாதது.

அவர்கள் சாதி,மதம், இனம், திரைப்படம் பார்த்தெல்லாம் வாக்களிப்பதில்லை. இங்கு அப்படி வாக்களித்துவிட்டு அமெரிக்காவினை பார் என சொல்ல தகுதியே இல்லை.

#அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம். எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. தொலைத்துகட்டி விடுவார்கள்

ஆக உலகெல்லாம் வளமாக இருப்பது போலவும், #இந்தியா மட்டும் கட்டுபாடும் வாழ சிரமமும் உள்ள நாடாக சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உண்மையில் உலகில் மிக சுதந்திரமான நாடு ஒன்று உண்டென்றால் அது #இந்தியா மட்டுமே.

இங்கு அரசு முதல் ஆண்டி வரை நம்மால் கிழிக்க முடிகின்றது, எந்த பிரச்சினையானாலும் யாரும் கருத்து சொல்ல முடிகின்றது, போர்கொடி தூக்க முடிகின்றது

ஜிஎஸ்டிக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனெல்லாம் டிவியில் அதுபற்றி பேசமுடிகின்றது.

இன்னும் என்னென்ன அழிச்சாட்டியம் எல்லாம் செய்ய முடிகின்றது

இதில் இடஒதுக்கீடு வேறு.

சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா எங்காவது இட ஒதுக்கீடு கேள்விபட்டிருக்கின்றோமா? இல்லை

 மாறாக உலகெல்லாம் இருந்து அறிவு ஜீவிகளை வாங்கி படிக்க வைத்து வேலை கொடுக்கின்றார்கள்.

சிங்கப்பூர் அரசை முகநூலில் விமர்சித்தவன் கணக்கை முடக்கி அவனையே முடக்க ஒருமுறை தீவிரமாய் அலைந்தது சிங்கப்பூர்

இந்தியாவின் முகநூலும் டிவிட்டரும் எப்படியெல்லாம் அரசை கிழிக்கின்றன என்பது சொல்லியா தெரியவேண்டும்? அவ்வளவு #சுதந்திரம் நமக்கு இருக்கின்றது.

ஒன்று இந்த சுதந்திரத்தினை அனுபவியுங்கள்

அல்லது சிங்கப்பூர் போல, சீனா போல கட்டுபாட்டுக்குள் அடிமைபட்டு வாழ வாருங்கள். அப்பொழுது வசதிகள் பெருகலாம் ஆனால் பேச முடியாது

இரண்டும் பெறுவது என்பது சாத்தியமே இல்லை. அதுவும் இந்தியாவில் அறவே இல்லை..

வாக்களிப்பது இந்திய பாணியில் ஆனால் ஆட்சியினை எதிர்பார்ப்பது அமெரிக்க பாணியில் என்றால் அதன் பெயர் கனவு, பகல் கனவு.

தேர்தலே வேண்டாம் சீனா போல வாழ தயார் என சொல்ல எவனுக்கு இந்நாட்டில் தைரியம் இருக்கின்றது, ஆனால் சீனாவின் வளர்ச்சியினை பார் என்றுமட்டும் வெட்கமே இல்லாமல் சொல்வார்கள்

ஒவ்வொரு நாடும் அதன் மக்களை எப்படி எல்லாம் கண்காணித்து அடக்கி ஒடுக்கி மூச்சுவிட மட்டும் அனுமதிக்கின்றன என பாருங்கள், அப்பொழுது இந்நாட்டின் அருமை தெரியும்.

சொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா?

வாழ்க பாரதம்!
(படித்ததில் பிடித்தது)

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

அளவறிந்து பீர் அருந்தினால் கிடைக்ககூடிய அளப்பரிய ஹெல்த், பெனிஃபிட்டுகள்!


அளவறிந்து பீர் அருந்தினால் கிடைக்ககூடிய அளப்பரிய ஹெல்த், பெனிஃபிட்டுகள்!

*ஹாட் ட்ரிங்ஸ் சாப்பிடாதவர்கள் கூட பீர் எடுத்துக் கொள்வது சகஜம். அந்த அளவுக்கு பீர் இவ்வுலகில் ஆண்களால் அதிகம் விரும்பப்படும் ஆல்கஹால் வகைகளில் ஒன்று.*

சரி... ஆனால் பீர் எடுத்துக் கொண்டால் தொப்பை விழும். உடல் எடை அதிகரிக்கும் என்பது தானே அதைக் குறித்த பொதுவான குற்றச்சாட்டு.

*ஆனால், பீரிலும் கூட எக்கச்சக்கமான ஹெல்த் பெனிஃபிட்டுகள் உண்டு என்கிறார்களே? அது நிஜமா?*

*அப்படியென்ன விதமான ஹெல்த் பெனிஃபிட்டுகளை பீர் அளிக்கக்கூடும் என்று பார்க்கலாமா?!*


பீர் மனிதனின் சிறுநீரகங்களைப் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய ஃபின்லாந்து ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. பீர் மனிதனின் சிறுநீரகங்களை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள உதவுகிறதாம். நீங்கள் அருந்தும் ஒவ்வொரு பாட்டில் பீராலும் நீங்கள் உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றக்கூடிய ஆபத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். 40% சிறுநீரகக் கற்கள் வராமல் தடுத்து சிறுநீரை நீர்க்கச் செய்வதில் பீர் முக்கியப் பங்காற்றுகிறது என்கிறது ஃபின்லாந்து ஆய்வுக் கட்டுரை.
பீர் அதிலும் டார்க் பீர் என்று குறிப்பிடக்கூடிய பீரில் ஒரு கிராம் அளவில் கரையக்கூடிய ஃபைபர் (நார்ச்சத்து) இருப்பதால் குடல் சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்க பீர் உதவுகிறது. ஏனெனில் மனிதக் குடல் பகுதியில் நார்ச்சத்து குறைபாடு இருந்தால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களுக்கான அறிகுறிகள் தோன்றுவது இயற்கை. அம்மாதிரியான குடல் நோய் சம்மந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நார்ச்சத்து பீரோடு ஒப்பிடுகையில் திராட்சை ரசத்தில் கூட அவ்வளவாக இருப்பதில்லை.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பீர் அருந்தலாம். பீரில் இருக்கக்கூடிய 1 கிராம் கரையக்கூடிய ஃபைபர் மூலக்கூறானது மனித உடலில் உள்ள LDL என்று செல்லக்கூடிய கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. பீர் அருந்துவதால் மனித உடலில் உள்ள விட்டமின் 'பி' லெவல் உயர்கிறது என்கிறது ஒரு டச்சு பல்கலைக்கழக ஆய்வு முடிவு. பீரில் இயற்கையாகவே B1, B2, B6, B12 எனப்பலவிதமான B விட்டமின்கள் இருப்பதால் பீர் அருந்துவோருக்கு 30 % விட்டமின் சத்துக்கள் அதிகமாகக் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த அளவீடு திராட்சை ரசம் அருந்துவோருக்குக் கிடைக்கக் கூடிய விட்டமின் B சத்துக்களை விட அதிகமாம். அது மட்டுமல்ல பீர், விட்டமின் B12 சத்தை வாரி வழங்குவதில் கில்லாடியாம்.B12 விட்டமின் என்பது ரத்த சோகைக்கு எதிரான விட்டமின்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல பீர் நமது எலும்புகளை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறதாம். 2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் படி பீரில் இருக்கக் கூடிய அதிகளவிலான சிலிகான் லெவல்களால் அதை அருந்துபவர்களுக்கு எழும்பின் வலிமை கூடுகிறதாம். பீர் அருந்துவதால் தூக்கமின்மை நோயும் குறைகிறதாம். ஏனெனில் பீரில் இருக்கக்கூடிய லாக்டிஃபிளேவின் மற்றும் நிகோடினிக் அமிலம் இரண்டுமே தூக்கத்தை புரமோட் செய்வதில் சமர்த்து

பீர் அருந்துபவர்களுக்கு, பீர் அருந்தாதவர்களை விட 40 முதல் 60 % அளவுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடிய சாத்தியம் குறைவாம். பீர் அருந்துபவர்களுக்கு அடிக்கடி ரத்தக்குழாய்களில் ரத்தம் உறையும் குறைபாடு இருந்தால், அது படிப்படியாக குறைந்து குணமாகும் வாய்ப்புகள் அதிகமாம். பீர் தயாரிப்பில் பயன்படுத்த படும் மூலப்பொருட்களுக்கு ரத்தம் உறைதலை கட்டுப்படுத்தும் குணம் உண்டாம். பீர் அருந்துவதால் மனிதனின் நினைவாற்றல் கூடுமாம். அதுமட்டுமல்ல, பீர் அருந்துபவர்களுக்கு அருந்தாதவர்களைக் காட்டிலும் அல்ஸைமர் நோய் மற்றும் டிமென்சியா உள்ளிட்ட பிரச்சனைகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவை என்கிறது ஒரு ஆய்வறிக்கை. வேலை நிமித்தம் வரக்கூடிய மன அழுத்தம் மற்றும் பதற்றம் இரண்டையுமே குறைக்க ஒரே வழி நளொன்றுக்கு இரண்டு கிளாஸ் பீர் அருந்துவது மட்டுமே என்கிறது மான்ட்ரீல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுக்கட்டுரை முடிவொன்று.

கடுமையான சளித்தொந்தரவு இருந்தால் அதைக் குறைப்பதற்கும் பீர் அருந்துவது நல்லதாம்.
அதுமட்டுமல்ல பீர் அருந்துவதால் தசைப்பிடிப்பு, மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்குமாம். அதற்கு ஒரு பாட்டில் பீரை டபுள் பாய்லர் வைத்து சூடாக்கி அதில் 4 சிறிய டீஸ்பூன் விகிதம் தேன் சேர்த்து தினமும் சிறிதளவு அருந்தி வந்தால் மேற்கண்ட பலன்கள் கிடைக்குமாம்.

பீர் அருந்துவதால் உடல் சருமம் பொழிவுறும். பீரில் உள்ள சில விட்டமின்கள், சரும செல்களைப் புனரமைத்து சரும நிறம் மாறிக் கருத்து போகாமாலிருக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல சருமம் மென்மையாகவும் புஷ்டியாகவும் மாறவும் பீர் உதவுகிறது.

*ஆதலால்,*

*அளவறிந்து பீர் சாப்பிட்டு கிடைக்கக்கூடிய ஹெல்த் பெனிஃபிட்டுகளை கிடைக்க பெறலாம்.*

சனி, 28 அக்டோபர், 2017

பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு 1500, ரூபாய் தொலைதொடர்பு தொகையாக வழங்கப்படுகிறது..



பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு 1500, ரூபாய் தொலைதொடர்பு தொகையாக வழங்கப்படுகிறது..

*350 ரூவாய்க்கே அன்லிமிடெட் டேட்டா கால்ஸ் கிடைக்குறப்ப எதுக்காக பார்லிமென்ட் உருப்பினர்களுக்கு மாசம் 15000 ரூவா டெலிபோன் அலவன்ஸ் குடுக்குது கவர்மென்ட்?*


*அது எல்லாமே*
*மக்களின் வரிப்பணம்தானே?*

*மொத்தம்*
*550 பேர் இருக்காங்க,*

*15000×550= 82,50,000,, ஒரு மாசத்துக்கே 82,50,000 ரூவா மிச்சமாகும்.*

*ஒரு வருசத்துக்கு 9கோடியே90லட்சம் ரூவா மிச்சமாகும்.*

*கவர்மென்ட் காதுல போய்ச் சேரும்வரை share பண்ணுங்களேன்...*

வெள்ளி, 27 அக்டோபர், 2017

அரசு மதுக்கடையில் பெண் விற்பனையாளர் இங்கு அல்ல கேரளாவில்.



அரசு மதுக்கடையில் பெண் விற்பனையாளர் இங்கு அல்ல கேரளாவில்.

*கேரளாவில் முதன்முதலாக பெண் ஒருவர் அரசு மதுக்கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.*

*கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் 350க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.*

*இவற்றில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர்.*

*இவர்கள் எழுத்துத்தேர்வு மூலமே பணியமர்த்தப்படுவர், இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த எழுத்துத்தேர்வில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்ற பெண் உட்பட 8 பேர் தேர்வு பெற்றனர்.*

*ஆனால் பெண்கள் என்பதால் அவர்கள் விற்பனையாளர்களாக நியமிக்கப்படவில்லை.*

*இதை எதிர்த்து ஷைனி உட்பட 8 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.*

*இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.*

_அதில் அரசு பணியில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும், தேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது._

*இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி அப்பகுதியில் உள்ள அரசு மதுபான விற்பனை கூடத்தில் விற்பனையாளராக நேற்று பணியில் சேர்ந்தார்.*

*மற்ற பெண்களுக்கும் உடனடியாக பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*கேரள அரசு மதுபான விற்பனை கழகம் தொடங்கி 33 ஆண்டுகள் ஆகின்றன, இதில் ஷைனி தற்போது முதல் விற்பனையாளராக பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.*

MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 27/10/17 !

MATHI NEWS இன்றைய  பரபரப்பு  செய்திகள் 27/10/17 !

ஜெயலலிதா மரணம் பற்றி தெரிந்தோர் தகவல்களை உறுதிமொழிப் பத்திரவடிவில் நவ.22 க்குள் நேரடியாக தெரிவிக்கலாம் : ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்இருக்கை அமைவது உறுதி இருக்கைக்கு தேவையான ரூ.33கோடியில் அரசு சார்பில் ரூ.9.75கோடி செலுத்தப்பட்டது - தமிழக முதல்வர்.

தவறான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதி டிசம்பர் இறுதிக்குள் அறிவிக்கப்படும் -உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்.

ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை தயாரிக்க அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் 10 நிமிடம் வரை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.

உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்க தடை நீடிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் நவம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகள் சங்க கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு, சட்டப்பேரவை தொடர்பான 3 வழக்குகள் மீதான விசாரணை நவ.2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

நடிகர் கமல் மீது வழக்குப்பதியலாமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல்துறை ஆலோசனை.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், பொருட்களை வழங்கலாம் - மத்திய அரசு சுற்றறிக்கை.

காமராஜர் துறைமுகம் விரிவாக்கம் என்ற பெயரில் 1,000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலை நடக்கிறது - நடிகர் கமல்ஹாசன்.

தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கான தங்க கவசம் மதுரை ஆட்சியரிடம் ஒப்படைப்பு.

ஜெ. கைரேகை குறித்த திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் மருத்துவர் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்.

எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க வாய்ப்பு : நடிகர் கமல்ஹாசன்.

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசால் டெங்கு காய்ச்சல் பலி நாள்தோறும் அதிகரித்து வருகிறது : முக.ஸ்டாலின்.

துணை முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்க கோரிய வழக்கு : விசாரணைக்கு ஏற்பு.

மெர்சல் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் பங்கு குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் - நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கோரிக்கை.

2017 நவம்பர் 20 ஆம் தேதியன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த, மறுமலர்ச்சி திமுக மாநில சுயாட்சி மாநாடு ஒத்தி வைக்கப்படுகின்றது.

சமூக நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் : மனு மீது உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை.

வங்கியில் குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக முதியோர் , விதவை உதவித் தொகையில் அபராதாம் பிடிக்க தடை.

உரிய காலத்தில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் - ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய குடும்ப ஓய்வூதிய தொகை மாற்றியதற்கான அரசாணை வெளியீடு.

கூடன்குளம் இரண்டாவது அணுஉலையில் இன்னும் 15 நாளில் மின்உற்பத்தி தொடங்கும் - வளாக இயக்குநர் ஜின்னா.

ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாதது வேதனை : முக.ஸ்டாலின்.

அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தக் கோரிய வழக்கை நவ.30 க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

சென்னையில் எல் & டி நிறுவனத்தால் ரூ.186.5 கோடியில் கட்டப்பட்ட ரோந்து கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு.

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கு டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கந்து வட்டி கொடுமையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது - தமிழிசை சவுந்தரராஜன்.

கோவை : ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்த 9 வயது சிறுமி சந்தியா டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா(77) காலமானார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விஷாலின் ஆடிட்டர் ஆஜராகி விளக்கம்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியையொட்டி பாதுகாப்பிற்காக 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் கொத்தம்பட்டியை சேர்ந்த தண்டபாணி மகள் மைதிலி 9ம் வகுப்பு மாணவி காய்ச்சலுக்கு உயிரிழப்பு.

தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட ஆணை.

மர்மநபர்கள் மதுரை ஆதினம் மடத்தில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் நித்யானந்தா வாழ்க என கோஷமிட்டு சென்றது குறித்து போலீசார் விசாரணை.

வரும் 30,31 ஆம் தேதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்.

வியாழன், 26 அக்டோபர், 2017

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 26/10/17 !

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 26/10/17 !

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது.

சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை.

ஆர்கே நகரில் 46,000 போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது என திமுக வழக்கு.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் ஆஜர்.

கட் அவுட் வைப்பது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல -அமைச்சர் கடம்பூர் ராஜு.

காசிமேடு தடியடி குறித்த அமைச்சர் ஜெயக்குமாரின் புகாருக்கு விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை : முக.ஸ்டாலின்.

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு கண்டனம்.

புதுச்சேரியில் கந்துவட்டி வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் நாராயணசாமி.

நவம்பர் 7ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது - நடிகர் கமல்ஹாசன்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் - அமைச்சர் ஆர்பி. உதயகுமார்.

யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என மக்களுக்கு தெரியும்.டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை சொல்லாமல், கேலி செய்து வருகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி.

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை கைதிகள் இருவர் உயிரிழப்பு உடல்நலக் குறைவால் இறந்ததாக சிறை நிர்வாகம் தகவல்.

நிஜவாழ்க்கையில் நடிக்க விரும்பவில்லை ஏனென்றால் அதற்காக காசு தருவதில்லை:2.0 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் பேச்சு.

அதிமுகவிற்கு நன்றி காட்டத்தான் தெரியும்; நம்பிக்கை துரோகம் செய்யத் தெரியாது.
அதிமுகவிற்கு விசுவாசம்தான் தெரியும்; விஷமத்தனம் தெரியாது - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

தமிழக மக்களிடம் இருந்து எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்.

தொண்டர்கள் ஒற்றுமையால் அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது - திருச்சியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க திமுகவினர், தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபட வேண்டும் : முக.ஸ்டாலின்.

திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்காக ரூ.3.5 கோடியில் விமான நிலையத்தில் உள்ளது போல் வரவேற்பு அறை

கட் அவுட் வைப்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு திருச்சி அரசு விழாவில் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது - தம்பித்துரை.

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி ராணி (21) டெங்கு காய்ச்சலுக்கு பலி.

விஜய் நடித்த மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு தொடர்பான வசனங்கள் நீக்கம் படக்குழு தகவல்.

சென்னை எழும்பூரில் உள் கவின் கலை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, சக மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோயை உருவாக்கும் புகையிலைப் பொருளான "மாணிக்சந்த்" தயாரிப்பு நிறுவனத் தலைவர் புற்றுநோயால் காலமானார்.

தாஜ்மஹாலின் மேற்கு கதவு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு காளையார்கோவில், திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை தாலுக்காக்களுக்கு நாளை விடுமுறை.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

MATHI NEWS இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 24/10/17 !

MATHI NEWS இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 24/10/17 !

விரைவில் விடுதலை ஆவேன் பரோலில் வெளிவர குறல் கொடுத்த அனைவருக்கும் நன்றி - பேரறிவாளன்.

பரோலை நீட்டிக்க மறுத்தது தமிழக அரசு :
2 மாத பரோல் முடிந்ததை அடுத்து வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் பேரறிவாளன்.

போலீஸார் சங்கம் அமைக்க மகாராஷ்டிர மாநில பாஜக அரசு அனுமதி.
அறக்கட்டளையாக பதிவு செய்து கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி.

உயிருடன் உள்ளவர்களின் புகைப்படத்தை கட் அவுட், பேனர்களில் பயன்படுத்தக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் மற்றும் இயக்குநர் அமீரை விடுவித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு.

நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நாள்- "கறுப்பு தினமாக" அனுசரிப்பு அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் - திமுக செயல் தலைவர் தளபதி முக.ஸ்டாலின்.

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்குவதில் தவறில்லை விடுதலை செய்வதிலும் தவறில்லை - டிடிவி தினகரன்.

கந்துவட்டியை ஒழிக்க அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் முதலிடம் வகிப்பது டெங்குவும், லஞ்சமும் தான் என விஜயகாந்த் குற்றச்சாட்டு.

திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலுக்கு திரும்பியவுடன் ஆட்சி கலைவது உறுதி - தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.

முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், பாஜகவினரையும் ஒருநாள் முதுகில் குத்துவார்கள் - டிடிவி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.

விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மத்திய அரசு விஜயை மறைமுகமாக மிரட்டி வருகிறது - சீமான்.

திருமாவளவன் மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜகவை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேருக்கு நவ.7 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு.

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு.

நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது - திமுக முதன்மை செயலர் துரைமுருகன்.

கந்துவட்டி கொடுமையில் சிக்கிய ஈரோடு நெசவுத் தொழிலாளியின் கிட்னியை எடுப்பது தடுத்து நிறுத்தம்.

கரூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன் விசிக போராட்டத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது : ஹெச். ராஜா.

யாழ் நூலகத்துக்கு அரிய வகையான ஒரு லட்சம் மதிப்புள்ள நூல்களை அனுப்பும் திட்டம் தொடக்கம் : அமைச்சர் செங்கோட்டையன்.

மற்ற மாநிலங்களை விட தமிழக சிறைகளில் ஏற்படும் உயிரிழப்பு குறைவு : உயர்நீதிமன்ற கிளையில் சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல்.

கந்துவட்டி குறித்து புகார் மனுக்களை பெறுவதில் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் : நெல்லை மாவட்ட எஸ்பி.

நெல்லையில் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கைதான தளவாய்ராஜ் பாண்டியன் என்பவருக்கு நவ.7 வரை நீதிமன்ற காவல்.

கந்துவட்டி புகார் குறித்து இனி மாதம் ஒருமுறை கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் - நெல்லை எஸ்பி.

சதீஷ்குமார் என்ற நபருக்கும் காரில் சென்ற பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கும் இடையே மோதல் சம்பவம் : இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட மாரியப்பனுக்கு எதிரான வழக்கு நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் - டிடிவி.தினகரன்.

சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் வகையில், தாஜ்மஹால் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.

பெண்களிடம் சில்மிஷம் 2 இந்தியர்கள் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு.

தீக்குளிப்புக்குக் காரணமாக இருந்த, போலீஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை வேண்டும் - முக.ஸ்டாலின்.

நாட்டின் பொருளாதார அடிப்படை வலிமையாக உள்ளது.பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன : அருண் ஜெட்லி.

கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பாக இருப்பதை நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது : நல்லகண்ணு.

ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 16ம் தேதி நடைபெறும்.

தமிழிசை பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார்.

பிரேசிலில் உள்ள 30 அடி உயர பாலத்தில் 245 பேர் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி கின்னஸ் சாதனை.

திங்கள், 23 அக்டோபர், 2017

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 23/10/17 !

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 23/10/17 !

கந்துவட்டி கொடுமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு.

நெல்லை கந்துவட்டிக்கு தீக்குளித்தவர்களில் சுப்புலட்சுமி குழந்தை மதி சாருண்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய தயார் - உச்சநீதிமன்றம்.

எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது : நவ. 8ல் தொடங்கும் படப்பிடிப்பை முதலமைச்சர் பழனிசாமி துவங்கி வைக்கிறார் - ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பு.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் முதல்வர் பழனிச்சாமி பதில் மனு தாக்கல்.

அதிமுக அம்மா அணி சசிகலா, தினகரன் தலைமையிலான அணி என கூறுவது தவறு. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டன என தமிழக முதல்வர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுக சட்டவிதிப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி கிடையாது - டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் எம்பி.

சட்டத்தை திருத்த பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், தற்போது கொண்டுவந்த சட்டத்திருத்தங்கள் செல்லாது - நவநீதகிருஷ்ணன் எம்பி.

நிதிஆயோக் அமைப்பில் உள்ளவர்கள் விபரீத கருத்துகளை தெரிவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முக.ஸ்டாலின் வேண்டுகோள்.

ஆர்கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கப்படாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் : முக.ஸ்டாலின்.

வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த தீபாவின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதா மரணத்தில் நீதி தேவை என்று கூறியவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர் : டிடிவி தினகரன்.

2மாதங்களுக்கு வழங்கப்பட்ட பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு இந்திய கம்யூ மாநிலச்செயலர் முத்தரசன் கடிதம்.

டெல்லியில் 100வது நாளாக தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் நிறைவு - அய்யாக்கண்ணு அறிவிப்பு.

பொறையார் பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து 8 பேர் உயிரிழந்த விவகாரம் : உயர் நீதிமன்ற தானாக முன்வந்து வழக்கு.

டெல்லியில் நடைபெறுவது விவசாயிகளின் போராட்டம் அல்ல திமுகவின் போராட்டம் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 26ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக டிடிவி.தினகரனுக்கு உத்தரவு.

பேரறிவாளனின் பரோலை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை.

வழிபாட்டுத்தலங்கள் பற்றி தரைக்குறைவாக பேசியதாக நடிகர் விஜய் உள்ளிட்ட10பேர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார்.

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்த தம்பதியிடம் நீதிபதி கார்த்திகேயன் விசாரணை.

கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்கக் கோரி திமுக எம்ஏல்ஏ பிச்சாண்டி வழக்கு.

இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்.

திருநெல்வேலியில் குடும்பமே தீக்குளிப்பு
கந்துவட்டிச் சட்டத்தைக் கைவிட்ட காவல்துறை - வைகோ கண்டனம்

மாறன் சகோதரர்கள் மீதான முறைகேடு வழக்கு: நவ.10-க்கு ஒத்திவைப்பு.

மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதால் ஆதார் கட்டாயம் - சிபிஎஸ்இ.

ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது : இயக்குநர் ஷங்கர்.

தேர்தல் ஆணையம் முடிவு செய்வதற்கு முன்னரே இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என பேசி வருவது யார் கொடுக்கும் தைரியத்தில் - கனிமொழி.

மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாக ஹெச்.ராஜா கூறிய விவகாரம் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்.

கேரள முதல்வர் பிரனாயி விஜயனுடன் திருமாவளவன் சந்திப்பு.

வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.50,000க்கு மேல் செலுத்துபவர்களிடம் அசல் ஆவணங்களை சரிபார்க்க மத்திய அரசு உத்தரவு.

அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்களை கண்டித்து காசிமேட்டில் மீனவர்கள் சாலை மறியல் - பிரதான சாலைகள் மூடல்.

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 201 பாலசேவிகா பணியிடங்களை உருவாக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.

தமிழிசை சவுந்தரராஜன் வீட்டை முற்றுகையிட்டு, அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் கைது.

நெல்லையில் 4 பேர் தீக்குளிப்புக்கு காரணமான கந்துவட்டிக்காரர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

வட பழனியில் உள்ள நடிகர் விஷாலின் அலுவலகத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது - நடிகர் கருணாஸ்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

Channel S Tamil புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் உதயமாகிறது இதில்பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிகலாம்.


Channel S Tamil புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் உதயமாகிறது இதில்பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிகலாம்.

புத்தம் புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் உதயமாகிறது! பிசினஸ், வர்த்தகம், ஷேர் மார்க்கெட், தொழில் உலகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை! வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், கல்வி, தேச முன்னேற்றம் குறித்த ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளுக்கு தனி உரிமை! நிஜமாகவே உங்கள் நலனுக்காக ஒளியோட்டம் நடத்தப் போகும் புதுமைத் தொலைக்காட்சி!

Channel S Tamil - Channel S For Success!

# இந்தப் பெருமைப் பணியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் உடனடியாக உங்கள் பயோடேட்டாவை GG@GGowtham.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி நெறியாளர், வரவேற்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் புகைப்படத்தையும் கட்டாயம் இணைக்கவும். அனுபவசாலிகள்தான் என்றில்லை, புதியவர்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கக் காத்திருக்கிறோம்! பத்தோடு பதினொன்றாக இந்தப் பணியை நினைக்காமல், உள்ளுக்குள் வேட்கையோடும் உள்ளத்தில் உவகையோடும் வாருங்கள், வரவேற்கிறோம்!

# தமிழ் ஒலிக்கும் உலகின் எல்லா இடங்களில் இருந்தும் செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். சென்னையில் பணிபுரிய செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தி ஒருங்கிணைப்பாளர்கள், செய்தி ஆசிரியர்கள், பிசினஸ் எடிட்டர்ஸ், வீடியோ எடிட்டர்கள், செய்தி வாசிப்பாளர், கிராஃபிக்ஸ் அனிமேட்டர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி நெறியாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஆர்ட் டைரக்டர், அரங்க உதவியாளர்கள், தயாரிப்பு உதவியாளர்கள்,மார்கெடிங் மேனேஜர், மார்கெடிங் பிரதிநிதிகள், அக்கவுண்டண்ட், டிரைவர், ப்ளே அவுட் டெக்னீஷியன், ஆன்லைன் எடிட்டர்கள்.. (வரிசை முன்பின் மாற்றி இருக்கலாம், தொலைக்காட்சிப் பணிக்குத் தேவைப்படும் அத்தனைபேரும் தேவை!) அனைவரும் விண்ணப்பிக்கலாம். முழுநேரப்பணிக்குத்தான் என்றில்லை, பகுதி நேரப் பணியாற்ற விரும்புகிறவர்களும் அதைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.

# பணி குறித்து இங்கே விளக்கம் பெறவோ - சாட் செய்யவோ வேண்டாம்.. ப்ளீஸ். உங்கள் பயோடேட்டா உங்களைத் தேர்வு செய்யத் தூண்டினால், எங்கள் HR Executives உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள்!

# ஒரு வேண்டுகோள்: இந்தப் பதிவை ஷேர் செய்தால், உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் இருக்கும் யாரோ ஒருவருக்கேனும் அது உபயோகப்படலாம்! அந்த ஒருவருக்கு பணி வாய்ப்புக் கிடைக்க உதவிய திருப்தி உங்களுக்கும் கிடைக்கலாம்!

MATHI NEWS பரபரப்பு🚨செய்திகள் 22/10/17 !

MATHI NEWS பரபரப்பு🚨செய்திகள் 22/10/17 !

தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆர்கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.

பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும் - விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கை.

போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களில் எதிர்க்க வேண்டியதை எதிர்த்தோம், ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தோம் : சீதாராம் யெச்சூரி.

நாடாளுமன்றத்தில் எனது பணி எப்படி இருந்ததோ அதையே வெளியில் செய்து வருகிறேன் : சீதாராம் யெச்சூரி.

ஆலங்குளத்தில் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள குழு கீழடிக்கு மாற்றப்படவுள்ளது.
கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நல்லமுடிவு வரும் என்ற விரக்தியில் திமுகவினர் பேசுகின்றனர் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையாவிடம் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் முக.ஸ்டாலின்.

மெர்சல் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக பார்த்ததாக ஹெச். ராஜா ஒப்புக்கொண்டது வேதனை தருகிறது.தவறை ஒப்புக்கொண்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - நடிகர் விஷால்.

மண்டைக்கனமாக பேசுகிறார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா - அமைச்சர் மணிகண்டன் பகிரங்க குற்றச்சாட்டு.

50 ஆண்டுகள் பழமையான அரசு கட்டங்கள் ஏதேனும் பழுதாகியிருந்தால் அவை உடனடியாக இடிக்கப்படும் : அமைச்சர் ஒ.எஸ்.மணியன்.

வேளாண்துறையை மத்திய அரசின் அதிகாரப்பட்டியலுக்கு மாற்ற முயற்சிப்பது கண்டிக்கதகக்து : வைகோ.

மெர்சல் படத்தை வைத்து சர்ச்சை உருவாக்குவது உள்நோக்கம் கொண்டது : திருமாவளவன்.

அதிமுகவினருக்கு தந்தை , பாதுகாவலர் என அனைத்தும் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே : அமைச்சர் செல்லூர் ராஜூ.

சுற்றுலா மேம்பாட்டுக்காக நமக்கு நாமே பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலினுக்கு வாழ்த்து : அமைச்சர் ஜெயக்குமார்.

காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்தபோது அடிமையாக இருந்தவர்கள் திமுகவினர் :அமைச்சர் செல்லூர் ராஜூ.

மத்திய பாஜக அரசிடம் போட்டி போட்டுக்கொண்டு தான் சிறந்த அடிமை என அதிமுகவினர் காட்டிக்கொள்கிறார்கள் : முக.ஸ்டாலின்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது : சீமான்.

அமைச்சர் எம்சி.சம்பத் தலைமையில் கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் கூட்டத்தை 3 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் புறக்கணிப்பு.

மெர்சலில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் பார்த்தேன் நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு விஷால் பேச வேண்டும் : ஹெச்.ராஜா.

மெர்சல் படத்திற்கு விளம்பரம் தேடித்தந்த ஹெச். ராஜாவுக்கு விஜய் என்றும் நன்றிகடன்பட்டிருக்கிறார் - நாஞ்சில் சம்பத்.

ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கடன் தள்ளுபடி மாநில அரசின் பொறுப்பு என கூறிவிட்டு வேளாண்துறையை பறிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது : வைகோ.

ராமநாதபுரம் : பரமக்குடி அருகே அரியனேந்தலில் இரண்டரை வயது குழந்தை சிவகுரு காய்ச்சலுக்கு பலி.

வேதாரண்யம் அருகே நெய்விளக்கை சேர்ந்த 16 வயது சிறுமி அனுசுயா டெங்குவுக்கு பலி.

தருமபுரியை அடுத்த ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிகரசுதன் டெங்குவுக்கு பலி.

சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு.

மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி.

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மக்களுக்கு மருந்து விற்பனை செய்தால் சீல் வைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தங்களது நிறுவனத்தின் பவளவிழா அழைப்பிதழை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 27ல் காளையார் கோவிலில் மருதுசகோதரர் குருபூஜை நடைபெற உள்ளதால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் ஹண்ட்வாராவில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.

புதுக்கோட்டை : வம்பன் சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு.

மெர்சல் படத்தை நடிகர் விஜய், இயக்குநர் அட்லியுடன் பார்த்தார் நடிகர் கமல்ஹாசன்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

உண்மையிலயே 10 ரூபாய்க்கு வைத்தியம் பாா்க்கிற டாக்டா் தன் வேலையை மட்டும் பாா்க்கிறாா்....



உண்மையிலயே 10 ரூபாய்க்கு வைத்தியம் பாா்க்கிற டாக்டா் தன் வேலையை மட்டும் பாா்க்கிறாா்....

25 கோடி வாங்கிட்டு,5 வுவாக்கு வைத்தியம் பண்ணுறது போல நடிக்கிற நாதாரி, நாட்டுக்கே வைத்தியம் பாா்க்கிறது போல பில்டப்பு பண்ணுது....

மீள் பதிவு:- தென்காசி ரியல் ஹீரோ டாக்டர் இராமசாமி ஐயா..
10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி!
''சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்''.. (Dr.இராமசாமி)

(நன்றி:- விகடன்)

டெங்கு காய்ச்சலில் என்ன தான் பிரச்சனை? ஏன் இத்தனை குழப்பம்?* கேள்வி பதில்._



டெங்கு காய்ச்சலில் என்ன தான் பிரச்சனை? ஏன் இத்தனை குழப்பம்?*
கேள்வி பதில்..

*(கொஞ்சம் நீளமான மெசேஜ் தான். ஆனால் தவறாமல் முழுவதுமாக படியுங்கள்)*


டெங்கு காய்ச்சல் கொசுவால் வருகிறது என்றும் அதனால் வரும் பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் அதிகம் என்றும் நம் ஊரில் எல்லாருக்கும் தெரியும்.

அந்த டெங்கு காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது என்று தான் ஆயிரம் குழப்பம்.

மருந்து கடையில் மாத்திரை வாங்கி தினமும் முழுங்குவதா?

பக்கத்து தெரு போலி மருத்துவரிடம் போய் தினமும் 2 ஸ்டெராய்டு ஊசி போட்டுக்கொள்வதா?

காய்ச்சல் வந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரி போய் களேபரம் செய்வதா?

மூலிகை கசாயங்கள் குடித்துக்கொண்டு வீட்டிலேயே மஜாவாக இருப்பதா?

என்ன தான் செய்வது? மக்களுக்கு ஒரே குழப்பம்.

இதில் _வாட்ஸாப் விஞ்ஞானிகள்_ வேறு. *MR தடுப்பூசியின் போது குட்டையை கிளப்பிய அதே கும்பல்* இப்போதும் மக்களை காவு வாங்கியே தீருவோம் என்று புது சபதம் எடுத்துள்ளார்கள்.

*வாட்டசாப்பில் வந்த சில காமெடிகள்:*

_டெங்கு என்றொரு நோயே இல்லை. இது கொசு மருந்து விற்க கார்ப்பரேட் கம்பெனி செய்யும் சதி_ (கொசு மருந்து வித்து அம்பானியா ஆக முடியும்)

_ஆன்டிபயாடிக் மருந்து கம்பெனி மாஃபியாவும் இல்லுமிநாட்டியும் அலோபதி மருத்துவர்களும் சேர்ந்து செய்யும் சதி_ (எங்கயா இருக்காங்க இந்த இல்லுமிநாட்டி,  டெங்குவில் ஆன்டிபியாடிக்கு எந்த வேலையும் இல்லைங்கிறது இவிங்களுக்கு தெரியுமா)

_உடலில் உள்ள அழுக்கு கழிவுகள் சேருவதால் தான் டெங்கு வருகிறது. அலோபதி மருந்து சாப்பிட்டால் அழுக்கு தேங்கி விடும்._ (குட்டைல தண்ணி தேங்கினா கொசு வரும்னு கவர்மெண்ட் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல)

_கடைசியா ருபெல்லா தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு எல்லாம் மட்டும் தான் டெங்கு வருது_ (60, 70 வயசு தாத்தா பாட்டிகளுக்கும், 30, 40 வயசு பெரியவங்களுக்கு எல்லாம் டெங்கு வருதே, அவுங்க எந்த தடுப்பூசி போட்டாங்க. எங்க இருந்துடா வரீங்க நீங்கெல்லாம், டெய்லி டிசைன் டிசைனா யோசிச்சிக்கிட்டு)

இதில் கொடுமை என்னன்னா, நன்கு படித்த மருத்துவம் அல்லாத வேறு துறையை சேர்ந்த நண்பர்களும் இந்த வெட்டி மெஸேஜ்களை பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர்.

அதனால்,
குழந்தை நல நிபுணர் என்கிற முறையிலும்,
பல டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஐ சி யூவிலும், வார்டிலும் வைத்து டெங்குவின் பல்வேறு மோசமான முகங்களை தினம் தினம் பார்க்கும் வகையிலும்,
டெங்கு பற்றி பல சந்தேகங்களை முறையாக தீர்த்து வைக்கவே இந்த மெசேஜ்.

_நாம பேசலனா, முறையான தகவல் மக்களுக்கு கொடுக்கலனா, அப்புறம் இந்த போலி ஆசாமிகள் சொல்லுறதும், இட்லி சட்னின்னு சினிமாக்காரங்க சொல்லுறதும் தான் உண்மைன்னு ஆயிடும்._


*கேள்வி 1:*

*டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தான் என்னென்ன?*

இப்போதுள்ள நிலைமையில் எப்போதும் சொல்லும் காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வலி, குமட்டல், வாந்தி என்றெல்லாம் டெங்கு வருவதில்லை.
டெங்கு பரவும் ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு 3 நாளுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்தாலே முறையாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.


*கேள்வி 2:*

*டெங்கு காய்ச்சல் என்று தெரிந்த உடன் ஆஸ்பத்திரியில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? டெங்கு வந்தாலே கதை முடிந்ததா?*

இல்லை. டெங்கு என்பது மற்ற வைரஸ் காய்ச்சல் போன்றதொரு காய்ச்சல் தான்.

100 பேருக்கு டெங்கு வந்தால்,
அதில் 50 பேருக்கு டெங்கு என்றே தெரியாமல் ஒரு வைரஸ் காய்ச்சல் போன்று வந்து தானாகவே சரியாகிவிடும். இவர்களை *category A* என்பர். இவர்களுக்கு ஆஸ்பத்திரி அட்மிஷன் எல்லாம் தேவை இல்லை. நன்கு நீர் அருந்தி கொண்டு, அதிக காய்ச்சல் இருந்தால் பாராசிடமால் மாத்திரை உட்கொண்டு வீட்டில் இருந்தாலே போதும். 5 நாட்களில் சரியாகிவிடுவார்கள். இந்த மக்கள் தான் டெங்குவில் பெரும்பான்மை என்பதால் தான் பாட்டி வைத்தியமும் நாட்டு வைத்தியமும் வேலை செய்வது போல் தெரிகிறது. ஹீலர் ஆசாமிகள் பிழைக்கிறார்கள்.இவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கவில்லை என்றாலும் தானாகவே சரியாகிவிடுவார்கள்.

இன்னொரு 40 பேருக்கு, வாந்தி, வயிற்று வலி ஜாஸ்தி இருக்கும். தட்டை அணுக்கள் எண்ணிக்கை சுமாராக குறையும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இவர்களை *category B* என்பர். இவர்கள் எங்காவது ஒரு மருத்துவமனையில் இருப்பது நல்லது. ஏனென்றால் இவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அடுத்த கட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இவர்களை இரத்த பரிசோதனை, நாடி, இரத்த அழுத்தம் , சிறுநீர் வெளியேற்றம் எல்லாம் கொண்டு நன்றாக கண்காணிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாட்டிற்கு iv fluids ஏற்ற வேண்டும். அணுக்கள் எல்லாம் குறைந்து தானாகவே ஏறி விடும். எல்லா பிரச்சனைகளும் ஏழு நாட்களில் சரியாகி விடும்.

கடைசி 10 சதவீத க்ரூப் தான் டேஞ்சர். இவர்களை *category C* என்பர். இவர்களுக்கு டெங்குவின் தீவிர பாதிப்புகளான

*டெங்கு ஷாக் - இரத்த அழுத்தம் குறைபாடு (dengue shock),*
*இரத்த போக்கு(hemorrhage),*
*கல்லீரல் பாதிப்பு (liver failure),*
*சிறுநீரக பாதிப்பு (renal failure),*
*மூளை பாதிப்பு (encephalitis),*
*பாக்டீரியா தொற்று (secondary bacterial sepsis)*
போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பெரும்பாலும் டெங்குவின் உயிரிழப்புகள் ஏற்படுவது இந்த மக்களுக்கு தான்.
இவர்களை ஐ சி யூ போன்ற பிரத்தியேக வார்டுகளில் வைத்து பார்க்க வேண்டும். இவர்களுக்கு எந்த நொடியும் எந்த பிரச்சனையும் ஏற்படலாம். தீவிர கண்காணிப்பும் சமயத்திற்கு ஏற்ற உயிர் காக்கும் மருந்துகளும் அவசியம்.

சரி, அப்போ 90 சதவீதம் மக்களுக்கு ஒன்னும் ஆகாதுனா, ஏன் இத்தனை பிரச்சனை?

எந்த நபர் எந்த க்ரூப் என்பது டெங்கு கண்டுபிடித்த முதல் நாளிலேயே கூற முடியாது.

7 நாட்களும் முறையான மருத்துவ கண்காணிப்பில் இருந்தால் தான், அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா, மருத்துவமனை வார்டில் வைத்தா அல்லது ஐ சி யூவில் வைத்து சிகிச்சையா என்று கூற முடியும். எனவே டெங்கு என தெரிந்தால் முறையாக மருத்துவ ஆலோசனை பெற்று உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை பின்பற்றுங்கள்.

category C நபர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு மூலிகை சாறு அருந்திகொண்டிருந்தாலோ, போலி மருத்துவரிடம் ஸ்டீராய்டு ஊசி போட்டு கொண்டிருந்தாலோ, காலி தான்.

இல்லை category A நபர் நன்றாக நீர் அருந்திக்கொண்டு வீட்டில் இருக்காமல், பெரிய மருத்துவமனை சென்று பெட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தாலும், முறையாக சிகிச்சை கிடைக்க வேண்டிய நபர்கள் தான் பாதிக்கப்படுவர்.


*கேள்வி 3:*

*டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்தே இல்லை என்கிறார்களே. நீங்கள் என்ன category a, b, c என்றெல்லாம் புருடா விடுகிறீர்கள்? என்ன தான் சிகிச்சை கொடுப்பீர்கள் மருத்துவமனையில்?*

முதலில் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நவீன மருத்துவ சிகிச்சை என்பது வெறும் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதல்ல.

முன்பே சொன்னது போல, category a விற்கும் b விற்கும் எந்த பெரிய சிகிச்சையும் இல்லை. சிறிது பாராசிடமால், வாந்தி மருந்து, வயற்று வலி மருந்து, அவ்வளவே. ஹீலர் ஆசாமிகள் சொல்வது போல் ஆண்டிபயாடிக்கிற்கு எல்லாம் டென்குவில் வேலை இல்லை. 7 நாட்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தியே கிருமியை உடலை விட்டு விரட்டி விடும். அதுவரை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடுவில் நீங்கள் கிவி, பப்பாளி, மாதுளை, கருப்பட்டி, நாட்டு வெள்ளம், வெங்காயம் (வேற ஏதாவது விட்டுட்டேன்னா?) இவை எல்லாம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் நோய் குணமாவது உறுதி.

*Category C* நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தான் விஷயமே. இவர்களுக்கு வெறும் மூலிகை கசாயம் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது.
இல்லை பெரும்பாலான மருத்துவர்கள் நினைப்பது போன்று platelet எனப்படும் தட்டை அணுக்கள் 10 பாக்கெட் ஏற்றுவதாலும் நோய் சரி ஆகாது.

*_என்ன தான் செய்வோம் மருத்துவமனைகளில்?_*

*டெங்கு முதலில் ஒரு platelet (தட்டை அணுக்கள்) குறைபாடு நோய் அல்ல.*

டெங்குவில் தட்டை அணுக்கள் குறைகின்றன. அவ்வளவே. அதற்காக தட்டை அணுக்கள் இரத்தமாக ஏற்றுவதோ, தட்டை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க மூலிகை உட்கொள்வதோ எந்த பயனும் அளிக்க போவதில்லை. ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை இருக்க வேண்டிய தட்டை அணுக்கள் வெறும் ஐந்தாயிரம் பத்தாயிரம் வந்தாலும், கொஞ்சம் இரத்த கசிவு அல்லது இரத்த போக்கு  ஏற்படலாம், ஆனால் உயிரிழப்பு ஏற்படுவது அதனால் அல்ல.

டெங்குவில் உயிரிழப்புகளுக்கு காரணம் நீர் சத்து குறைபாட்டினால் ஏற்படும் *இரத்த அழுத்த குறைபாடும்(shock)*, *மூச்சு திணறல்(ards)* ஏற்படுவதும் தான். *தீவிர இரத்த கசிவுக்கு(hemorrhage)* முக்கிய காரணம் உடன் இருக்கும் இரத்த அழுத்த குறைபாடு தான்.

டெங்கு ஒரு நீர் சத்து குறைபாடு நோய். வாந்தி பேதி போன்ற நோய்களில் நீர்ச்சத்து உடலை விட்டு வெளியேறி குறைபாடு ஏற்படுத்தும்.
_ஆனால் டெங்குவில் ஓட்டை போட்ட சட்டி போல, நீர்ச்சத்து இரத்த குழாயை விட்டு வெளியேறி மற்ற இடங்களில் உடலுக்கு உள்ளேயே தங்கி விடும்._ எனவே தான் டெங்குவில் முக வீக்கம், வயறு வீக்கம், நுரையீரல் நீர் தேக்கம் - மூச்சு திணறல் போன்றவை ஏற்படும்.

நோயாளிகள் பார்க்க நீர் தேங்கி உப்பியது போல தோன்றினாலும், இருக்க வேண்டிய இடத்தில் நீர்ச்சத்து இருக்காது. இரத்த குழாயில் நீர் இல்லாததால், இரத்த அழுத்தம் குறைந்து, நாடி பலவீனமிழந்து, மூளை, சிறுநீரகம், ஈரல், போன்ற உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து விடும்.

ஓட்டை போட்ட சட்டியில் தேவையான நீரும் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நீர் அதிகமாக கசிந்து வெளியே தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
தீவிர டெங்கு நோயாளிகளுக்கு நீர் சிகிச்சை அளிப்பது இரண்டு மலைகளுக்கு நடுவில் கையறு கட்டி நடப்பது போல. இரண்டு பக்கம் தவறினாலும் பிரச்சனை தான்.

*Critical phase* என்று சொல்லப்படும் இந்த நிலை காய்ச்சலின் 4, 5, 6 ஆகிய நாட்களில் பொதுவாக காணப்படும். முக்கியமாக காய்ச்சல் விட்ட பிறகே பல பிரச்சனைகள் வரும். முன்பு சொன்னது போல உடலின் நோய் எதிர்ப்பு சக்தி 7வது நாளில் கிருமியை விரட்டும் வரை நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு ஆகிய அதிமுக்கிய விஷயங்களை சீராக கண்காணித்து பார்த்துக்கொண்டாலே போதும்.

நீர் சத்து ஏற்றத்திற்கு(iv fluids) கட்டுப்படவில்லை என்றால்,
செயற்கை சுவாசம்(ventilation),
இரத்த ஏற்றம்,
இரத்த அழுத்த முன்னேற்ற மருந்துகள்(ionotropes),
சிறுநீரக டயாலசிஸ்
போன்ற சிகிச்சைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கிருமியை விரட்டிய பிறகு இந்த *supportive measures* குறைத்து நிறுத்தப்படும்.
கை கால் உடைந்தால் எலும்பு கூடும் வரை மாவுக்கட்டு போட்டு  ஒரு தடி வைத்து நடக்கிறோம் அல்லவா, அது போல தான் இந்த ஐ சி யு சிகிச்சைகள் டென்குவில்.

*Category C* நிலைமைக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு நபர்/குழந்தையை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கவில்லை என்றாலோ, தக்க சமயத்தில் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை என்றாலோ, மருத்துவமனைக்கு காலதாமதமாக கொண்டு சென்றாலோ, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இதனால் தான் டெங்குவில் தினம் தினம் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மேற்கூறிய அனைத்தும் டெங்கு போல நிலவும் மற்ற வைரஸ்/மர்ம காய்ச்சல்களுக்கும் பொருந்தும்.


*கேள்வி 4:*

*அப்படி என்றால் இந்த மூலிகைகள், கசாயங்கள், பப்பாளி இலை மாத்திரைகள் பற்றிய உங்கள் கருத்து?*

இதை பற்றிய ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகளில் சிறிது பயன்கள் இருப்பது போல் தோன்றினாலும், பப்பாளி போன்ற சாறுகள் சிறிதளவு அணுக்கள் எண்ணிக்கையை ஏற்றுவது போல இருந்தாலும், தீவிர டெங்குவில் இதன் பங்கு எதுவும் இருப்பது மாறி தெரியவில்லை.

தாய்லாந்து , இலங்கை போன்ற நாடுகளில் இந்த மூலிகைகளை வைத்து செய்த ஆராய்ச்சிகளிலும் இதுவே தெரிய வந்துள்ளது. டெங்குவினால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதிலோ, தீவிர பாதிப்புகளை குறைப்பதிலோ இவை உதவுவது போல எந்த ஆராய்ச்சியும் வெளிவரவில்லை.

ப்ராக்டிகளாக தினம் தினம் ஐ சி யூ வில் டெங்கு பேஷண்ட் பார்க்கும் எங்களுக்கும், இந்த சாறுகள் குடித்தவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரிவதில்லை.

எனவே இந்த சாறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தி கொள்ளுங்கள். தப்பில்லை. அவை ஒரு மூலையில் வேலை செய்தால் செய்து விட்டு போகட்டும். ஆனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்யாமல் வீட்டில் இருந்து விடாதீர்கள். டெங்குவில் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.


*கேள்வி 5:*

*டெங்கு இருக்கிறது என்று தெரிந்த நபர்/குழந்தைக்கு என்னென்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்?*

கீழ்கண்டவற்றை *warning signs / எச்சரிக்கை அறிகுறிகள்* என்போம்.

1. தீவிர வயிற்று வலி
2. தொடர் வாந்தி
3. மூக்கு, பல் ஈறு போன்றவற்றில் இரத்த கசிவு
4. கண், வயறு வீக்கம்
5. மூச்சு திணறல்
6. வழக்கத்திற்கு மாறான உடல் சோர்வு
7. பரிசோதனைகளில் வேகமாக தட்டை/வெள்ளை அணுக்கள் குறைவது. (எல்லாருக்கும் தெரிந்த, பயப்படும், ஆனால் பெரிதாக பயனற்ற பரிசோதனை இது)
8. பரிசோதனைகளில் *hematocrit / PCV* எனப்படும் இரத்த அடர்த்தி அதிகம் ஆவது. (டெங்குவில் மிக மிக முக்கியமானதும், பெரிதாக வெளியே தெரியாமலும், கண்டுகொள்ளாமல் விடுவதும் இந்த காரணியே. இதை சரியான நேரத்தில் கவனித்தாலே பாதி இழப்புகளை தவிர்க்க முடியும்)

மேற்கூறிய எந்த பிரச்சனை இருந்தாலும் அந்த நோயாளி உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
ஒரு நோயாளி *Category B* இல் இருந்து *C*க்கு செல்ல ரொம்ப நேரம் பிடிக்காது.
ஆரம்பத்தில் கவனிக்காமல், *Category C இல் decompensated shock* எனப்படும் மீள முடியா இரத்த அழுத்த குறைபாட்டிற்கு சென்று விட்டால், அப்புறம் என்ன சிகிச்சை செய்தாலும் பெரிதாக பயன் தருவதில்லை.


*கேள்வி 6:*

*டெங்கு நோயால் குழந்தைகள் அதிகமாக இறப்பதற்கு காரணம் என்ன? மருத்துவர்களின் அல்லது மருத்துவமனைகளின் அலட்சிய போக்கு தான் காரணமா?*

டெங்குவினால் மற்றும் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலினால் தினம் தினம் பற்பல இறப்பு செய்திகள் டிவி செய்திகளில் வந்த வண்ணம் உள்ளன.
சரியான சிகிச்சை அளிக்காதது தான் காரணம் என்று மக்கள் சண்டை போடுவதும் கேஸ் போடுவதும் என்று காலம் செல்கிறது. மிகப்பெரிய அரசு மருத்துவமனைகள் முதல் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் வரை அனைத்தும் இந்த பழிகளை சுமக்கின்றன.

*காரணங்கள் என்னென்ன?*

1. டெங்கு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்(warning signs) தெரியாததால், category cக்கு செல்லும் குழந்தைகளை கண்டுபிடிக்க தெரியாமல் போவதுமுக்கிய காரணம். முக்கியமாக குழந்தைகளில் bp குறைய ஆரம்பிக்கும் முன்னரே வேறு சில அறிகுறிகளை வைத்து  இரத்த ஓட்ட குறைபாட்டை கண்டுபிடித்தால் தான் அவர்களை காப்பாற்ற முடியும். Bp குறைய ஆரம்பித்த பிறகு என்ன செய்தாலும் வீண் தான்.

2. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் டெங்குவினால் ஏற்படும் இரத்த ஓட்ட குறைபாடு, மூச்சு திணறல் மிக அதிகம். அவை தான் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம். பெரியவர்களுக்கு பெரும்பாலான பேருக்கு தட்டை அணுக்கள் 5000, 10000 என குறைந்தாலும் பெரிய பிரச்சனைகள் வருவதில்லை.

3. எச்சரிக்கை அறிகுறிகள்(warning signs) தெரிந்த பிறகு வீட்டில்  உட்கார்ந்து கொண்டு காலம் தாழ்த்துவது சீரியசான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
டென்குவில் காய்ச்சல் விட்ட பிறகே , அதாவது 4, 5, 6ஆம் நாட்களில் தான் சீரியசான பிரச்சனைகள் வரும். பெரும்பாலான பெற்றோர்கள் காய்ச்சல் விட்டுவிட்ட பிறகு எல்லாம் சரியாகி  விட்டது என்று நினைத்து கொண்டு வீட்டில் இருந்து விடுவார்கள். அப்படி விட்டு, கடும் இரத்த ஓட்ட குறைபாட்டில் பல குழந்தைகள் கூட்டி வரப்படுகிறார்கள். இந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

4. டென்குவில் உயிர் பிரியும் தருவாய்க்கு 2 மணி நேரம் முன்பு வரை கூட, குழந்தைகள் நார்மலாக பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு bp, பல்ஸ் மிகவும் குறைந்து, கை கால்கள் சில்லென இருப்பது, சிறுநீர் வராமல் இருப்பது பெற்றோர்களுக்கு கண்ணில் படாது. எனவே தான் நிறைய சமயம், _“நல்லா இருந்தான், டாக்டர் சிகிச்சை கொடுக்கல. திடீர்னு இறந்துட்டான்”_ என்று எல்லாம் வசவுகள் வருகின்றன. என் ஒபிடிக்கு வெளியில் கூட சென்ற மாதம், ஒரு சிறுவன் ஒரு மணி நேரமாக மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்தவனை உள்ளே கூட்டி வந்தார்கள். உள்ளே நுழைந்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டான். பார்த்தால் bp இல்லை, பல்ஸ் இல்லை, தட்டை அணுக்கள் வெறும் ஐந்தாயிரம், உடல் முழுக்க இரத்த சிவப்பு புள்ளிகள்(தோலில் இரத்த கசிவு), ஐ சி யு வில் வைத்து கடைசியாக காப்பாற்றப்பட்டான். அவன் அவ்வளவு சீரியஸாக இருந்தது அந்த நிமிஷம் வரை படித்த பெற்றோர்களுக்கு கூட தெரியவில்லை. அப்போது படிக்காத பாமர மக்களை எண்ணி பாருங்கள்.

5. இவ்வளவு விஷயங்களை தாண்டி மிக அருமையாக உலக தரம் வாய்ந்த சிகிச்சைகள் செய்தாலும், category c இல் வரும் நோயாளிகளில் ஒன்றில் இருந்து ஐந்து சதவீத உயிரிழப்பு தவிர்க்க முடியாத ஒன்று. அதை தவிர்ப்பது நம் கையில் இல்லை.

ஆனால் மிச்சம் 95 சதவீத உயிரிழப்புகள் கட்டாயம் தவிர்க்கக் கூடியதே.
அது வெறும் மருத்துவர் கைகளில் மட்டும் இல்லை. உங்கள் கைகளிலும் தான் உள்ளது.


*கேள்வி 7:*

*டெங்குவை ஏன் இன்னும் ஒழிக்க முடியவில்லை? அரசின் அலட்சியம் தான் காரணமா?*

டெங்கு நோய் தடுப்பு பணிகளில் அரசு சுகாதார துறையை சேர்ந்த மருத்துவர்களும் மற்ற பணியாளர்களும் பன் மடங்கு வேலைகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மருத்துவ மனைகளில் உள்ள மருத்துவர்களும், இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

அவர்கள் செய்யும் துரிதமான வேலைகளினால் தான் பல ஊர்களில் டெங்கு சீக்கிரம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.

ஆனாலும் புதிது புதிதாக பல்வேறு ஊர்களில் டெங்கு தோன்றிக்கொண்டே இருக்கிறது.

ஏன் என்று பார்ப்போம்.

டெங்கு நோய் கிருமியை பகலில் கடிக்கும் ஏடிஸ் கொசு பரப்புகிறது.
1970க்கு முன் வெறும் 9 நாடுகளில் தொந்தரவு ஏற்படுத்தி வந்த இந்த கொடிய நோய் இப்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து வருகிறது. கிட்டத்தட்ட வருடத்திற்கு  10 கோடி பேர் இந்த டெங்குவினால் உலகம் முழுதும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

பருவ நிலை மாற்றம்,
நாடுகள் மற்றும் ஊர்களுக்குள் அதிக போக்குவரத்து,
நகரமயமாக்கல்,
ஜன தொகை மற்றும் மக்கள் நெருக்கம் அதிகரிப்பு,
சுற்றுப்புற சுகாதார கேடு,
ஆகிய காரணிகள் இந்த நோய் பரவுவதற்கு காரணமாக அமைகிறது.

சில நாடுகளில் மட்டும் இருந்த கொசுவும் கிருமியும் அப்படி இப்படி என்று பல உலக நாடுகளில் பரவி விட்டது. இன்னும் பரவி வருகிறது.

சும்மா கொசு மருந்து அடித்து விட்டால் மட்டும் இந்த நோய் ஒழிந்து விடாது.
ஆராய்சிகளின் படி இந்த ஏடிஸ் கொசுக்கள் சாதாரண கொசு மருந்துகளுக்கு கூட சரியாக கட்டுபடுவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த கொசுக்கள் உருவாகும் இடங்களான நீர் தொட்டி, டயர், தேங்காய் தொட்டி, பிரிட்ஜின் பின்புறம் , மாடிகளில் உள்ள காரை விரிசல்கள், மற்றும் தூய தண்ணீர் தேங்கும் அணைத்து இடங்களிலும் இந்த கொசுக்களின் லார்வா புழுக்கள் இருக்கும்.
இவைகளில் நீர் தேங்காமல் பார்க்க வேண்டும்,
லார்வா புழுக்கள் இருந்தால் சுகாதார துறையினர் உதவியோடு அவற்றை மருந்தடித்து அழிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் வீடு மற்றும் சுற்றுபுரங்களில் தான் செய்ய முடியும்.

இதை எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டால் கூட,
ரோட்டோரம் இருக்கும் டயர்களிலும் தேங்காய் மூடிகளிலும் பாறை குழிகளிலும் மழை வந்த பிறகு தேங்கி இருக்கும் நீரில் உருவாகும் கொசுக்களை எப்படி தடுப்பது? இது தான் நமக்கு மிகப்பெரிய சேலஞ்சு.

இதனால் தான் டெங்குவை தடுப்பது சிம்ம சொப்பனமாக ஒவ்வொரு நாட்டிலும் ஊரிலும் உள்ளது.
பிரேசில், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, போன்ற நமக்கு இணையான அல்லது இன்னும் சுத்தமான நாடுகளில் கூட டெங்கு ஆட்டம் காண்பிக்கிறது.
கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தில்லி ஆகிய மாநிலங்களிலும் டெங்கு பட்டையை கிளப்புகிறது.

எனவே சும்மா அரசையும் மருத்துவர்களையும் குறை கூறிகொண்டிருக்காமல் உங்கள் வீட்டில் இருந்து கொசு தடுப்பு நடவடிக்கைகளை தொடங்குங்கள்.

டெங்குவை தடுக்க கொசுவை ஒழிப்பது தவிர வேறெந்த முயற்சியும் பயன் தராது.

டெங்கு வந்து விட்டால், முறையாக மருத்துவ ஆலோசனையை சரியான நேரத்தில் பெற்று தீவிர நோய் பாதிப்பிற்கு உள்ளாகாமல் தடுத்து கொள்ளுங்கள்.
*_டாக்டர். அ. அருண்குமார், MD(Pediatrics),_*
*_குழந்தை நல சிறப்பு மருத்துவர்,_*
*_ஈரோடு._*

சனி, 21 அக்டோபர், 2017

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூா். நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள திருமதி பாரதி அவர்கள்



அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூா்.
நிர்வாக  அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள திருமதி பாரதி அவர்கள்
 பொறுப்பேற்ற இரண்டு தினங்களிலிலேயே சிறப்பு தரிசன நுழைவுக்கட்டணத்தில் நடந்த தில்லு முல்லுகளை சரி செய்து திருக்கோவிலுக்கு சேர வேண்டிய வருமான தொகையினை பன்மடங்கு பெருக்கியுள்ளார். தினமும் காலை திருக்கோவில் முழுவதும் Surprise Visit செய்வதால் பணியாளர்கள் துடிப்புடன் வேலை செய்கின்றனர். கந்தசஷ்டி விழாவினையொட்டி திருக்கோவில் முழுவதும் சுகாதார வசதிகளும் திறம்பட செய்யப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு  வருவதால் ஹோட்டல் உரிமையாளர்கள் கட்டி வந்த கல்லா கனிசமாக குறைந்ததை அடுத்து நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு வராமலேயே கிழ்மட்ட அதிகாரிகள் அன்னதான முகாம்களை கோவில் வளாகத்திற்கு வெளியே கோவில்  பஸ்டான்ணடிற்கு  அப்பால் ஒதுக்கியுள்ள விபரம் அறிந்த நிாவாக அதிகாரி ஊழியர்களை கடுமையாக சாடி வழக்கமாக இயங்கி வந்த அதே இடத்திலேயே தொடர்ந்து அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து  பந்தலும் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவிலுக்கு சொந்தமான அறைகளை குலுக்கல் முறையில் Transparency  யாக தேர்வு செய்து ஏழை பணக்காரர் மற்றும் விஐபிக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பக்கதர்களுக்கு  வாடகைக்கு  கொடுத்துள்ளார். மொத்தத்ததில் தற்போது பொருப்பேற்றுள்ள நிர்வாக அதிகாரியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.  அவருக்கு நமது உளம் கனிந்த பாராட்டுகள்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

நிலவேம்பு கசாயமும், நிஜங்களும்

நிலவேம்பு கசாயமும், நிஜங்களும்

மற்ற காய்ச்சல்களுக்கும், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.

தமிழகம் மட்டும் அல்ல, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களையும் டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது.

மற்ற காய்ச்சல்களைப்போல டெங்கு காய்ச்சலை ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது.

இந்தநிலையில் தான் ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.

இதை கட்டுப்படுத்த தவறும்போது மரணத்தை சந்திக்க வேண்டியதாகி விடுகிறது.

நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

இதனால்தானோ அல்லது வேறு காரணமோ, இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தீயாக பரவுவதால், இப்போது நிலவேம்பு கசாயம் என்றால் மக்கள் ஒருவித அச்சத்துடனையே பார்க்கிறார்கள்.

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரும், நிலவேம்பு குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர் சுபாஷ்சந்திரன் கூறியதாவது:-

நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள்.

இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.

தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும்.

எய்ட்ஸ் நோய்க்கும் இதை மருந்தாக பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது.

அதாவது நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும்.

அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.

இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

காய்ச்சல் இருப்பவர்கள் காலை மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க வேண்டும். காய்ச்சல் நிற்கும் வரை குடிக்கலாம்.

சர்க்கரை நோயாளி வாரம் 3 முறை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

நிலவேம்பு கசாயம் என்பது 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது.

மலட்டு தன்மைக்கும் இந்த கசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

நெல்லை சித்த மருத்துவ கல்லூரி தொடங்கி 50 வருடங்களுக்கு மேலாகிறது. 50 வருடங்களாக இங்கு வருகிற நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. யாருக்கும் எந்த பாதிப்பும் வந்தது இல்லை.

சித்தர்கள் எழுதிய நூல்களில் உள்ள மருந்துகளை பாரம்பரியமிக்க சித்த மருத்துவர்களை கொண்டு ஆராய்ச்சி செய்து அதன்மூலம்தான் மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவத்தால் எந்த வித பக்க விளைவோ, பாதிப்போ ஒரு காலமும் ஏற்படாது. தற்போது பெரும்பாலானவர்கள் சித்த மருத்துவத்தை நாடி வருகிறார்கள்.

நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத்தன்மையை முறிக்கும். இதைபோன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும்.

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் நேராது.

இவ்வாறு டாக்டர் சுபாஷ் சந்திரன் கூறினார்.

நிலவேம்பு கசாயம் குறித்து, சென்னை அரும்பாக் கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ மனையில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவு சிறப்பு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் பி.மல்லிகா கூறியதாவது:-

நிலவேம்பு சூரண குடிநீரில் உள்ள மூலப்பொருட்களை கிண்டியில் உள்ள ‘கிங்’ இன்ஸ்டிடியூட்’ நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரசை இது உடனடியாக அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் உணவு சாப்பிட்டபின், சித்த மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். கருச்சிதைவோ, குழந்தைக்கு பாதிப்போ ஏற்படாது.
சர்க்கரை நோய், தைராய்டு போன்றவற்றுக்கு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் ½ மணி நேரம் கழித்து குடிக்கலாம். ஜலதோஷம், இருமல், சைனஸ் ஆகியவற்றுக்கும் நிலவேம்பு குடிநீர் நிவாரணம் அளிக்க வல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி...மாலைமலா்

விஜய் மெர்சல் படத்தில் சில வசனங்களில் இப்போ என்ன தவறுசெய்துவிட்டார்?


விஜய் மெர்சல் படத்தில் சில வசனங்களில் இப்போ என்ன தவறுசெய்துவிட்டார்? இது சார்ந்து வந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவிரும்பவில்லை. ஆனால்  முக்கியமான 2 விவரங்கள் விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

1)கோவில்கள் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனைகள் கட்டலாம். இந்த வசனம் ?

  அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தான் இந்தியாவில் இருக்கும் மிக மிக உணர்வு பூர்வமான பிரச்சனை. அதை தான் ஜேசப் விஜய், அட்லீ கிருஸ்தவர்கள் சேர்ந்து மறைமுகமாக கிருஸ்தவ மிசினரிகளின் குரலாக ஒலிக்கிறார்கள் என்ற குற்றாசாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. விஜய்க்கு இந்து இளைஞர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்  , எனவே அப்படி செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.

இதை ஏன் இந்துகள் மிக வேகமாக எதிர்க்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்வேன்.

   முகாலாயர் காலத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய 50,000 இந்து கோவில்கள் இடிக்கபட்டு அந்த இடங்களில் இருந்த செல்வங்கள் கொள்ளை அடிக்கபட்டு மசூதிகள் வந்து உள்ளன என்பது வரலாற்று உண்மை. இதை அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஏற்பர். (உடனே இஸ்லாமியர் மீது வெறுப்பை உருவாக்கி கொள்ளவேண்டாம் இது வரலாறு. இதில் இருந்து பாடம் தான் கற்றுகொள்ள வேண்டும். அது தான் நமக்கும் சமூகத்திற்கும் நல்லது.)

இப்போ இந்த அனைத்து கோவில்களையும் இந்துகள் கேட்கவில்லை. இவர்கள் கேட்பது மூன்றே மூன்று கோவில்கள். அது

1.அயோத்தி ராமர் கோவில்
2.காசி விஷ்வநாத் கோவில்
3.மதுரா கிருஷ்ணன் கோவில்.

அது  ஏன் என்றால் இஸ்லாமியருக்கு புனித நகரமாக மெக்கா மதினா போல் , கிருஷ்தவர்களுக்கு ஜெருசலம் போல் , யூதர்களுக்கு பாலஸ்தீனம்,காசா போல்  - இந்துகளுக்கு இந்தியாவில் சில புனிதமான இடங்கள் உண்டு. சிவனடியார்களுக்கு திபேதில் உள்ள மானோசரவோர் தான் புனித பூமி. ஆனால் அதை பெற்று தருவதில் நேரு அக்கரை காட்டவில்லை. அத்துடன் திபத் இன்று சீனா ஆக்கரமிப்பில் உள்ளது. அடுத்து சீதா பிறந்த இடமும் இங்கே இல்லை, அயோத்தியில் ராமர் கோவில் இடிக்கப்பட்டுவிட்டது , காசியில் இருக்க இடிக்கபட்ட விஷ்வநாதர் கோவில் கட்டபடவில்லை , மதுராவில் கிருஷ்ணன் கோவில் இல்லை. இப்படி இடிக்கபட்ட முக்கியமான புனிதஸ்தளங்களை, அதில் அவர்களின் கோவில்களை மீண்டும் இந்துகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை.

நீங்கள் இதன் வலியை உணரவேண்டும். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் இடிக்கபடுவதாக நினைத்து கொள்ளுங்கள் -அது எந்த அளவு வலியை இந்துகளுக்கு தரும்? அதை முதலில் உணரவேண்டும்.

எனவே 50,000 கோவில்களை மீண்டும் கேட்கவில்லை - ஆனால் 3 கோவில்கள் இந்துகளுக்கு மீண்டும் வேண்டும் என்று கேட்பதில் உண்மையில் நியாயம் இருக்கிறது. இஸ்லாமியருக்கு தனி தேசமாக ஜின்னா கேட்க பாக்கிஸ்தான் பிரித்து கொடுத்துவிட்டு கோவிலும் கிடையாது என்றால் என்ன சர? {20% மக்களுக்கு இந்துக்ககளின் 24% நிலப்பரப்பை வாங்கிகொண்டார் ஜின்னா.. அத்துடன் இஸ்லாமியர் இங்கேயே இருப்பதில் இந்துகள் எதிர்க்கவும் இல்லை. ஆனால்  பெரும்பாலான இந்துகள் பக்கிஸ்தானில் இருந்து  இந்தியாவிற்கு வந்த வரலாறு எல்லாம் மிக கொடுரமானது. இவ்வளவு ஏமாற்றம் கண்ட மக்கள் உணர்வை புரிந்து மதிக்க வேண்டும்.}

{என் வீட்டு நிலம் என்றால் இன்னொரு மததினர் வழிபாட்டுக்கு கேட்க கொடுப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் இது அப்படியான விவகாரம் இல்லை - இந்து இந்துகளின் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு மனசாட்சியாக தான் பேசவேண்டும். இங்கே நான் நல்லவன் என்று காட்டிகொள்ள பேசுவது கூடாது.}

இவ்வளவு முக்கியமான விவகாரத்தை கொச்சைபடுத்தும் விதமாக

"கோவில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனைகள் கட்டுங்கள்" என்று வசனம் வருவது என்ன ! அதை ஒரு கிருஸ்தவர் இயக்கத்தில், நடிக்கும் இன்னொரு கிருஸ்தவர் பேசுவது என்றால் மக்களுக்கு வரும் கோபம் தடுக்க முடியாது.

இதை தவிர்திருக்கலாம் விஜய் அவர்கள்.

இன்னொரு முக்கியமான விசயம் , தமிழகத்தில் அதிகம் வருமானம் தரும் அனைத்து கோவில்களின் வருமானமும் அரசுக்கு தான் செல்கிறது. எந்த மசூதியின் வருமானமும், சர்சுகளின் வருமானமும் அரசுக்கு செல்வது இல்லை. அத்துடன் இந்து கோவில்களுக்கு சொந்தமான பலலட்சம் கோடி சொத்துகள் மூலம் வரும் வருமானமும் அரசுக்கு தான் செல்கிறது... எந்த கிருஸ்தவ ஆலயத்தின் வருமானம் 1 ருபாய் கூட அரசுக்கு செல்வது இல்லை.

அப்படி வரும் வருமானம்  வச்சு அரசின் மருத்துவமனைகள் செலவினை ஒப்பிடவும்.. உண்மை புரியும்.. யார் காசு எங்கே செல்கிறது என்று.. எனவே இந்த பேச்சு மிக மிக கண்டிக்கபட வேண்டிய வசனம்.
------------------------------------------------------------------------------------------------------------

அதுக்கு எதற்கு சார் விஜய் அவர்களின் மதத்தினை இழுக்க வேண்டும்?

கீழ் வரும் விவரங்களை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் :

2015 FCRA (Foreign Contribution REgulation Act) வெளியிட்ட தகவல் என்ன கூறுவது என்னவென்றால்

-1994 முதல் 2012ஆம் ஆண்டுக்கு மட்டும் 1,16,073 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வெளி நாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் NGOகளுக்கு வந்துள்ளது. மீண்டும் கூறுகிறேன் தொகை 1,16,073 கோடி. (1,16,073,00,00,000 ரூபாய்)

-அந்த தொகையில் பெரும் பங்கு மதம் மாற்றும் கிருஸ்தவ மிசினரிகளுக்கு தான் வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. ஆண்டுக்கு சுமார் 10,000கோடி ரூபாய் மதம் மாற்ற இந்தியாவில் செலவுசெய்யும் கிருஸ்தவ மிசினரிகள் இந்த செயல் என்ன சரி???

-41,844 NGO களில் 55% மேல் முறையாக கணக்கு காட்டவில்லை. இந்த முறையாக கணக்கு காட்டாத அனைத்து அமைப்புகளின் நிதி ஆதாரம் வரும் வழிகளை மோடி ஆட்சிக்குவந்த உடன் முடக்கிவிட்டார். இன்று இந்த மிசினரிகள் பெரிய அளவு கணக்குகாட்டவேண்டி இருப்பது அவர்கள் மதம் மாற்றும் வேலைக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.

மதம் மாற்றுவதற்கு  தலைக்கு 3லட்சம் தர தயார் , மதம் மாற்றி பெயரை மாற்றா தேவையான Affidavit of Religion Conversion அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க இங்கேயே ஆயிரம் கிருஸ்தவ இயக்கங்கள்  வேலை செய்கின்றன. அவர்கள் கைகள் மிக பெரிய அளவில் கட்டபட்டுவிட்டன.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆலயங்களும் வரிந்து கட்டிகொண்டு மோடிக்கு எதிராக பிரச்சனைகளை அடுத்து அடுத்து தூண்டிவிட , அதற்கு பக்கா ஆதரவு சென்னையில் உள்ள கிருஸ்தவ கல்லூரிகளில் மாணவர்களை நாட்டை காப்பாற்ற என்ற மறைமுக போர்வையில் தூண்டிவிட்டுபோராட்டங்களை அடுத்து தூண்டிவிட்டு கொண்டே இருக்கும் இந்த சூழலில்.....

அப்படி வரும் 10,000கோடியை மருத்துவமனைகளாக கட்டினால் மாவட்டத்திற்கு 3 Multi Speciallity Hospital கட்டாலாமே????? என்று ஏன் விஜய் பேசக்கூடாது???? ஏன் அப்படி வசனத்தை அட்லீ எழுத கூடாது???

அதை விட்டுவிட்டு இந்துகளின் பல ஆண்டுகள் மன காயத்தில் ஏன் இந்த இயக்குனர் குழப்ப வேண்டும் என்று இந்துகள் கோவம் கொள்வதில் நியாயம் இருக்கா இல்லையா என்று நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள்.

நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர். அவர் கிருஸ்தவராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அவருக்கு பிடித்த மதத்தில் அவர் இருக்கிறார்.

நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர், UK குடியுரிமை பெற்ற கிருஸ்தவர் என்று நினைக்கிறேன். அவர் மகன் Jason ஞானஸ்தானம் எடுத்தது ஐரோப்பிய தேசத்தில். இவர் கிருஸ்தவர் இல்லை கூறுவது சும்மா அரசியல். இந்த படத்தை எடுத்த இயக்குனர் அட்லீ தனது எல்லா படத்திலும் கிருஸ்தவம் தூக்கி பிடிக்கும் காட்சிகளை வைப்பதாக கூறுவதிலும் உண்மை உண்டு.

இப்படி கூட்டணியில் கோவில்கள் கட்டுவதை வைத்து பேசுவது மாற்று மத உள்விவகாரத்தில் தலையிடுவது என்ன பிரச்சனை உருவாக்கும் வேலை தானே???

ஒருவேளை விஜய் அவர்களுக்கு தெரியாமல் அட்லீ ஏமாற்றி எழுதி இருக்கலாம், இல்லை  சத்தியராஜ் - சீமான் என்ற செபாஸ்டீன் கூட்டணி  வேலையாக இருக்கலாம். எது எப்படியோ கிருஸ்தவர்கள் - இந்து மக்களின் மத உள் விவகாரத்தில் குழப்புவது ஏற்புடையது அல்ல. இதனால் தான் விஜய் அவர்களின் மதம் இழுக்கபடுகிறது.

என்றாவது இந்துவாக வாழும் ரஜினி இப்படி மாற்று மத விவகாரங்களை காயபடுத்தியது உண்டா???? எனவே பெரிய நடிகர்கள் கவனமாக வசனங்கள் தேர்வு செய்யவேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

2)இந்தியா - சிங்கப்பூர் ஒப்பீடு:

நான் அடிக்கடி கூறுவது இதுவே - இந்தியாவுடன் சிங்கப்பூரை ஒப்பிடுவது ஒரு யானையை எலிகுட்டியுடன் ஒப்பிடுவதற்கு சமம்.

சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 56லட்சம். ஏறக்குறைய 58லட்சம்.

நம்ம சென்னை என்ற நகரத்தின் மக்கள் தொகை மட்டும் 88லட்சத்துக்கும் மேல். 2011 கணக்கெடுப்பின் புள்ளிவிவரம் பார்த்தால்கூட சென்னை மக்கள்தொகை 70லட்சம்  மேல். வேலை தேட போய் செட்டில் ஆனவர்களை எல்லாம் சேர்த்தால் அது சுமார் 1.2கோடியை தொடும்.

சென்னையில் பாதி கூட கிடையாது சிங்கப்பூர்...

ஆக ஒரு திட்டம் செயல்படுத்த என்ன கஷ்டம் வந்துவிடும்???

பாடத்திட்டத்தில் ஒரு சின்ன தவறு என்றால் மொத்த புத்தகத்தையும் மாற்றி அச்சிட்டு மீண்டும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் கொடுக்க வேண்டும் என்றால்  சுமார் ஒரு வாரம் போதும். ஆனால் இங்கே இந்தியாவில்???? சுமார் 100கோடி மக்கள் வாழும் தேசம்.. இந்தியாவின் Constitution முழுமையாக படித்து முடிக்க உங்களுக்கு 2 வருடம் ஆகும். அந்த அளவு அனைத்து தரப்பு மக்களின் உணர்வை பாதிக்காமல் உருவாக்கபட்டுள்ளது.

ரோடு போடுவது முதல் வரி நிர்வாகம் வரை எல்லாமே மிக குட்டி நாடு..

சுதந்திரம் சிங்கப்பூர் வாங்கிய போது அங்கே படித்த மக்கள் சதவீதம் 68%.. ஆனால் இந்தியாவெறும் 1947ல் 7% தான். அதுவும் ஒரு பெரிய பிரச்சனை.

பொது சிவில் சட்டம் கொண்டுவர கூடாது என்று கூப்பாடு போடும் இந்த கம்யூனிஸ்ட் - சீனாவில் ரஷ்யாவில்  சட்டம் அனைவருக்கும் சமம் என்று இருக்கு என்று பேசி திரிவான் அதே வாயால். இந்தியா சிதற வேண்டும் என்று வெளிபடையாக கம்யூனிஸ்ட் பேசுவான், அது போல எவனாது சிங்கப்பூரில்  பேச முடியுமா?

{அங்கே தூய்மை இந்தியா திட்டம் என்று கூறினால் அனைவரும் அதற்கு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்று மீடியாக்கள் வழி நடத்தும். எனவே மக்களுக்கும் அரசுக்கும் ஒரு நல்ல தொடர்பை மீடியாக்கள் கொடுக்கும். ஆனால் இங்கே ???? அரசுக்கும் மக்களுக்கு எப்படி சண்டை இழுத்துவிடலாம், எப்படி மக்களை அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்காமல் செய்யலாம் என்று தானே கம்யுனிஸ்ட் செய்திதாள்களான விகடன் முதல் தி இந்து வரை வேலை செய்கிறான். எவனாது மக்களுக்கு அரசு கூறும் நல்லவிசயத்தை கொண்டு சேர்த்தான்?}

இந்த படத்தில் பேசியது போல் அங்கே பேசினால் நீங்கள் தூக்கில் தான் தொங்கனும். ஏன் என்றால் அங்கே மீடியாக்கள் சுதந்திரமும் கிடையாது, பேச்சுரிமையும் கிடையாது. பேச்சுரிமையில் சிங்கப்பூர் 153வது இடம். அது தெரியுமோ??? தாய் நாட்டை அவமானம் செய்யும் விதமாக பேசினால் அங்கே அவன் காலி.

இந்த The Hindu, விகடன், NDTV இது போல சீனாவுக்கு  ஆதரவாக செயல்படும் ஊடகங்கள் போல்  சிங்கப்பூரில்  கிடையாது.. இங்கே தி இந்து பாருங்க வெக்கமே இல்லாமல் சீனாவுக்கு சலாம் போடுவார்கள்.

அதில் GST 27% என்று பேசியது வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு. இந்த பேச்சு தான் எனக்கு விஜய் நோக்கத்தின் மீது சந்தேகம் வரகாரணம் ஆகிறது. இது  வேண்டும் என்றே பரப்பபட்ட பொய், அதை இவ்வளவு பிரபலமானவர் ஏன் பேசவேண்டும்??? என்ன காரணம்? இது முழுக்க முழுக்க நயவஞ்சகமான வசனம்.

வரி ஏய்பு செய்வது , ஹவால பணம் வெள்ளை ஆக்கும் வேலை எல்லாமே சினிமா துறை தான் செய்கிறது. அப்படி சிங்கப்பூரில் இல்லையே!! அதற்கும் தூக்கில் போடுங்கள் என்றால்  இங்கே  90% நடிகை நடிகர்கள் தூக்கில் தான் தொங்கவேண்டும்.. சரி தானே?? எனவே ஒப்பீட்டு அளவிலும் சரி , மக்கள் சுதந்திரம் விசயத்திலும் சரி இந்தியா சிங்கப்பூர் என்று ஒப்பிடுவது மிக பெரிய முட்டாள்தனம்.

------------------------------------------------------------------------------------------------------------------

இறுதியாக :

விஜய் வைத்துள்ள கார்கள் , அவர் வாங்கும் சம்பளம் , அவர் குடும்பத்தின் UK குடியுரிமை , மதம் என்று  எல்லாம் இன்று விவாதம் ஆக காரணம் முழுக்க இந்த திரைகதை அல்ல அவர் பேசிய அரசியல் வசனங்கள்& திரைகதையை உருவாக்கிய கிருஸ்தவ கூட்டணியும் தான் தவிர வேறு காரணம் அல்ல.

யாரை வேண்டுமானாலும் நம்புங்கள் ஆனால் மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை ஒரு துளிகூட நம்பிவிட வேண்டாம். அதே போல் இந்த மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை கண்டிக்காமல்  , புத்திசாலிதனமாக நல்லவன் போல் இந்துகளின் மத உள்விவகாரத்தை பேசி திரியும் சீமான் , அட்லீ போன்றவர்களை நம்பிவிடவேண்டாம். ஏன் என்றால் இவர்கள் விசபாம்புகள்.

விஜய் அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அரசின் திட்டங்களை தவறு என்றால் எதிர்த்து குரல் கொடுங்கள் - உங்களுக்கு உரிமை உண்டு. அதற்கு முன் தகவல் சரியா என்று உறுதி செய்து கொள்ளவும். அதைவிட முக்கியம் இந்துகளின் மத உள்விவகாரத்தில் வரவேண்டாம் என்று  கேட்டுகொள்வேன்.-மாரிதாஸ்.

செய்தி தாளை பயன்படுத்தி வடை, பஜ்ஜியில் உள்ள எண்ணெயை; வெளியேற்றுகிறீர்களா? எச்சரிக்கை!!


செய்தி தாளை பயன்படுத்தி வடை, பஜ்ஜியில் உள்ள எண்ணெயை; வெளியேற்றுகிறீர்களா? எச்சரிக்கை!!

உடல் நலம் காப்போம்!

*செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே..!*

ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.அதில் ஒன்று தான் செய்தித்தாளில் கை துடைப்பது.

சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள்.

அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. எப்படி என்கிறீர்களா?

செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது.அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை.

பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து.

காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும்.

இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும்.

ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும்.

கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு.
காரீயம் வேறு, இவை வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள்.

எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும் தான்.

அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது.

 இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவு உடலுக்குள் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான்.

*அதனால் தான் மேகி நூடுல்ஸ்சுக்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்து தடை செய்யப்பட்டது என்பதை உணர்ந்து செயல்படுவோம்,*

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 20/10/17 !

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 20/10/17 !

தமிழ் திரைப்படங்களுக்கு எதிராக கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமையை, கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 10 பேரின் காவல் நவ.2 ஆம் தேதி வரை நீட்டிப்பு.

நாகை : பொறையார் போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து ஊழியர்கள் 9 பேர் பலி விபத்து தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது : மாவட்ட ஆட்சியர்.

தமிழகம் முழுவதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

மெர்சல் படத்திலிருந்து உண்மைக்கு புறம்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தார் கொள்முதலில் நடந்த ரூ.800 கோடி ஊழல் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை தனியாக விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் - ஈவிகேஎஸ்.இளங்கோவன்.

நமக்கு நாமே பயணம் போல நவம்பர் முதல் வாரத்தில் எழுச்சி பயணம் தொடங்க திட்டம் : முக.ஸ்டாலின்.

மாசுபாடு காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகள் : 5வது இடத்தில் இந்தியா.

மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ராஜினாமா செய்தார்.

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள GST தொடர்பான வசனங்களை நீக்க வேண்டிய அவசியமில்லை.ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்
- இயக்குனர் பா.ரஞ்சித்.

அதிக மக்களுக்கு பயன்தரும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமைந்தாலும் வரவேற்கிறேன் : இல.கணேசன்.

அம்பேத்கர் என்ற சொல்லை மறைக்கும் முயற்சியில் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுகின்றன தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு மாநாட்டில் இட ஒதுக்கீடு பிரச்சனை பற்றி பேச உள்ளோம் : இயக்குனர் பா.இரஞ்சித்.

மத்திய அரசை விமர்சித்தால் அரசு மீது நம்பிக்கை உள்ளோர் தேச பக்தர்கள் மெர்சல் ஆகி விடுவார்கள் : இல.கணேசன்.

டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது : மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் :திமுக உட்கட்சி தேர்தல் , தற்போதைய அரசியல் சூழல், வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி ஆலோசனை நடந்தது.

உத்தரகாண்ட் : கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திரமோடி வழிபாடு செய்தார்.

விஜயின் மெர்சல் திரைப்படத்தை பாஜகவினர் எதிர்க்க கூடாது : திருமாவளவன்.

1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு டிச. முதல் வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மரியாதை நிமித்தமாகவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்தேன்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினேன் - திருநாவுக்கரசர்.

தமிழக காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக எந்த கடிதமும் அளிக்கவில்லை - திருநாவுக்கரசர்.

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய், இந்தியாவில் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம், விஜய்ன் மோடி வெறுப்பே மெர்சல் - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன், செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேச்சு,கருத்து சுதந்திரம் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது - ஈவிகேஎஸ் இளங்கோவன்.

மத்திய அரசை பாராட்டி மட்டுமே சினிமா எடுக்க முடியுமா ? மெர்சல் படம் குறித்து தமிழிசை கருத்துக்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு.

சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் தனது ராஜிநாமா கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பினார்.

பாசனத்துக்காக ஆழியாறு அணையில் இருந்து 25 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.

பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி : தமிழக முதலமைச்சர்.

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.டெங்குவை ஒழிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார்.

பொறையார் பணிமனை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கப்படும் : தமிழக முதலமைச்சர்.

பொறையார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1.50 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி : தமிழக முதலமைச்சர்.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.

பொறையார் பணிமனை விபத்தில் 8 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது : முக.ஸ்டாலின்.

காஞ்சிபுரம் கொளப்பாக்கத்தில் செப்டிக் டேங்கில் கழிவு நீரை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அனைத்து துறை முதன்மை செயலர்கள் ஆலோசனை நடைபெற்றது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது : வானிலை ஆய்வு மையம்.

வியாழன், 19 அக்டோபர், 2017

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….


வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….

இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி…. இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…

10/18/2017

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, *“லைவ் ஷேரிங்”* எனப்படும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் எங்கு இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதை நாம் படத்துடன் தெரிவிக்க முடியும், அத்துடன் நமக்கு வேண்டியவர்களுடன் சாட்டிங்கிலும் ஈடுபடமுடியும்.

 உலகம் முழுவதும் 20 கோடி வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான “ஷேரிங்” வசதியைப் போல் இல்லாமல், அதாவது எந்த இடத்தில் நிலையாக இருக்கிறோமோ அதைக் குறிக்காமல்,  நாம் எந்த இடத்தில் சென்று இருக்கிறோமோ(“லைவ் ஷேரிங்” ) அந்த இடத்தை நமக்கு விருப்பப்பட்டவர்களுக்கு தெரிவிக்க முடியும். வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் பாதுகாப்புக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவர்களின் தங்களின் நண்பர்கள்,  குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா, நாம் செல்லும் இடத்துக்கு பாதுகாப்பாக அடைந்துவிட்டோமா என்பதை தெரிவிக்க இந்த வசதி பயன்படும்.

இதற்கு முன் உபர், ஸ்நாப் மேப் ஆகிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருந்தன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்தார்போல் இப்போது வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் மேலாளர் ஜூகைர் கான் கூறுகையில், “ வாட்ஸ்அப் லைவ்ஷேரிங் வசதிக்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக பணியாற்றினோம். அதன் பயனாக இப்போது நாம் ெசல்லும் இடங்களை நமக்குவிருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.


*எப்படி இந்த வசதியைப் பெறுவது?*

வாட்ஸ் அப் பயன்படுத்திவருபவர்கள் கூகுங் ப்ளே ஸ்டோரில் சென்று, “அப்டேட்” செய்ய வேண்டும். அப்டேட் முடிந்தவுடன், நம்முடைய கான்டாக்ட் தளத்தில் சென்று யாருக்கு நம்முடைய இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த இடத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டு, லைவ் சாட்டிங்கிலும் ஈடுபட முடியும். நாம் செல்லும் இடத்தை தனிப்பட்ட ஒரு நபருக்காகவோ அல்லது ஒரு குரூப்புக்கோ பகிர்ந்து கொள்ள முடியும்.

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 19/10/17 !

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 19/10/17 !

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல்களை பகிர வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி.

நிலவேம்பு கசாயம் குறித்து நடிகர் கமலஹாசன் கூறுவது தவறு.உலகின் பல்வேறு நாடுகளில் நிலவேம்பு கசாயம் காய்ச்சலுக்கு கொடுக்கப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

நிலவேம்பு கசாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவம், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

அனைத்து ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம் இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.

நிலவேம்பு கசாயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து வரும் 24-ம் தேதி அறிவிக்கப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்.

அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி , டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லை, 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெ இடத்தில் இருந்து வெற்றி பெறுவேன்.
டெங்குவை விசயத்தில் சுகாதாரத்துறை செயலற்ற தன்மையில் உள்ளது - ஜெ தீபா.

எடப்பாடி அணியில் இணைந்து பணியாற்றுவேன் என நான் சொன்னதில்லை. அதே சமயம்  தொண்டர்களும்,மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி செயல்படுவேன் - ஜெ தீபா.

டெங்குவை ஒழிக்க போராடும் நிலையில் நிலவேம்பு குறித்து ஆராயத்தேவையில்லை.
வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார் - இல.கணேசன்.

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் நேற்று காற்றில் 300 மைக்ரோகிராம் நுண்துகள்கள் அதிகரிப்பு - அமெரிக்க துணை தூதகரம்.

தஞ்சை ராஜராஜசோழனின் 1032வது சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது.29 மற்றும் 30ஆம் தேதிகளில் சதயவிழா நடைபெறவுள்ளது.

எந்த கசாயத்தையும் அளவாக குடிக்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு : ஜிகே.வாசன்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அநேகமாக மதுரையில் அமையவே வாய்ப்புள்ளது : இல.கணேசன்.

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி கொலை : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊதிய உயர்வு தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையருடன், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.

13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் - சங்க சிறப்பு செயலாளர் சேகர்.

மகாராஷ்டிராவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் 3ம் நாளாக தொடர்கிறது.

கந்தகார் ராணுவ முகாமில் தலிபான் தாக்குதல் 43 ராணுவ வீரர்கள் பலி.

ராணுவத்தினரையே எனது குடும்பமாகக் கருதி தீபாவளியை கொண்டாடுகிறேன்: பிரதமர் மோடி.

ஜம்மு - காஷ்மீர் : எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி.

திண்டுக்கல் நாயக்கனூர் பெரியகுளம் பகுதியில் 35 வயது மதிக்கதக்க பெண் எரிந்த நிலையில் சடலம் மீட்பு கொலையா என எரியோடு போலீசார் விசாரணை.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் : மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

மேற்கு மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தீபாவளியன்று காற்று மாசு அதிகம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

பெசண்ட் நகரில் மாசு குறைவு நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 80 டெசிபல் ஒலிமாசு பெசண்ட் நகரில் குறைந்தபட்சமாக 68 டெசிபல் ஒலிமாசு பதிவு - மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 20/10/17 !

தமிழ் திரைப்படங்களுக்கு எதிராக கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமையை, கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 10 பேரின் காவல் நவ.2 ஆம் தேதி வரை நீட்டிப்பு.

நாகை : பொறையார் போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து ஊழியர்கள் 9 பேர் பலி விபத்து தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது : மாவட்ட ஆட்சியர்.

தமிழகம் முழுவதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

மெர்சல் படத்திலிருந்து உண்மைக்கு புறம்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தார் கொள்முதலில் நடந்த ரூ.800 கோடி ஊழல் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை தனியாக விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் - ஈவிகேஎஸ்.இளங்கோவன்.

நமக்கு நாமே பயணம் போல நவம்பர் முதல் வாரத்தில் எழுச்சி பயணம் தொடங்க திட்டம் : முக.ஸ்டாலின்.

மாசுபாடு காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகள் : 5வது இடத்தில் இந்தியா.

மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ராஜினாமா செய்தார்.

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள GST தொடர்பான வசனங்களை நீக்க வேண்டிய அவசியமில்லை.ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்
- இயக்குனர் பா.ரஞ்சித்.

அதிக மக்களுக்கு பயன்தரும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமைந்தாலும் வரவேற்கிறேன் : இல.கணேசன்.

அம்பேத்கர் என்ற சொல்லை மறைக்கும் முயற்சியில் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுகின்றன தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு மாநாட்டில் இட ஒதுக்கீடு பிரச்சனை பற்றி பேச உள்ளோம் : இயக்குனர் பா.இரஞ்சித்.

மத்திய அரசை விமர்சித்தால் அரசு மீது நம்பிக்கை உள்ளோர் தேச பக்தர்கள் மெர்சல் ஆகி விடுவார்கள் : இல.கணேசன்.

டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது : மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் :திமுக உட்கட்சி தேர்தல் , தற்போதைய அரசியல் சூழல், வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி ஆலோசனை நடந்தது.

உத்தரகாண்ட் : கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திரமோடி வழிபாடு செய்தார்.

விஜயின் மெர்சல் திரைப்படத்தை பாஜகவினர் எதிர்க்க கூடாது : திருமாவளவன்.

1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு டிச. முதல் வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மரியாதை நிமித்தமாகவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்தேன்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினேன் - திருநாவுக்கரசர்.

தமிழக காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக எந்த கடிதமும் அளிக்கவில்லை - திருநாவுக்கரசர்.

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய், இந்தியாவில் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம், விஜய்ன் மோடி வெறுப்பே மெர்சல் - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன், செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேச்சு,கருத்து சுதந்திரம் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது - ஈவிகேஎஸ் இளங்கோவன்.

மத்திய அரசை பாராட்டி மட்டுமே சினிமா எடுக்க முடியுமா ? மெர்சல் படம் குறித்து தமிழிசை கருத்துக்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு.

சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் தனது ராஜிநாமா கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பினார்.

பாசனத்துக்காக ஆழியாறு அணையில் இருந்து 25 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.

பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி : தமிழக முதலமைச்சர்.

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.டெங்குவை ஒழிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார்.

பொறையார் பணிமனை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கப்படும் : தமிழக முதலமைச்சர்.

பொறையார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1.50 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி : தமிழக முதலமைச்சர்.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.

பொறையார் பணிமனை விபத்தில் 8 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது : முக.ஸ்டாலின்.

காஞ்சிபுரம் கொளப்பாக்கத்தில் செப்டிக் டேங்கில் கழிவு நீரை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அனைத்து துறை முதன்மை செயலர்கள் ஆலோசனை நடைபெற்றது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது : வானிலை ஆய்வு மையம்.