ஞாயிறு, 15 அக்டோபர், 2017

Mathi News முக்கிய செய்திகள்@15/10/17



Mathi News முக்கிய செய்திகள்@15/10/17

அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார், வேட்பாளரை சசிகலா முடிவு செய்வார் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டிடிவி தினகரன் முட்டுக்கட்டையை முறியடிப்போம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிஉள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் நயவஞ்சகத்தின் மறு உருவம் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னையில் ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு அபராதம்

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வேலூர்: பாலாற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி

டிடிவி தினகரன் ஒரு ஏமாற்று பேர்வழி என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாங்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாகர்கோவிலில் அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்

கட்சி விரும்பினால் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்: மதுசூதனன்

கூட்டு முயற்சியில் ஆட்சி நடக்கிறது: கே.பி.முனுசாமி

கேளிக்கை வரி குறைப்பு: முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன விஜய்

பஞ்சாப்: லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்., அபார வெற்றி

கம்போடியாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை கொண்டு வரப்பட்ட ரவுடி  ஸ்ரீதரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம்

தமிழ்நாட்டில் 6 மாதத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை - மத்திய மந்திரி அஸ்வினிகுமார்

மகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால், பாண்டிச்சேரியை சேர்ந்த் 5 குழந்தைகளின் பெற்றோர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஜிஎஸ்டிக்கான மக்களின் ஆதரவு குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பெங்களூருவில் 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை, ஒரேநாளில் 16.15 செ.மீட்டர் கொட்டியது

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வலிமையாகி உள்ளது ராஜ்நாத் சிங்

கேரளாவில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி, காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது

பரிதாபாத்  மாட்டிறைச்சியை கடத்தியதாக் ஆட்டோவில் சென்றவர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மத்தியில், 1997 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு காங்., ஆதரவு வாபஸ் பெறப்பட்டதற்கு, அப்போதைய காங்., தலைவர் சீதாராம் கேசரிக்கு பிரதமர் பதவி மீது இருந்த ஆசையும் காரணம் என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

கேரளாவில் தங்கி பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக பால சபாக்களை உருவாக்கி முதல்வர் பினராயி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

ஹபீஸ் சயீத் மற்றும் இவரது குழுவான ஜமாத் உத் தவா (ஜேயுடி) மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கைகழுவி, வாபஸ் பெற்றது.

ஹபீஸ் சயீத் மீதான நிலைப்பாட்டில் மாற்றம்: வீட்டுக்காவலை விலக்க பாக். அரசு முடிவு

சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு

சீனாவை நெருங்கி வரும் கானூன் புயல்: மணிக்கு 114 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

சிரியா: ரக்கா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் - பலரை மனித கேடயங்களாக பிடித்து சென்றனர்

அமெரிக்கா: தீப்பற்றி எரியும் காரில் இந்திய வம்சாவளி பெண்ணை கருகவிட்டு டிரைவர் தப்பியோட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக