வெள்ளி, 27 அக்டோபர், 2017

MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 27/10/17 !

MATHI NEWS இன்றைய  பரபரப்பு  செய்திகள் 27/10/17 !

ஜெயலலிதா மரணம் பற்றி தெரிந்தோர் தகவல்களை உறுதிமொழிப் பத்திரவடிவில் நவ.22 க்குள் நேரடியாக தெரிவிக்கலாம் : ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்இருக்கை அமைவது உறுதி இருக்கைக்கு தேவையான ரூ.33கோடியில் அரசு சார்பில் ரூ.9.75கோடி செலுத்தப்பட்டது - தமிழக முதல்வர்.

தவறான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதி டிசம்பர் இறுதிக்குள் அறிவிக்கப்படும் -உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்.

ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை தயாரிக்க அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் 10 நிமிடம் வரை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.

உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்க தடை நீடிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் நவம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகள் சங்க கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு, சட்டப்பேரவை தொடர்பான 3 வழக்குகள் மீதான விசாரணை நவ.2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

நடிகர் கமல் மீது வழக்குப்பதியலாமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல்துறை ஆலோசனை.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், பொருட்களை வழங்கலாம் - மத்திய அரசு சுற்றறிக்கை.

காமராஜர் துறைமுகம் விரிவாக்கம் என்ற பெயரில் 1,000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலை நடக்கிறது - நடிகர் கமல்ஹாசன்.

தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கான தங்க கவசம் மதுரை ஆட்சியரிடம் ஒப்படைப்பு.

ஜெ. கைரேகை குறித்த திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் மருத்துவர் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்.

எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க வாய்ப்பு : நடிகர் கமல்ஹாசன்.

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசால் டெங்கு காய்ச்சல் பலி நாள்தோறும் அதிகரித்து வருகிறது : முக.ஸ்டாலின்.

துணை முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்க கோரிய வழக்கு : விசாரணைக்கு ஏற்பு.

மெர்சல் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் பங்கு குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் - நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கோரிக்கை.

2017 நவம்பர் 20 ஆம் தேதியன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த, மறுமலர்ச்சி திமுக மாநில சுயாட்சி மாநாடு ஒத்தி வைக்கப்படுகின்றது.

சமூக நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் : மனு மீது உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை.

வங்கியில் குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக முதியோர் , விதவை உதவித் தொகையில் அபராதாம் பிடிக்க தடை.

உரிய காலத்தில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் - ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய குடும்ப ஓய்வூதிய தொகை மாற்றியதற்கான அரசாணை வெளியீடு.

கூடன்குளம் இரண்டாவது அணுஉலையில் இன்னும் 15 நாளில் மின்உற்பத்தி தொடங்கும் - வளாக இயக்குநர் ஜின்னா.

ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாதது வேதனை : முக.ஸ்டாலின்.

அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தக் கோரிய வழக்கை நவ.30 க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

சென்னையில் எல் & டி நிறுவனத்தால் ரூ.186.5 கோடியில் கட்டப்பட்ட ரோந்து கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு.

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கு டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கந்து வட்டி கொடுமையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது - தமிழிசை சவுந்தரராஜன்.

கோவை : ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்த 9 வயது சிறுமி சந்தியா டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா(77) காலமானார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விஷாலின் ஆடிட்டர் ஆஜராகி விளக்கம்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியையொட்டி பாதுகாப்பிற்காக 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் கொத்தம்பட்டியை சேர்ந்த தண்டபாணி மகள் மைதிலி 9ம் வகுப்பு மாணவி காய்ச்சலுக்கு உயிரிழப்பு.

தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட ஆணை.

மர்மநபர்கள் மதுரை ஆதினம் மடத்தில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் நித்யானந்தா வாழ்க என கோஷமிட்டு சென்றது குறித்து போலீசார் விசாரணை.

வரும் 30,31 ஆம் தேதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக