திங்கள், 30 அக்டோபர், 2017

விடிய விடிய கொட்டும் கனமழை; 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; தத்தளிக்கும் சென்னை..



விடிய விடிய கொட்டும் கனமழை; 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; தத்தளிக்கும் சென்னை..

*கனமழை காரணமாக 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*

*இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*

*இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,விழுப்புரம், நாகை, புதுவை, கடலூர், காரைக்கால், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடபட்டுள்ளது*

*#விடிய விடிய கொட்டும் கனமழை*

*தமிழகத்தில் நேற்று தீவிரமடைந்த பருவமழை இடைவிடாது விடிய விடிய கொட்டி வருகிறது.*

*சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.*

*திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல் கடலூர், கும்பகோணம், திருவிடைமருதூரிலும் விடிய விடிய பலத்த மழை கொட்டி வருகிறது.*

*#சென்னை தத்தளிப்பு*

*சென்னையில் அடையாறு, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, பல்லவாரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகின்றன.*

*இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் குளங்களாக மாறியுள்ளன.*

*சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிக்கி வாகனங்கள், பழுதாகி நிற்பதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.*

*மேலும் தாழ்வான இடங்களில் உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.*

*குடியுருப்புகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தவித்து வருகின்றனர்.*

*#பாலத்தை சூழ்ந்த வெள்ளம்*

*கனமழை காரணமாக சென்னை குரோம்பேட்டை பள்ளிகரணை பாலத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.*

*பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.*

*சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள பாலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக