வெள்ளக்கார துரை சாமி அம்மைசிக் கோயி லில் மூக்கன் '' துரை சாமியாக ''
---------------------------------------------------
எடுடா அந்த வல்லயக் கம்பு ,, கொண்டா காளப் பந்தம் ,,,மாட்டுடா அரக்கச்சா தொப்பிய ... ம்ம்ம் ...ஸ்டார்ட் மியூசிக் ....இல்ல இல்ல , - அடிடா உறுமி ,தப்புக்காரன் எங்க... என்று வீராப்புடன் குதித்து ஆடும் சொள் ள முத்து சாமிய ..அதுதான் வருஷத்தில் ஒருநாள் தரிசனம் தரும் நம்ம '' சுடலை மாடசாமி ''பார்த்திருக்கிறோம் .
டாய் ,, கோட்டு சூட்டு மாட்டு . தொப்பி வைடா ,,கால்ல ஷூ போடு ,,எங்கடா எனக்கு சிகரெட்டு ..பத்த வை ,, சாரையப் பாட்டில் லெப்ட் ல ..எஸ் எஸ் ..போடுங்கடா என்று ஆரம்பித்து ---ப்ள டி பூல் ...ஏ பீ சீ டி எங்கப்பன் தாடி ஓ பீ சீடி உங்கப்பன் தாடி என்று தமிலிங்கீசில் பொளந்து கட்டி குறி சொல்லி '' இந்த வ ருஷம் உன் பயிர்களை நான் கப்பாத் துவேண்டா ,,அடுத்த வருஷம் அஞ்சி பாட்டில் பிராந்தி தரணும் ,,என்று கண்டிசனோடு ,பேச்சிப் பாறைக்கு மலையேறி போகும் சாமியை அறிந் ததுண்டா .;
வாருங்கள் , அடைக்கலம் அம்மாள் காவல் காக்கும் அம்மசிக் கோவில் .போவோம்.
கலந்தபனையில் இருந்து கிழக்கே போனால் குறுக்கே போகும் ரயில் பாதையை தாண்டினால் ரோட்டின் வலதுபுறம் இருக்கும் குடியிருப்பு தான் தெற்கு வள்ளியுரின் ஒரு பாகமான '' அம்மசிக் கோயில் ''.நேரே நடந்து ஊரின் கீழ கோடிக்கு வந்தால் கலைந்துபோன செங்கல் சூளை ஓன்று இருக்கும் . உற்றுப் பார்த்தால் உடைந்துபோன தெய்வத்தின் பீடங்கள் சில தெரியும் .நாம் தேடும் இடம் இதுதான் ; ,, மூக்கன் துரை சாமிக் கோயில் , ; வெள்ளக் காரன க்கு விவசாயிகள் அமைத்த திறந்தவெ ழி கோயில் .
யார் இந்த துரை ? இங்கே எதுக்கு கோயில் ?
ஹம்ப்ரி அலெக்சாண்டர் மின்சின் , 1895 இல் மதுரை நகரில் சுகாதாரப் பொறியாளராய் வேலை செய்த திறமையான இளம் வெள்ளைக் காரார் . திருவிதாங்கூர் மகாராஜா மூலம் திருநாள் கேரளாவை ஆண்டபோது அப்போது அவர்வசம் இருந்த நாஞ்சில் நாட்டுக்கு குடிக்கவும் பயிரிடவும் தண்ணீர் போதததால் , மேற்கு தொடர்ச்சி மலையின் கோதைஆறு ,கல்லாறு சித்தார் மற்றும் குட்டி ஆறுகளின் ,நீரை அணைகட்டி உபயோகம் செய்ய முடிவெடுத்தார் .ஆங்கிலயரிடம் உதவி கேட்டபோது மின்சின் துரையின் வசம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது .அணைகட்ட தேர்ந்தெடுத்த இடம் பேச்சிப் பாறை . அடர்ந்த காட்டுப் பகுதி .காணிகள் எனும் காட்டு வாசிகள் வாழ்ந்த இடம் .அவர்கள் தெய்வம் பேச்சி அம்மனுக்கு கோயில் அமைத்து குடிஇருந்த மலை தான் பேச்சிப் பாறை . கொடுக்க மறுத்தார்கள் காணிகள் ,, மலையாள மகாராஜாவின் நெருக்குதல் ,ஆங்கில சிப்பாய்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அவர்களின் எதிர்ப்பு அடக்கப் பட்டது .துரை மின்சின் மலை மக்களிடம் பரிவுகாட்டி , பால் பொடி , ரொட்டி ,கோதுமை மற்றும் மருந்துகள் உடைகள் கொடுத்து , அவர்களின் ஆதரவைப் பெற்றார் . அது அவருக்கு வேண்டியதாய் இருந்தது ;; ,, அணைகட்ட வேலை ஆட்கள் ,...அணை கட்டும் இடத்தில் குடிஇருப்புகள் அமைத்து அதில் புலம் பெயர்ந்தோரை அமர்த்தி ,தானும் அங்கே கேம்ப் அடித்து 1897 இல் வேலையை தொடங்கினார் .கடினமான உழைப்பும் .கொசுக்கடியால் வந்த நோய்களும் வேலைசெய்வோரை பாதித்தது .ஆட்கள் குறைந்தனர் .மலை வாழ் மக்கள் போதவில்லை .பக்கத்தில் ஆட்கள் நிறைந்த பகுதி பணகுடி .ஆனால் அது நெல்லை கலெக்டர் வசம் உள்ள பண்டிநாடு .பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப் பட்டது ; தாமாக உடன்படும் பணடிக் காரர் களை அழைத்து செல்லலாம் ; எல்லா வசதிகளும் மூலம் திருநாள் செய்து தரவேண்டும் .வறுமையில் இருந்த வள்ளியூர் காரர்களும் கடுக்கரை மலை தாண்டி போய் வேலையில் சேர்ந்தார்கள் .கடுமையான சூழ்நிலையிலும் மின்சின் துரையின் அன்பும் ஆதரவும் அவர்களை கட்டிப் போட்டது . அணையும் 1906 இல் கட்டி முடிக்கப் பட்டது .
கைமாறாக அணைக்கட்டின் ஒரு பகுதியில் பேச்சி அம்மன் கோயில் கட்ட உதவினார் துரை .மின்சின் என்பதை இவர்கள் இதமாக ''மூக்கன் துரை ''என்று அழைத்து வந்தனர்
தான் கட்டிய அணையை பிரிய மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டார் மூக்கன் துரை .
வேலைக்குப் போன மக்களும் கூட ..
1913 இல் மலேரியா நோயினால் மாண்டு போனார் துரைசாமி '', ஹம்பிரி அலெக்ஸாண்டர் மின்சின் ''என்கிற மூக்கன் துரை .
கூட குடிஇருந்த பழங்குடியினர் அவருக்கு அங்கு அணைக்கட்டு பக்கத்தில் ..பேச்சி அம்மன் கோயில் அருகே அவரின் பூத உடலை புதைத்து சமாதியும் கட்டினார்கள் .
அன்றில் இருந்து சாமியானா ர் ''மூக்கன் ''
அணை கட்ட போன என் அம்ம ச்சி கோயில் பெரியப்பா சின்ன பெருமாளும் , மற்றும் உறவினர்களும் ,கடுக்கரை தொண்டு தாண்டி திரும்பி வந்தனர் ஊருக்கு .
ஏற்கனவே தாங்கள் வணங்கி வந்த பேச்சியம்மன் உடனுறை சுடலை மாட சாமி கோவிலில் கூடுதல் பீடம் ஓன்று போட்டு கொடை கொடுத்தார்கள் .அடைக்கல அக்காவின் அப்பா --என்பெரியப்பா போட்ட ஆட்டத்தை என் பத்து வயசில் பார்த்தேன் .
முல்லைப் பெரியார் கட்டிய பென்னி குக் , மதுரையின் எல்லா விவசாயிகளின் வீடுகளிலும் படமாக சிரிக்கிறார் .
பேச்சி ஆற்றின் தண்ணீர் நம் ஊர் பக்கம் வரேவே இல்லை .
தோண்டிய சின்ன ராதாபுரம் கால்வாயும் வருஷம் முழுவதும் காற்று வீசுகிறது .
மழை தண்ணீர் இல்லை என்று பொறுமிக் கொண்டு இருக்கும் ஊர் மக்கள் இந்த துரை சாமிக்கு கொஞ்சம் தாராளம் டாஸ்மாக் தண்ணீ ஊட்டி கொடை கொடுங்களேன் .
பெரியப்பா வழியில் சாமி ஆட என் அண்ணன் வழி ஆண்கள் இல்லை .
உறுமி மேளம் போட்டால் தம்பி முருகன் மந்திரம் மேல் மூக்கன் துரை வந்தாலும் வரலாம் .
ஸ்டார்ட் மியூசிக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக