செவ்வாய், 17 அக்டோபர், 2017

தமிழகத்தில் மேலும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது



தமிழகத்தில் மேலும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது


*இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.*

இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள் ஆகும்.

66,590 கிமீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக இருக்கின்றன. இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 7 (NH7) உள்ளது.


*உபி முதல் குமரி வரை*

இதன் நீளம் 2369 கிலோ மீட்டர் ஆகும். இது இந்தியாவின் வடக்கே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் தொடங்கி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைகிறது.

*40% போக்குவரத்து*

மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை நாடு முழுவதும் 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.

*தமிழகத்தில்*
*புதிய நெடுஞ்சாலைகள்*

இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் மேலும் மூன்று புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அறிவித்துள்ளது.

*அதன்படி*

மேச்சேரி, மேட்டூர், சித்தர்பவானி வழியாக ஈரோடு சாலையில் இணையும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

*இணைப்பு சாலைகள்*

இதேபோல் அயோத்தியாபட்டினம், ஊத்தங்கரை, திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி வரை உள்ள சாலை 2வது தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

*தஞ்சை, குன்னம் வழியாக ஆத்தூர் நெடுஞ்சாலையுடன் இணையும் சாலை 3வது தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக